அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படமாக சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் `U’ சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது.
மேலும் இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் கதை இது தான் என சில தகவல்கள் கசிந்துள்ளது. இதுபற்றிய விபரங்கள் சமூகவலைத்தளங்களில் விஸ்வாசம் படத்தின் கதை என உலா வந்தவண்ணம் உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர் படமென்றாலே இப்படி சில பல கதைகள் இணையத்தை ரவுண்ட் அடிப்பது வழக்கம் தானே. அதற்கு விஸ்வாசம் மட்டும் விதிவிலக்கா என்ன..? இது தான் விஸ்வாசம் படத்தின் கதை என உலா வந்து கொண்டிருக்கும் அந்த கதை இதோ,
ஆரம்பத்தில் அஜித்குமார் ஊருக்கு அடங்காத பெரிய தாதாவாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவார் என்று அவரது நண்பர்கள் ப்ளான் போட்டு அஜித் ஒரு தாதா என்பதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அஜித்தின் உண்மை முகம் தெரிந்ததும் தனது குழந்தையுடன் நயன்தாரா தனியாக சென்று வசிக்கிறார். தொடர்ந்து சொந்தமாக தொழில் செய்யும் நயன்தாராவுக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதில் இருந்து அஜித் அவரை எப்படி காப்பாற்றினார். இறுதியில் நயன்தாரா அஜித்தை ஏற்றுக்கொண்டாரா..? இருவரும் ஒன்று சேர்கிறார்களா..?” என்பது மீதிகதையாம்.
இந்த கதையும் அச்சு அசல் வீரம் படத்தின் கதையை போலவே உள்ளதால் வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ.? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Post a Comment