HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 28 October 2020

தஜ்ஜால் தொடர் -பதிவு-18, தஜ்ஜாலின் பித்னாக்கள் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.

 தஜ்ஜால் தொடர் -பதிவு-18

தஜ்ஜாலின் பித்னாக்கள்
தஜ்ஜால் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளில் மிக முக்கிய ஒன்று சொத்துரிமை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் 20ஆம் நூற்றாண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது.ஆனால் இஸ்லாம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது.
இருந்த போதிலும் தஜ்ஜாலின் படைகள் இஸ்லாத்தின் சட்டத்தில் குறைக்காணுகின்றன. ஆண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்களை வழங்கும் இஸ்லாம், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அனுமதித்து பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தஜ்ஜாலின் ஒற்றைக்கண் பார்வையில் (இறை நம்பிக்கையற்ற சிந்தையை கொண்டு மேலோட்டமாக )பார்க்கும் போது இது நியாயமான ஒன்றாக தெரியும்.
ஆனால் இந்த சமூகத்தை படைத்த இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவனுடைய சட்டங்களில் பிழை ஏதும் இருக்காது என்பதில் உறுதியாக நின்று இறைவன் முடிவு செய்து விட்ட விஷயத்தில் மாற்று கருத்துக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது
தஜ்ஜாலின் அடியாட்கள் ஏற்படுத்தும் வாதம் அர்த்தமற்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சமூக இயங்குவியலில் தந்தைக்கு தேவையான உதவிகளை வழங்கும் உதவியாளனாகவும், தந்தையின் தொழிலில் பங்கெடுத்து உழைத்து பொருள் ஈட்டுவதில் பெரும் பங்கெடுப்பவனாகவும்,பெற்றோர்களை வயது முதிர்ந்த காலத்தில் பராமரிப்பவனாகவும்,பெற்றோர்கள் விரைவில் முந்தி சென்றுவிட்டால் குடும்பத்தின் பொறுப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் விளங்குவது ஆண்மகன்கள் தான்.
பெண்களை விட ஆண்களுக்கு கூடுதலான குடும்ப பொறுப்புகள் ஒதுக்கப்படும் போது அந்த பொறுப்புகளை கையாள அவனுக்கு பொருள் வசதி தேவைப்படும் எனவே தான் இறைவன் ஆண்களுக்கு ஒரு பங்கு சொத்துக்களை அதிகமாக வழங்குகிறான்.
பெற்றோர்களை பேண பெண்கள் விரும்பினாலும் பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் வீட்டில் தஞ்சம் அடைவதில்லை.இறைசட்டத்தின் படியும் சரி இயற்கையான மன உளவியல்படியும் சரி பெற்றோர்களை பேணும் பொறுப்பு ஆண்களிடமே உள்ளது என்பதை உணர வேண்டும்.
ஆண்களுக்கு அதிக பங்குகளை ஒதுக்குவதில் உள்ள நியாயத்திற்கு இங்கு வழங்கப்பட்ட விளக்கம் தவறாக கூட இருக்கலாம்.
ஆனால் பிழைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சட்டங்களில் பிழை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து சிந்தித்தால் நாம் பல சரியான விளக்கங்களை பெறலாம்.
இறைவன் பெண்களுக்கு விவகாரத்து முன்னுரிமை,மறுமணம் உள்ளிட்ட பல சலுகையை வழங்கிய போதிலும் இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
ஆண்களுக்கு, இறைவன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை அனுமதிக்கும் போது பெண்களுக்கு அது போல் ஏன் இல்லை என்ற முட்டாள்தனமான கேள்வியை முன் வைக்கின்றனர்.
அனைத்தையும் படைத்த இறைவனுக்கு ஆண்களுடைய உடலமைப்பு மற்றும் பெண்களுடைய உடலமைப்பு,இரு சாராருடைய உடல் சார்ந்த மன இயக்கம் ,மனம் சார்ந்த உடல் இயக்கம் ஆகியன பற்றி நன்கு தெரியும்.மேலும் பால்வினை நோய்கள் பரவலுக்கான ஊடகம் என்பதை பற்றி தெரிந்தவனான இறைவன் வழங்கிய சட்டத்தில் பிழை இருக்க முடியுமா?
இன்றைய தினம் கூட உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் 80 கோடி பேர் அதிகம்.
போர்கள்,விபத்துகள்,குடி பழக்கங்கள் ஆகியவற்றால் இறப்பது ஆண்களே.
ஆண் குழந்தை பிறப்பு வீதம் பெண் குழந்தை பிறப்பு வீதத்தை விட குறைவு ஆனால் ஆண் குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகம்.
ஒரு நேரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தான் என்று வரையறுத்தால் உலகத்தில் அதிகமாக உள்ள 80 கோடி பெண்களின் நிலை என்ன?.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று கூறி வேடமிட்டு இரவு நேரங்களில் மறைமுக ஆட்டம் போடும் அயோக்கியர்களுக்கு இந்த 80 கோடி பேர் இரையாக வேண்டுமா?.
அயோக்கியர்களின் ஏமாற்று வாதங்களை கருத்தில் கொள்ளாமல் இறைவனின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கையே இஸ்லாமிய பெண்களை தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும்.
இங்கு வழங்கப்பட்ட விளக்கம் தவறானதாகவோ, போதுமானதாகவோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இறை சட்டத்தில் பிழை இருக்காது.
இறை நம்பிக்கையற்ற அறிவைக்கொண்டு சிந்திக்காமல் தஜ்ஜாலின் ஒற்றை கண் வழியே பாராமல் இறை நம்பிக்கை மற்றும் பரந்த அறிவு என்ற இரு கண்களை கொண்டு பார்க்கும் போது இறைச்சட்டம் மிகச்சரியானது என்பதற்கு பல விளக்கங்கள் உதயமாகலாம்.
மகளிரின் ஆடை சுதந்திரமும்,சமூக சீரழிவுகளும், குற்றங்களும்.
தஜ்ஜால் இறுதியாக சந்திக்க உள்ளது பெண்ணை தான் என்பது ஹதிஸ்.
இந்த ஹதிஸை நேரடி பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
நம் அனைவருக்கும் தெரியும் தஜ்ஜாலின் இறுதி நொடிகள் நபி ஈஸா(அலை) அவர்கள் உடன் தான்.
பின் எப்படி அவன் பெண்களை சந்திக்க முடியும்?.
ஹதிஸின் விளக்கம் என்னவென்றால் தஜ்ஜால் ஏற்படுத்தும் சீரழிவின் இறுதி இரைகள் பெண்கள் என்பதாகும்.
பெண்கள் உலகில் அவன் ஏற்படுத்தியுள்ள பித்னாக்கள் யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்களில் சிலவற்றை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தளர்வான, உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய, ஆடைகளை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மேலும் பெண்கள் எவ்வாறு முக்காடுகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வசனம் 24:31 விவரிக்கிறது.
இஸ்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆடைக்கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.
தஜ்ஜாலின் அடியாட்களால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அமைப்புகள் பெண் விடுதலை என்ற பெயரில் ஆடை விடுதலையை தூக்கி பிடிக்கிறது.
மனிதனின் ஆடை என்பது கண்ணியத்துடன் தொடர்புடையது.பெண்களுக்கு இன்னும் ஒரு படி மேலாக பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆனால் அதை பெண்கள் அமைப்புகள் அடிமைதனத்துடன் தொடர்புபடுத்தி என் ஆடை என் உரிமை என்ற மோசமான முழக்கங்களை முழங்குகின்றன.
நவீன தஜ்ஜால் பெண்கள் என்றைய தினம் தங்களது தலையிலிருந்து துணியை அகற்றினார்களோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக ஆடைகளை குறைத்து அல்லது மிக மிக இறுக்கமாக அணிந்து இன்று ஆடை அணிந்தும் நிர்வாணமாக உள்ளனர்.
ஆடை அணிந்தும் நிர்வாணம் என்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று.
இந்த குறைவான ஆடைகளால் இன்று அவர்கள் பல விதமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.கற்பழிப்புகளுக்கு காரணம் கேவலமான ஆடைகள் ஏற்படுத்தும் ஆபாசம் தான் என்று எடுத்து கூறினாலும் , மிகச் சிறிய குழந்தைகள் கூட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் அவர்களிடம் என்ன ஆபாசம் கண்டீர் என்று முட்டாள்தனமான, சினிமா பாணி எதிர் கேள்விகளையே தஜ்ஜால் பெண்கள் கேட்கின்றனர்.
சிறிய அளவில் கூட உளவியல் அறிவு இல்லாதவர்கள் தான் இந்த கேள்வியை கேட்கவோ ரசிக்கவோ முடியும்.
உந்தப்பட்ட மனதின் உடனடியான செயல்களாலும் அந்நேரத்தி்ல் உந்தப்பட்ட மனதை சூழ்ந்துள்ள சூழல்களும் அந்த மனதின் பிற காரணிகளும் (ஆக்ரோசம், பயம், விருப்பு ) தான் பலி இளம்பெண்ணா? அல்லது குழந்தையா? என்பதை தீர்மானிக்கிறது.
உந்துதலுக்கு காரணமான பெண் சில நேரங்களில் நேரடியாக தாக்கப்படலாம்.அவள் பாதுகாப்பான சூழலில் இருந்தால் அவளுக்கு பதிலாக வேறொரு பெண்ணோ, குழந்தையோ ஏன் நாய் மாடு போன்ற மிருகங்கள் கூட தாக்குதலுக்கு ஆளாகலாம்.
குற்றத்திற்கு இரையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் குற்றத்தின் அடிப்படை கேடுகெட்ட ஆடைகளால் தூண்டப்பட்ட மனம்.
பல நவீன மூளை நரம்பியல் மற்றும் மன உளவியல் வல்லுநர்கள் குறை ஆடைகளின் கேடுகளை கீழ்க்கண்டவாறு படிப்படியாக விவரிக்கிறார்கள்.
ஒருவன் மனது தூண்டப்படும் போது அவன் மூளையில் ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரித்து அது அவனை அடுத்த நிலைக்கு ஆபாச படங்களை நோக்கி அழைத்து செல்லும்.
நாளடைவில் ஆக்ஸிடோசின் சுரப்பு மேலும் அதிகரிக்கும் போது அது அவனுக்கு ஆபாச காட்சிகளில் சலிப்பை ஏற்படுத்தி பெண்களை நோக்கி விபச்சாரத்தின் பக்கம் இழுத்து செல்லும்.
ஆனாலும் ஆக்ஸிடோசின் அளவு மேலும் அதிகரித்து பெண்களின் மீது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.இப்போது அவன் தனக்கு மாற்று வழியாக இரண்டு விஷயங்களை எடுப்பான்
1)இயற்கைக்கு மாறான ஓரின சேர்க்கை
2)குழந்தைகள் மீது வன்கொடுமை
கேடுகெட்ட ஆடைகளால் குழந்தைகள் பலியாகும் படிநிலை இது தான்.
ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ளும் காலம் வராமல் யுக முடிவு நாள் ஏற்படாது என்பது ஹதிஸ்.அதை ஏற்படுத்தியதில் பெண்களின் ஆடைக்கு ஒரு பங்கு உண்டு.இது தஜ்ஜாலால் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு சிறிய அடையாளம்.
ஆக்ஸிடோசின் சுரப்பு இத்துடன் குறைந்து விடாமல் மேலும் அதிகரித்து அவனை மிருகங்கள் பக்கம் அழைத்து செல்லும்.
குடி போதை எவ்வாறு தொடர்ந்து அதிகரித்து ஒருவனை கொல்லுமோ அது போல் ஆக்சிடோசின் சுரப்பு தொடர்ந்து அதிகரித்து திடீரென்று ஒரு நாள் ஒரே அடியாக குறைந்து ஆண் தன்மையை முழுமையாக போக்கும்.அப்போது பாதிக்கப்பட்டவனின் மனைவி வேறொருவனை தேடலாம்.
இவ்வாறு தான் அரைகுறை ஆடைகள் சமூகத்தை சீரழித்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சீரழிவின் தொடக்கத்தில் இவன் வேறு பெண்களை நோக்கி செல்வதாலும் முடிவில் இவனுடைய பெண்கள் வேறு ஆணிடம் செல்வதாலும் இன்று விபச்சாரம் அதிகரித்துள்ளது.
இதுவும் தஜ்ஜால் ஏற்படுத்தியுள்ள சிறிய அடையாளத்தில் ஒன்று.
தஜ்ஜால் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் மகளிர் உலகில் கேட்டை விதைத்து பல சமூக சீரழிவுகளை ஏற்படுத்திவிட்டான்.
பதிவு நாளை தொடரும்......

தஜ்ஜால் தொடர் - பதிவு-17,தஜ்ஜாலின் பித்னாக்கள் 1.தஜ்ஜாலின் மழை. 2.தஜ்ஜாலின் நீரும் நெருப்பும்:-https://e-funandjoyindia.blogspot.com/2020/10/17-1-2.html?spref=tw




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com