தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டு இருப்பவர் அஜித் குமார். நம்ம தல தமிழில் பல சூப்பர் டூப்பர் ஹிட் தமிழில் கொடுத்து உள்ளார். இந்நிலையில் அஜீத் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மீண்டும் திரையரங்கிற்கு வர உள்ளது என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர உற்சாகத்திலும், குசியிலும் கொண்டாடி வருகிறார்கள். 1996 ஆம் ஆண்டு வி.சி. குகநாதன் இயக்கிய படம் தான் “மைனர் மாப்பிள்ளை”. இந்த படத்தில் அஜித் குமார், ரஞ்சித், வடிவேலு, ஸ்ரீவித்யா, விவேக், அஜய் ரத்தினம், ஒய்.ஜி. மகேந்திரன், கீர்த்தனா, சுபாஸ்ரீ உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இருந்தது.
மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் K. ராகவா ஆவார். இதனை தொடர்ந்து பணக்கார வீட்டில் வடிவேலு தன் மகனுக்கு பொண்ணு கேட்டு வருகிறார். பின் ஏழைக்கெல்லாம் பொண்ணு தர முடியாது என்று ஸ்ரீவித்யா மறுத்து விடுகிறார். அதற்காக வடிவேல் அவர்கள் அஜித்தையும், ரஞ்சித் அனுப்பி அந்த வீட்டில் உள்ள பெண்ணை காதலிக்க சொல்கிறார். ஆகவே வடிவேலு தான் விட்ட சவாலில் ஜெய்கிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் சுவாரசியமே. மேலும், படத்தில் ஐந்து பாடல்கள், ஐந்து சண்டை காட்சிகள் என வேற லெவல் இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படமாக இருந்தது
இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பின் இந்த படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்க போவதாக தகவல் வந்து உள்ளது. அதோடு இப்படத்தின் கதை, திரைக்கதை, உள்ளது. எழுதிய வி.சி குகநாதன் அவர்கள் டைரக்ட் செய்திருந்தார். மேலும், இவரே படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார் என்றும் தெரிய வந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த டிஜிட்டல் மைனர் மாப்பிள்ளை படம் கூடிய விரைவில் திரை அரங்கிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறி உள்ளார்கள்..இதனைத் தொடர்ந்து நம்ம தல அஜித் அவர்கள் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு தற்போது வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு வருகிறார்.
Post a Comment