தஜ்ஜால் தொடர் -பதிவு- 49
நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும்
பனூ இஸ்ராயில்கள் பாபிலோனில் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில்,நபி உஜைர்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயில்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முன்னறிவிப்பினை வழங்கினார்.
அந்த முன்னறிவிப்பின் படி பனூஇஸ்ராயில்களை மீண்டும் பொற்கால ஆட்சிக்கு அழைத்து செல்ல மீட்பர் ஒருவர் தோன்றுவார்.
அந்த மீட்பரனாவர் நபி ஈஸா(அலை) அவர்கள் தான்.
மீட்பரானவர் பனூ இஸ்ராயில்களிடம் வந்த போது அந்த மீட்பரை அவர்கள் புறக்கணித்தனர்.
அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது நபி ஈஸா(அலை) அவர்களின் அதிசய பிறப்பு தான்.
இன்றைய நவீன விஞ்ஞானமும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆணின் துணை தேவை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
நபி ஈஸா (அலை) அவர்கள் வருகை தந்த காலத்தில் பனூ இஸ்ராயில்கள் மத்தியில் இரண்டு தூதர்கள் இருந்தனர்.
1.நபி ஜக்கரியா(அலை)
2.நபி யஹ்யா(அலை)(இவர் நபி ஜக்கரியா (அலை) அவர்களின் புதல்வர்)
யஹ்யா என்ற பெயருக்கு ஒரு சிறப்பு உள்ளது.
ஆம்.அது இறைவனால் சூட்டப்பட்ட பெயர்.நபி யஹ்யா(அலை) அவர்களுக்கு பெயர் சூட்டியது அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தான்.இந்த பெயரை இவருக்கு முன் யாரும் பெற்றதில்லை என்பது தனி சிறப்பு.
நபி யஹ்யா(அலை) அவர்கள் கிறித்தவர்கள் மத்தியில் யோவான் (JHON THE BAPTIST) என்று அறியப்படுகிறார்.
இவர் பனூஇஸ்ராயில்களிடம், நபி ஈஸா(அலை) அவர்கள் தான் மீட்பரனாவர் என்று சான்றுரைத்தார்.
இவரும் இவரின் தந்தையும் பனூ இஸ்ராயில்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கினர்.தூதர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் யோவானையும் அவரின் சான்றையும் மக்கள் புறக்கணித்தனர்.
மீட்பரின் அதிசய பிறப்பை பனூ இஸ்ராயில்கள் ஏளனமாக பேசினார்.
அன்னை மர்யம் அவர்களை சொல்லக்கூடாத வார்த்தைகளால் ஏசினர்.
எந்த ஒரு குழந்தையும. பிறந்தவுடன் ஷைத்தானால் தீண்டப்படும்.அது தீண்டப்படும் காரணத்தினாலே தான் அழுகிறது.
ஆனால் அன்னை மர்யம் அவர்களும் சரி அவரின் புதல்வரான நபி ஈஸா(அலை) அவர்களும் சரி பிறந்த போது ஷைத்தானால் தீண்டப்படவில்லை.
பிறக்கும் போதே தூதராக பிறந்த குழந்தை ஒன்றே ஒன்று தான்.அந்த குழந்தை நபி ஈஸா(அலை) அவர்கள் தான்.
அவர் பிறந்தவுடன் பேசினார்.தான் இறைவனுடைய தூதர் என்பதை தொட்டிலில் இருக்கும் போதே அறிவித்தார்.
இத்தனை அதிசயங்களை கண்டும் பனூ இஸ்ராயில்கள் அவரை ஏற்க மறுத்தனர்.
அவர் வளர்ந்த பிறகு ஏராளமனான அதிசயங்களை அல்லாஹ்வின் அருளால் நிகழ்த்தினார்.(பிறவி குருடை சரி செய்தல்,மண்பறவைக்கு உயிர் கொடுத்தல்,இறந்தவரை உயிர்பித்தல் போன்ற அதிசயங்கள்)
இவைகள் எதையும் பனூ இஸ்ராயில்களின் பெரும்பான்மையினோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
குறிப்பாக யூத பாதிரிகள் அவரை கடுமையாக எதிர்த்தனர்.காரணம் என்னவென்றால் தவ்ராத்தின் பெயரால் இவர்கள் மக்களை ஏமாற்றி வந்ததை மீட்பர் கண்டித்தார்.மீட்பருக்கு வழங்கப்பட்ட இன்ஜீல் வேதமானது பல சீர்திருத்தங்களை பிரச்சாரித்தது.
இதனால் கோபம் கொண்ட யூத பாதிரிகள் ரோம பேரரசரிடம் மீட்பரை பற்றி தவறான குற்றச்சாட்டுகளை அளித்தனர்.மீட்பர் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைய வேண்டும் என்று விரும்பினர்.
ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும் என விரும்பினர்?
பனூ இஸ்ராயில்களின் படி இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார்கள்.எனவே நபி ஈஸா( அலை) சிலுவையில் அறையப்பட்டால் அவர் இறைவனால் சபிக்கப்பட்டவர் என்றும் அவர் மீட்பர் இல்லை என்பதை உறுதி செய்துவிடலாம் என்றும் யூத பாதிரிகள் விரும்பினர்.
மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த யூத பாதிரிகள் தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மீட்பரை மறுத்தனர்.அதிகார பசி தான் மாபெரும் குற்றங்களுக்கு காரணமாக அமைவதை நாம் வரலாற்றில் எங்கும் காணலாம்.
இறுதியாக நபி(ஈஸா) அவர்களுக்கு ரோமானியர்கள் தண்டனை விதித்தனர்.
பிறகு என்ன நடந்தது?.
அவரகள் நபி ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை.அரை கொல்லவுமில்லை.மாறாக அவர்களுக்கு(பனூ இஸ்ராயில்களுக்கு). அவ்வாறு காட்டப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது.
அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை குர்ஆன் உறுதியாக மறுக்கிறது.
அவர் சிலுவையில் அறையப்படவில்லை.கொல்லப்படவுமில்லை.
குர்ஆனின் இந்த செய்தி,யூதர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அதிர்ச்சியாகும்.
சூரத்துல் ஆலு இம்ரானில் வசனம் 55ல் இறைவன், நபி ஈஸா(அலை) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு உரையாற்றுகிறான்.
"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
இங்கே கைப்பற்றுவேன் என்பதற்கு இணையாக வந்துள்ள அரபு வார்த்தை(மவ்த்).
ஆக இறைவன் ஈஸா நபியின் உயிரை கைப்பற்றி கொள்கிறான்.(தற்காலிகமாக)
மரணத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
தற்காலிகமானது மற்றும் நிரந்தரமானது.
நாம் ஒவ்வொருவரும் உறங்கும் போது நம் உயிரை இறைவன் கைப்பற்றுவதாகவும் பின்பு மீண்டும் செலுத்தி விடுவதாகவும் குர்ஆன் கூறுகிறது.
ஆக நமது தூக்கமும் ஒரு தற்காலிக மரணம் தான்.
நபி உஜைர்(அலை) அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மரணித்து பின்பு உயிருடன் எழுந்ததை நாம் ஹதிஸில் காண்கிறோம்.
ஆக இறைவன் நபி ஈஸா(அலை) அவர்களின் உயிரை தற்காலிமாக கைப்பற்றுகிறான்.
பிறகு இறைவன் அவனளவில் அவரை உயர்த்திக்கொள்கிறான்.(அதாவது அவர் ஏழாவது வானத்தையும் தாண்டி உயரமான இடத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்)
பிறகு உன் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நீக்கி தூய்மையாக்குவேன் என்று கூறுகிறான்.
இன்றைய தினம் பொது இடத்தில் நின்றுக்கொண்டு நபி ஈஸா(அலை) அவர்களையோ அவரது தாயாரையோ ஏசி பேசும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
பிறகு அவன் அளிக்கும் உத்தரவாதம் தான் மிக மிக மிக முக்கியமானது.
அதாவது உன்னை நம்பியோரை உன்னை நிராகரித்தோரை விட மேலான இடத்தில் வைப்பேன் கியாம நாள் வரையில்.
இது தான் பொற்கால ஆட்சியுடன் தொடர்புடையது.
தஜ்ஜாலை(போலி மீட்பன்) நம்பும் யூதர்கள் அழிக்கப்பட்டு மீட்பரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் (மீட்பரை நம்பிய பனூ இஸ்ராயில்களின்) ஆட்சி நிறுவப்படும்.
ஆக நபி ஈஸா(அலை) அவர்களை நம்பும் அவரது மக்கள், மீட்பரின் தலைமையில் ஜெருசலத்தில் உலக ஆட்சி அமைப்பார்கள்.
முகம்மது நபியின் உம்மத்துகளான நமது ஆட்சி, இமாம் மஹதி தலைமையில் மதீனாவில் இயங்கும்.
ஆம்.ஒரே மார்க்கம் இரண்டு உம்மத்துக்கள் என்ற நிலை ஏற்படும்.
சிலர் நபி ஈஸா(அலை) அவரகள் தூதராக வரமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். முகம்மது நபியின் உம்மத்தில் ஒருவராக வருவார்கள் என்று கூறுகிறார்கள் இது தவறான வாதமாகும்.
தஜ்ஜாலுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு, சொர்க்கத்தில் கிடைக்க உள்ளவைகளை பற்றி நபி ஈஸா(அலை) அவர்கள் முன்னறிவிப்பார்கள் என்று நமது இறைத்தூதர் கூறியுள்ளார்.
சொர்க்கத்தில் இன்னாருக்கு இது கிடைக்கவுள்ளது என்று நபி ஈஸா(அலை) அவர்கள் அறிவிக்கிறார் என்றால் அவருக்கு வஹீ வந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
வஹீ வருகிறது என்றால் அவர் தூதராக வந்துள்ளார் என்று தான் அர்த்தம்.
ஆக நபி ஈஸா(அலை) தூதராகத் தான் வருவார்.
தூதராக வந்து, ஜெருசலத்தில் ஆட்சி அமைத்தால் தான் நபி உஜைர்(அலை) அவர்களின் முன்னறிவிப்பும் பூர்த்தியாகும்.
மீட்பரை பற்றிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் நாளையும் காணலாம்.
பதிவு நாளை தொடரும்........
தஜ்ஜால் தொடர் -பதிவு- 48; நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் நாம் இந்த தொடரில் தொடக்கத்திலிருந்து கூறி வருவது என்னவென்றால் தஜ்ஜாலின் செயல்திட்டம் நான்கு கட்டங்களை உடையது:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/48.html?spref=tw
Post a Comment