மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கையேட்டில் இந்தியப் பண்டிகைகளின் பட்டியலிலிருந்து ரம்ஜான் உள்ளிட்ட முஸ்லிம் பண்டிகைகள் கைவிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்சிஆர்) தயார் செய்யும் முனைப்பில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடுத்தகட்டமாக தேசிய மக்கள்தொகை பதிவேடும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு கையேட்டில், ''ஆங்கிலம் / கிரிகோரியன் மாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள்" என்ற இணைப்பு உள்ளது.
அதில் வழக்கமாகக் கொண்டாடப்பாடும் இந்தியப் பண்டிகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குரு கோபிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்த பூர்ணிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், சர்ச்சைக்குரிய வகையில் முஸ்லிம் பண்டிகைகள் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி ஆகியவை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் (என்.பிஆர்) கையேட்டில் இடம் பெறவில்லை.
இவை தவிர, அனைத்து இந்து பண்டிகைகள், பிராந்திய விழாக்கள் மற்றும் தேசிய விடுமுறைகள் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன...
Post a Comment