தஜ்ஜால் தொடர் - பதிவு- 11
தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் வெளியேற்றமும் அவர்களின் தாக்குதலும்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளியேறியவுடன் துல்கர்னைன் மன்னரால் காப்பாற்றப்பட்ட மக்களை (ஜார்ஜியா மற்றும் அர்மேனியா மக்களை)ஆயிரம் ஆண்டு கால பகை கொண்டு தாக்கினார்கள்.தாக்குதலுக்கு உட்பட்ட இப்பகுதியானது சில காலங்கள் தன்னாட்சி பகுதியாகவும் பெரும்பான்மையான காலம் சாசனைட் பெர்சிய பேரரசின் கீழும் இருந்தது.
அன்றைய காலத்தில் பைசாந்திய கிறித்தவ பேரரசும் சாசனைட் பெர்சிய அரசும் உலகின் மாபெரும் இரு வல்லரசுகளாக விளங்கியதுடன் ஒன்றோடொன்று பகைமையும் கொண்டிருந்தன.இந்த காலத்தில் இஸ்லாமிய பேரரசு அதன் எழுச்சியின் தொடக்கத்தில் இருந்தது.
சாசனைட் பெர்சியாவின் கீழிருந்த பகுதிகளை காஜாரியாக்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) தாக்கியதால் இந்த காஜார்களுடன் பைசாந்திய அரசு நட்பு பாராட்டியது.
இந்த சூழலில் இஸ்லாமிய அரசு பெரும் வேகத்தில் வளர்ந்த்து குறுகிய காலத்தில் மாபெரும் வல்லரசுகளான பைசாந்திய அரசையும் சாசனைட் பெர்சியாவையும் அடுத்தடுத்து தோற்கடித்தது.பெர்சியாவை முழுமையாக கைப்பற்றிய இஸ்லாம் பைசாந்நிய அரசிடமிருந்து பாலஸதீன பகுதியையும் கைப்பற்றியது.
உலகில் மாபெரும் வல்லரசாக உருவெடுத்த இஸ்லாம் சாசனைட் பெர்சியாவை தொடர்ந்து அதன் எல்லையை வடக்கு நோக்கி விரிவுபடுத்த தொடங்கியது.
வடக்கு பகுதி என்பது காஜாரியாக்களின் பகுதியாகும்.இப்பகுதியை இஸ்லாமிய அரசு தாக்கியதால் முதல் அரபு-காஜார் யுத்தம் தொடங்கியது.போரின் துவக்கத்தில் ஜார்ஜிய மக்களை காஜார்களின்(யஃஜூஜ் மஃஜூஜ்) கொடுமைகளிலிருந்து காப்பாற்றிய இஸ்லாமிய அரசு காஜார்களின் தலைநகரான பாலன்ஜாரையும் முற்றுகையிட்டது.மிக வேகமாக தன் தலைநகரை ஆதில் என்ற நகருக்கு காஜார்கள் மாற்றி அடங்கி வாழ்ந்தனர்.
அரபுகளின் இந்த வெற்றி நீடிக்கவில்லை. அலி(ரலி) காலத்திற்கு பின்பும் முஆவியா காலத்திற்கு பின்பும் ஏற்பட்ட உள்நாட்டு கலகங்களால் வடக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு கவனம் செலுத்த முடியாத காரணத்தால் காஜார்கள் இழந்த பகுதிகளை மீண்டும் வென்றதுடன் அரபு முகாம்களை அழித்தொழித்தனர்.
பின்பு அறுபது ஆண்டு காலம் வரையில் அரபுகளுக்கும் காஜார்களுக்கும் இடையே போர் ஏற்படவில்லை.இக்காலத்தில் காஜார்கள் வடக்கு நோக்கி எல்லையை(ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பா) மேலும் விரிவுபடுத்தினர்.
இதன் பின்பு இரண்டாம் காஜார் அரபு யுத்தம் ஏற்பட்டது.இப்போரில் காஜார்கள் மரண அடி வாங்கினர்.அரபு தளபதி ஒருவர் மன்னர் துல்கர்னைன் எப்பகுதியில் தடுப்பை ஏற்படுத்தி இருந்தாரோ அந்த அபாயமான பகுதியில் பெரும் துணிச்சலோடு புகுந்து தாக்குதல் நடத்தினார்.மாபெரும் தாக்குதலால் நிலைகுலைந்த காஜார்கள் அரபுகளுடன் ஒப்பந்தம் செய்து போரை முடித்துக்கொண்டனர்.
அந்த ஒப்பந்த்த்தின் படி நிரந்தரமாக ஜார்ஜியாவும் அர்மேனியாவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. காஜார்களின் தெற்கு நோக்கிய தாக்குதலுக்கு முடிவும் கட்டப்பட்டது.
ஜார்ஜிய மற்றும் அர்மேனிய மக்களின் ஆதரவுடனும் இஸ்லாம் அங்கு ஆட்சியை நிறுவியது.
போரின் முடிவில் காஜார்கள் முதலில் துல்கர்னைனால் கட்டப்பட்ட தடுப்பு சுவர் மூலம் எப்பகுதியில் தடுக்கப்பட்டனரோ அதே பகுதியில் மீண்டும் அரபு படைகளால் தடுக்கப்பட்டனர்.
இதன் பிறகு நடந்த வினோதத்தை காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்(துருக்கிய காஜார்கள்) யூத மத தழுவல்.
அரபுகளுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு பின் காஜார்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்த மற்ற ஐரோப்பிய நாடோடிகளிடம் போர் புரிந்தனர்
அதே சமயம் பைசாந்திய கிழக்கு கிறித்தவ பேரரசுடனும் காஜாரியாக்கள் நட்பு பாராட்டினர்.இரண்டு மாபெரும் வல்லரசுகளில் ஒன்றொடுடன்(பைசாந்தியம்) நட்புறவு. இன்னொரு அரசுடன்(இஸ்லாம்) அமைதி உடன்படிக்கை.
இந்த அருமையான சூழலை பயன்படுத்தி வடக்கு நோக்கி எல்லையை விரிவுபடுத்தினர்.நாளடைவில் மிக முக்கிய வணிகப்பாதையான பட்டுப்பாதையின் முக்கிய பகுதிகள் துருக்கிய காஜாரியாக்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) ஆட்சியின் கீழ் வந்தது.இதன் மூலம் தன் எல்லையில்(பட்டு பாதையில்) நுழையும் பொருட்களின் மீது அதிகளவு சுங்க வரி வதித்து அதிக அளவில் பொருள் ஈட்டினர்.
பைசாந்திய மற்றும் இஸ்லாமிய பேரரசுகளுக்கு இணையாக தங்கள் அரசை வளர்த்தெடுத்து கொண்டிருந்தனர்.
பல நாட்டு வணிகர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் காஜாரியாக்கள் பல மொழிகளை கற்றதுடன் பலதரப்பட்ட கலாச்சரத்தையும் அறியத்தொடங்கினர்.
இந்நிலையில் இரண்டு பேரரசு நிலங்களுக்கு இடையில் காஜாரியாக்களின் நிலம் இருந்ததால் இந்த இரண்டு அரசுகளின் மதங்களான இஸ்லாமும் கிறித்தவமும்,மதம் சார்ந்த அடையாளமற்ற துருக்கிய காஜாரியாக்களின் பகுதியில் ஊடுருவத்தொடங்கியது.
இஸ்லாம் மற்றும் கிறித்தவம் பரவத்தொடங்கியதை சிறிதும் விரும்பாத காஜார்களின்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்) அரசன் காஹன் பூலான் காஜாரியாக்களுக்கு மதம் சார்ந்த பொது அடையாளத்தை ஏற்படுத்த விரும்பினான்.
பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த விரும்பிய மன்னன் புதிய மதம் எதையும் ஏற்படுத்த விரும்பவில்லை.மாறாக இஸ்லாம் மற்றும் கிறித்தவத்திற்கு இணையான மதம் அவனுக்கு தேவைப்பட்டது.
இந்த சூழலில் பைசாந்திய அரசின் இன அழிப்புக்கு ஆளாகி காஜாரியாவில் குடியேறிய பனூ இஸ்ராயில்கள் வாயிலாக யூத மத தொடர்பு அவனுக்கு கிடைத்தது.
ஏறக்குறைய ஓரிறை,மறுமை போன்று பல விஷயங்கள் பேரரசு மதங்களுடன் ஒத்திருந்ததாலும் அந்த மதங்களை விட பழமையாகவும் இருந்ததாலும் காஜார் மன்னன் காஹன் பூலான் யூத மதம் தழுவினான்.மன்னனை தொடர்ந்து மக்களும் யூத மதம் ஏற்றனர் துருக்கிய காஜாரியா யூத அரசாக அறிவிக்கப்பட்டது.
பனூ இஸ்ராயில்களுக்கு வெளியே யூதம் பரவிய வினோத வரலாறு இது தான்.இன்று நாம் உலகில் பார்க்கும் ஐரோப்பிய யூதர்கள் வேறு யாருமில்லை அவர்கள் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான். இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிமித்துள்ளவர்களும் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான்.
காஜார் மன்னன் காஹன் பூலான் யூத மதத்தை ஏற்று கொண்டதன் காரணம் அரசியல் பின்னணியே தவிர தாவ்ராத்தின் மீதான ஈர்ப்போ யூதத்தின் மீதான ஈர்ப்போ கிடையாது.
ஒரு வேளை இஸ்லாம் மக்களிடையே பரவினால் இஸ்லாமிய அரசிடம் நாட்டை இழக்க வேண்டியோ சூழலோ அல்லது இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்பட்டோ நடக்க வேண்டிய சூழலோ மன்னன் காஹன் பூலானுக்கு ஏற்பட்டிருக்கும்.அது போல கிறித்தவம் பரவியிருந்தால் பைசாந்திய அரசிற்கு அடி பணிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.இதை தவிர்க்கவே, பொதுவான மற்றும் தனித்த அடையாளத்தை ஏற்படுத்த மன்னன் யூதம் தழுவினான்.
இந்த துருக்கிய காஜாரியாக்கள்(யஃஜூஜ் மஃஜூஜ் ) யூத மதத்தை துளியும் பின்பற்றுவதில்லை.இன்னும் சொல்லப்போனால் காஜாரிய ஆண்கள் அடிப்படை சடங்கான விருத்த சேதனம் கூட செய்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.
யஃஜூஜ் மஃஜூஜ் யூதர்களாக மாறிய(வேடமணிந்த) வரலாறு இது தான்.
நாளைய பதிவில் காஜார்களுக்கு ஏற்பட்ட மரண அடி குறித்து நாளை காணலாம்.
தஜ்ஜால் தொடர்- பதிவு- 10, தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் விடுதலை:-. https://e-funandjoyindia.blogspot.com/2020/10/10.html?spref=tw
Post a Comment