டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.
ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் இதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி அழுத்தம் திருத்தமாக தனது எதிர்ப்பை காட்டி இருக்கிறது . ஏற்கனவே இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும்.
இந்த மசோதாவை ஆதரித்து அவையில் வாக்களித்த அசோம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளது. இன்னும் பல பொது நல வழக்குகள் இதில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் திமுகவும் வழக்கு தொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை ஆதரித்து அவையில் வாக்களித்த அசோம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளது. இன்னும் பல பொது நல வழக்குகள் இதில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் திமுகவும் வழக்கு தொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment