HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 20 October 2020

தஜ்ஜால் தொடர் -பதிவு-14.தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ், கூட்டத்தின் அமைப்புகள் -FREEMASON AND ILLUMINATI:-

 தஜ்ஜால் தொடர் -பதிவு-14

தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் அமைப்புகள் -FREEMASON AND ILLUMINATI
நேற்றைய பதிவில் KNIGHT TEMPLER கள் புனித நகரை கைப்பற்றியதையும் அதனை பய்படுத்தி அவர்கள் செல்வத்தை குவித்ததையும் கண்டோம்.
இவ்வாறாக KNIGHT TEMPLERS சுக போகமாக வாழ்ந்து கொண்டிருந்த போது எகிப்தில் இருந்து ஒரு மாபெரும் அச்சுறுத்தல் அவர்களுக்கு ஏற்பட்டது.
எகிப்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அய்யூபித் வம்ச இஸ்லாமிய அரசர் சலாதீன் அய்யூபி, KNIGHT TEMPLER கட்டுப்பாட்டில் இருந்த புனித நகரின் மீதும், வட ஆப்ரிக்க பகுதிகள் மீதும் தாக்குதல் தொடுத்தார்.
மிகவும் திட்டமிட்ட நேர்த்தியான சலாதீன் அவர்களின் தாக்குதலை, மேற்கு கிறித்தவ படைகளும் KNIGHT TEMPLER களும் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
சலாதீன் அவர்கள் புனித நகரை கைப்பற்றியதுடன் மேற்கு கிறித்தவ படைகளையும் Knight TEMPLER களையும் கொன்று குவித்தார்.மேலும் கிழக்கு கிறித்தவர்களை, ஜிஸ்யா பெற்றுக்கொண்டுபுனித நகரில் வாழ அனுமதித்தார்.
சலாதீன் தாக்குதலால் தோல்வி நிச்சயம் என்ற நிலை வந்த பிறகு உயிரோடு இருந்த KNIGHT TEMPLER கள் தாங்கள் குவித்திருந்த செல்வங்களுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோடினர்.
தங்கள் செல்வங்களை கொண்டு மேற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருவாய் ஈட்டிக் கொண்டிருந்தனர்.இவர்களின் வசதிக்காக, கிறித்தவம் தடை செய்த ஒன்றை , வட்டி என்னும் பாவத்தை ,மேற்கு கிறித்தவ தலைவரான போப் சட்ட பூர்வமாக்கியிருந்தார்.
இந்நிலையில் மேற்கு ஐரோப்பிய அரசர்களுக்கும் KNIGHT TEMPLER களுக்கும் இடையே பகை ஏற்படத் தொடங்கியது.மேலும் போப்புடனும் அவர்களுக்கு பிணக்கு ஏற்பட்டது.
இதனால் கோபம் கொண்ட போப் KNIGHT TEMPLER அமைப்பை தடை செய்யவும் மிக முக்கிய KNIGHT TEMPLER களுக்கு மரண தண்டனை விதிக்கும் படியும் மேற்கு ஐரோப்பிய அரசர்களுக்கு உத்தரவிட்டார்.
அரசர்களுக்கே ஆணையிடும் அளவிற்கு போப்பின் அதிகாரம் உச்சத்தில் இருந்தது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
போப்பின் அதிரடி உத்தரவால் KNIGHT TEMPLER கள் ரகசியமாக செயல்படத் தொடங்கினர்.
நூற்றாண்டு கால ரகசிய செயல்பாட்டுக்கு பின் இவர்கள் மீண்டும் ஒரு அமைப்பை தொடங்கினர்.இந்த அமைப்பின் பெயர் FREEMASONS.
இந்த Freemasons வெளிப்படையாகவே Baphomet என்ற சாத்தானை வழிபட்டனர்.மேலும் NEW WORLD ORDER என்ற கொள்கையை ஏற்படுத்தி அதை செயல்படுத்துவதை தங்கள் லட்சியமாக கருதினர்.
NEW WORLD ORDER என்பது எந்த விதமான ஒழுக்கமும் நீதியும் கட்டுப்பாடும் நேர்மையும் இல்லாத வாழக்கை முறை கொண்ட சமூகத்தை ஏற்படுத்துவது ஆகும்.இது தான் Freemasons கூட்டத்தின் கேடுகெட்ட லட்சியம்.
சுருக்கமாக கூறினால் கிழக்கு கிறித்தவம் மற்றும் இஸ்லாம் என்ற உலகளாவிய மதங்களையும் ஏனைய உள் நாட்டு மதங்களையும் தழுவிய, ஒழுக்கமான வாழ்க்கைமுறை போதிக்கப்பட்ட காலத்தில் ,RELIGIOUS WORLD ORDER இருந்த காலத்தில் ,NEW WORLD ORDER என்ற கேட்டை விதைக்க நாடிய அமைப்பு தான் Freemasonry.
இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய ஹதிஸ்:
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தில் ஒவ்வொரும் நூறு பேரை பெற்றெடுப்பார்கள்.
ஹதிஸின் விளக்கம்:
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவனும் தங்களை போலவே பல ஆயிரம் பேரை கேடுகெட்டவர்களாக மாற்றுவார்கள்.அதாவது சாதாரண மனிதர்களையும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் நகலாக மாற்றுவார்கள்.இது தான் ஹதிஸின் சரியான விளக்கம்.இதைவிட்டு தொண்ணூறு ஆண்டுகள் கர்ப்பம் தரித்து நூறு பிள்ளைகளை பெற்றெடுப்பார்கள் என்று கற்பனை செய்யக்கூடாது.
இந்த ஹதிஸை உண்மையாக்கும் பொருட்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தொடங்கிய அமைப்பு தான் Freemasons.இந்த அமைப்பு இன்றும் வீரியத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.பல கோடி மக்களையும் சீரழித்து அறிவில்லாத மக்களையும் தங்களின்(யஃஜூஜ் மஃஜூஜ்) நகலாக மாற்றியுள்ளது.
நேற்றைய பதிவில் freemasonகளின் கேடுகெட்ட கொள்கைகள் விவரிக்கப்பட்டது.
இந்த கேடு கெட்ட அமைப்புடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கல்லூரி பேராசியர் ஒருவர்,தன் தனிப்பட்ட அடையாளத்திற்காக, ஏறக்குறைய 100% freemasonகளின் கொள்கையை பிரதிபலிக்கக்கூடிய இன்னொரு அமைப்பை தொடங்கினான்.இந்த அமைப்பின் பெயர் தான் பவேரியன் இல்லுமினாட்டி.
ஒரே கொள்கைக்கு இரண்டு அமைப்புகள் எதற்கு?என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
அதற்கான பதில்:
இறைப்பணி செய்கின்றோம் என்று கூறுகின்ற ஜமாத்தார்களே தங்கள் தனிப்பட்ட நலனுக்காக,பதவிக்காக,அடையாளத்திற்காக,
தொழுகையில் விரல் நீட்டுவதற்கு ஒரு ஜமாத்,ஆட்டுவதற்கு ஒரு ஜமாத்,மடக்கி நீட்டுவதற்கு ஒரு ஜமாத் என்று ஜமாத்களை கூறு போடும் போது ஷைத்தானிய வழிப்பாட்டாளர்கள் பதவிக்காக தனி அமைப்பை தொடங்க தானே செய்வார்கள் அவ்வாறு உருவானது தான் பவேரியன் இல்லுமினாட்டி (BAVARIAN ILLUMINATTI).
இல்லுமினாட்டிகள் தனி அமைப்பாக செயல்பட்டாலும் தேவையை கருதி Freemasons உடன் இணைந்தும் செயல்படுகின்றனர்.
இலுமினாட்டிகள் Freemasons போலவே ஷைத்தானிய வழிபாடு,கேடான சடங்குகள்,மத ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை,ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.ஆனால் இல்லுமினாட்டிகளின் செயல் வீச்சு மிக அதிகமாக உள்ளது.
18ம் நூற்றாண்டு வரையில் மதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் உலக அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த காலத்தில் அரசமைப்பில் இருந்து மதத்தை நீக்குவதற்கு பெரு முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டவர்கள் தான் பவேரியன் இல்லுமினாட்டி.
அரசர்களின் தவறை மிகச் சரியாக மக்களிடம் சுட்டிக்காட்டி, மன்னனின் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கு தீர்வு,மதத்தை தூக்கி எறிவதும், மத அடிப்படையிலான சட்டங்களை புறக்கணிப்பதும், கால சூழல்களுக்கு தக்கவாறு வாழ்வியலின் அடிப்படை சட்டங்களை மனிதனே வடிவமைத்துக் கொள்வதும் தான் என்று மக்களிடையே பரப்புரை செய்தார்கள்.
புதுமை கருத்துகள் என்ற வடிவில் நாத்திகத்தையும் பரப்பினர்.தங்களின் கேடான எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள மன்னர்களின் அயோக்கியதனங்களை முழு மூச்சுடன் எதிர்த்தனர்.கேடான உள்நோக்கத்துடன் உண்மையை எடுத்துரைத்தனர்.
இவர்களின் செயல்பாடுகளுக்காக இல்லுமினாட்டி அமைப்பு தடை செய்யப்பட்டது.இருந்த போதிலும் மறைமுகமாகவும் மிக துரிதமாகவும் இல்லுமினாட்டிகள் செயல்பட்டனர்.
இந்த இல்லுமினாட்டிகள் தான் பிரெஞ்சு புரட்சியின் முதுகெலும்பாக செயல்பட்டனர் என்று சதி கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorist) ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.
மதச்சார்பற்ற அரசை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்தியதும் இந்த இல்லுமினாட்டிகள் தான்.
மதச்சார்பற்ற அரசு என்பது நல்ல ஒன்று தானே என்று தான் நமக்கு தோன்றும்.ஆனால் அது நல்ல ஒன்று அல்ல.ஏறக்குறைய ஒரே ஒரு மதம் உள்ள நாடு(அரபு நாடுகள்) அந்த மதத்தினை மட்டுமே சார்ந்த நாடாகவும் பல மதங்கள் வாழும் நாடு(நமது இந்திய நாடு) பல மதங்களின் சார்புள்ள நாடாகவும் இருப்பது தான் சிறந்தது.
இறுதி தூதரின் காலத்தில் ,அவருடைய ஆட்சியில் யூதர்களின் குற்றத்திற்காக யூதர்கள் தவ்ராத்தின் அடிப்படையில் தான் தண்டிக்கப்பட்டனர்.குர்ஆனின் அடிப்படையில் தண்டிக்கப்படவில்லை என்பதை நாம் ஹதிஸ்களில் காணலாம்.இது தான் அரசின் பல மத சார்புக்கு நல்ல உதாரணம்.
அரசமைப்பில் மதத்தை நீக்கி இல்லுமினாட்டிகள் வெற்றி பெற்றனர்.அரசமைப்பை கெடுத்துவிட்டாலே அதன் மூலமாக மக்களை எளிமையாக வழி கெடுத்துவிடலாம் என்ற இல்லுமினாட்டிகளின் எண்ணமும் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு சான்று நமது நிகழ்கால கேடுகெட்ட வாழ்வே.
Freemasons களை விட இல்லுமினாட்டிகள் சிறப்பாக செயல்பட காரணம்- இந்த அமைப்பின் உறுப்பினர்களான அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத உலக பணக்காரர்கள்,உலகளாவிய பிரபலங்கள்,முன்னணி அறிவியல் ஆய்வாளர்கள் என பல தரப்பட்ட பிரபலங்கள் தான்.
Freemasons மற்றும் இல்லுமினாட்டி அமைப்புகளில் ஷைத்தானிய வழிபாட்டாளர்கள் அனைவரும் எந்த பேதமுமின்றி இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
இல்லுமினாட்டிகளின் பொருளாதார பித்தாலாட்டங்கள்,அரசியல் அவலங்கள்,சமூக கேடுகளை நான் சொல்லி தான் தெரியவேண்டுமென்று இல்லை.சமூக வலைதளங்களில் இவர்களை பற்றிய செய்தி தினம் தினம் நமக்கு கிடைக்கிறது.இருந்த போதும் தஜ்ஜாலின் பித்னாக்கள் என்ற உட்தலைப்பில் இதைப்பற்றி விரிவாகக் காணலாம்.
நாளைய தினம் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் அரசியல் ரௌடி அமைப்பான, உலகத்திலேயே கேடு கெட்ட அமைப்பான ZIONIST ORGANIZATION பற்றி காணலாம்.


தஜ்ஜால் தொடர் பதிவு- 13, தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும் ஜெருசலமும், அவர்கள் தஜ்ஜாலை தொடர்பு கொள்ளும் விதமும்.:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/13.html?spref=tw



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com