தஜ்ஜால் தொடர்.
இஸ்ராயில் மக்களும் (யூதர்கள்) ஜெருசலமும்
எகிப்து நாட்டில் இஸ்ராயில் மக்கள் பிர்அவ்னால் கொடுமை செய்யப்பட்டதும் நபி மூஸா(அலை) அவர்கள் தலைமையில் அவர்கள் தப்பி சென்றதும் செல்லும் வழியில் செங்கடலை இறைவனின் அற்புதத்தால் மூஸா நபி பிளந்து முன்னேறியதும் பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.
இஸ்ராயில் மக்கள் புனித நகரமான ஜெருசலத்திற்கு அருகில் கரையேறுகிறார்கள்.ஜெருசலத்திற்
தடை காலத்திற்கு பின் இஸ்ராயில்கள் புனித நகருக்குள் செல்ல(போரிட) முடிவு செய்து அன்றைய இறை தூதரிடம்(பெயர் தெரியவில்லை) தங்களுக்கு மன்னரை நியமிக்க கோரினர்.அந்த தூதர் தாலுத் என்பவரை மன்னராக நியமித்தார்.இந்த தாலுத் என்பவரின் படையில் ஒரு சாதாரண வீரராக இருந்தவர்தான் நபி தாவூத் (அலை) அவர்கள்..அப்போது அவர் இறை தூதரும் இல்லை.
போரில் தாவூத் தீயவர்களின் தலைவன் ஜாலுத்தை கொன்றார்(பைபிளில் David and Goliath யுத்தம் விரிவாக இருக்கும்) புனித நகரம், இஸ்ராயில் மக்கள் கைகளில் வந்தது.
நாளடைவில் தாவூத் இறைதூதராகவும் பின் ஜெருசலத்திலன்(முதல் இஸ்லாமிய கிலாபத்தின்) கலீபாவாகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார்..
இவருக்கு பின் இவரின் மகன் நபி சுலைமான் இறைதூதராகவும் கலீபாவாகவும் தொடர்ந்தார்.
உலக வல்லரசாக ஜெருசலத்தின் உச்சமும் பின் அதன் வீழ்ச்சியும்
நபி தாவூத் (அலை) அவர்களுக்குப்பின் அவரின் மகன் நபி சுலைமான்(அலை) அவர்கள் புனித நகரத்தின் ஆட்சியாளரானார். இவருடைய காலத்தில் இஸ்ராயில் அரசு படை பலத்திலும் செல்வ வளத்திலும் மனித வளத்திலும் உலகின் முதன்மை அரசாக விளங்கியது.
மேலும் நபி சுலைமான் அவர்களுக்கு ஜின்கள்,பறவைகள், காற்று ஆகியவற்றின் மீதும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அறிவும் ஆற்றலும் கொண்ட அரசர் வளமான ஆட்சி இவற்றின் காரணமாக இஸ்ராயில் பேரரசு அன்றைய தினத்தில் உலக பேரரசாக எழுச்சி பெற்றது.ஜெருசலம் நகரில் அல்- அஃஸா(பைத்துல் முகத்தஸ்) பள்ளிவாசலும் கட்டப்பெற்றது.
உச்சம் தொட்ட பின் அடுத்தது வீழ்ச்சி என்பது தான் வரலாற்றின் அடிப்படை.
நபி சுலைமான் அவர்களுக்கு பின் இஸ்ராயில் மக்கள் இறை சட்டத்தை தங்கள் கைகளால் திருத்தினர் அதன் விளைவாக இறைவனின் தண்டனையை பெற்றனர்.
பாபிலோனிய பேரரசர் நெபுகட் நேசர் ஜெருசலத்தின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார்.பல இஸ்ராயில் மக்கள் கொல்லப்பட்டனர். பள்ளிவாசலும் தரைமட்டமாக்கப்பட்டது.
உயிர் பிழைத்தவர்கள் பாபிலோனியாவிற்கு (ஈராக்) அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். கொடும் சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர்.
மஸீஃ(Messiah) (நபி ஈஸா அலை) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பும் இஸ்ராயில்கள் ஜெருசலம் திரும்புதலும்
பாபிலோனியாவில் அடிமைகளாக பெருங்கொடுமைகளை இஸ்ராயில்கள் அனுபவிக்கையில் தாங்கள் இறைசட்டத்தை திருத்திய மாபெரும் குற்றச்செயலுக்கு வருந்தி இறைவனிடம் தவ்பா செய்யலானார்கள். இதன் விளைவாக இறைவன் ஒரு நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தான்.
இஸ்ராயில் மக்களுக்கான அப்போதைய தூதர் நபி உஜைர்(அலை) அவர்களின் வாயிலாக இறைவன் அம்மக்களுக்கு ஒரு நற்செய்தியை முன்னறிவிப்பாக அறிவிக்கிறான். அந்த செய்தி என்னவென்றால் மீண்டும் இஸ்ராயிலின் மக்களை பொற்கால ஆட்சிக்கு அழைத்து செல்லும் ஒரு தூதர்(மீட்பர்)
அவர்களிடம் வருவார் அவர் சுலைமான் நபி அவர்களின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவார் என்பதாகும்.
அந்த மீட்பர் யார்?-நபி ஈஸா (அலை) அவர்கள்
இந்த நற்செய்தி அடிமைகளாக இருந்த இஸ்ராயில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இந்நிலையில் தான் பாபிலோனியாவின் மீது பெர்சிய மன்னர் Cyrus the great தாக்குதல் தொடுக்கிறார்.
யார் இந்த Cyrus?-இவர்தான் குர்ஆனில் குறிப்பிடப்படும் துல்கரனைன் மன்னர்.இவர்தான் யஃஜூஜ் மஃஜூஜை சிறை பிடித்தவர்.
பாபிலோனியாவை வென்ற துல்கரனைன் இஸ்ராயில் மக்களை மீண்டும் ஜெருசலத்தில் குடியேற அனுமதிக்கிறார் மேலும் அல்-அஃஸா பள்ளியை இரண்டாம் முறையாக (second temple)கட்டுவதற்கு உதவி புரிகிறார்
இஸ்ராயில்கள் ஜெருசலத்தில் வாழ்ந்தாலும் முதலில் பெர்சியர்களுக்கும் பிறகு ரோமானியர்களுக்கும் கட்டுபட்டு வாழ்ந்தார்கள்.
பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவும் மற்றவரின் அதிகாரத்தின் கீழும் வாழ்ந்த இஸ்ராயில் மக்கள் விடுதலைக்கும் அதை பெற்று தரும் மீட்பரான இறை தூதருக்காகவும் காத்திருந்தனர்.
மீட்பரின் வருகையும் இஸ்ராயில்களின் புறக்கணிப்பும்.
மிக நீண்ட காலமாக இஸ்ராயில் மக்கள் எதிர்பார்த்த மீட்பர் அவர்களிடம் வந்த போது அம்மக்கள் மீட்பரை புறக்கணித்தனர்.
காரணம் மீட்பரின் (நபி ஈஸா அலை அவர்களின்) அதிசய பிறப்பை அவர்கள் அசிங்கமாகவும் அவமானமாகவும் கருதினர்.மேலும் மீட்பரின் தாய் மீதும் கேவலமான பழியை சுமத்தினர்.
பிறக்கும் போதே தூதராக பிறந்தும் பிறந்த குழந்தையாக இருந்த போதே பேசிய போதும் அதன் பின்னர் பல அதிசயங்களை செய்த பின்னரும் அவரை மக்கள் ஏற்கவில்லை.
ஈஸா நபியின் சம காலத்தில் வாழ்ந்த யஹ்யா நபி சான்றளித்தும் பெரும்பாலோர் மீட்பரை ஏற்க மறுத்தனர்.
ஈஸா நபியின் மார்க்கம் சார்ந்த நடவடிக்கைகள் அங்கு வாழ்ந்த யூத பாதிரிகளுக்கு எதிராக இருந்ததால் மீட்பரை அவர்கள் வெறுத்ததுடன் அவரை தீர்த்திடவும் முடிவு செய்தனர்.
ஈஸா நபியை நம்பிய குறைவான மக்களே பிற்காலத்தில் நஸ்ரானிகளாகவும்(Christian) நம்பாதவர்கள் யகூதிகளாகவும்(Jews)அறியப்பட்
மீட்பரின் மீது வெறுப்பு கொண்ட யூத பாதிரிகள் ரோமானிய அரசிடம் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மீட்பர் ஈடுபடுவதாகவும் பண்டைய மதங்களை நாசம் செய்வதாகவும் புகாரளித்தனர்.
புகார் ஏற்கப்பட்டு ஈஸா நபிக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது போன்ற காட்சி அவர்களுக்கு காட்டப்பட யூதர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.
தங்களின் நம்பிக்கை சரியானது.இவர் மீட்பரில்லை.மீட்பராக இருந்திருந்தால் சுலைமான் நபியின் பொற்கால ஆட்சியை இவர் வழங்கியிருக்க வேண்டுமே என்று கூறினர்
பொற்கால ஆட்சியை கொண்டு வர முடியாமல் ஈஸா மரணித்ததால்(மரணித்ததாக யூதர்கள் நம்புகின்றனர்)அவர் மீட்பர் இல்லை என்பதில் அவர்களுடைய நம்பிக்கை மேலும் வலுவானது.
உண்மையான மீட்பரை புறக்கணித்த அவர்கள் இன்றளவும்(10.08.2020) மடத்தனமாக மீட்பரை எதிர்நோக்குகின்றனர்.
அந்த முட்டாள்தனத்திற்காக யூதர்களுக்கு கிடைக்க உள்ள பரிசு தான் -தஜ்ஜால்........
இஸ்ராயில் மக்களின் குற்றங்களும் பெற்ற இறை தண்டனைகளும் சுருக்கமாக
நபி மூஸா (அலை) அவர்களின் கட்டளையை புறக்கணித்ததால் 40 ஆண்டுகள் நாடோடிகளாக திரிந்தனர்.
சுலைமான் நபிக்கு பின் இறை சட்டத்தை திருத்தியதால் பாபிலோனிய படையால் அழிக்கப்பட்டு புனித நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இம்முறை 100 ஆண்டுகளுக்கு புனித நகரம் தடை செய்யப்பட்டது
மீட்பரான ஈஸா நபிக்கு எதிராக அவர்கள் செய்த மாபெரும் குற்றத்திற்கு மாபெரும் இறை தண்டனை வழங்கப்பட்டது. ரோமானிய படைகளால் துவம்சம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் இம்முறை புனித நகரம் இஸ்ராயில் களுக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.
இத்தடை நீங்க இஸ்ராயில்களுக்கு இரு வழிகள் உண்டு
1.நீதமான இறுதி தூதரான நபி முகம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டு பாவங்களை கழுவி புனித நகர் திரும்புதல்
2.தஜ்ஜாலின் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் துணையுடன் தங்களின் தீமைகளுடனேயே மீண்டும் புனித நகருக்கு திரும்புதல்.
இஸ்ராயில்கள் இரண்டாவது வழியை தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்
தீமைகளுடன் திரும்பினால்(திரும்பியுள்ளதால்
முதல்முறை பாபிலோனிய படையால் அழிக்கப்பட்டனர்
இரண்டாம் முறை ரோமானிய படையால்
மூன்றாம் முறை குரசான் பகுதி(வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கான்) முஸ்லீம்கள் படையால் அழிக்கப்பட உள்ளனர்.
அடுத்த பதிவில் தஜ்ஜாலின் மிக முக்கிய பணிகளையும் லட்சியங்களையும் காணலாம்.
தஜ்ஜால் தொடர்-பதிவு-2 &3, தஜ்ஜாலின் பணிகள், இன்றளவும் ஒரு இறைதூதருக்காக, மீட்பருக்காக காத்திருக்கும் இஸ்ராயில் மக்கள். ஹதிஸின் குறியீட்டு சொற்களும் விளக்கமும்....:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/2.html
Post a Comment