தஜ்ஜால் தொடர் - பதிவு- 24
தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்- அமெரிக்க டாலர் ,பெட்ரோ டாலராக மறு உருவம் எடுத்தல்
பிரெட்டன் உட்ஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க டாலர் உலகப்பணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை நேற்றைய பதிவில் கண்டோம்.
இந்த உடன்படிக்கையின் படி ஒவ்வொரு நாட்டினுடைய பணத்திற்கும் அமெரிக்க டாலருக்கு நிகரான நிலையான மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.
உதாரணமாக ஒரு அமெரிக்க டாலர் என்பது 15 ஜப்பான் யென் என்று நிர்ணயிக்கப்பட்டது.
அது போல மூன்று அமெரிக்க டாலர்கள் 1 பிரிட்டிஷ் பவுண்ட் என்று நிர்ணயிக்கப்பட்டது.இந்த நிகர்மதிப்புகள் என்பது நிரந்தரமானது என்று உடன்படிக்கை எட்டப்பட்டது.
ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பும் அமெரிக்க டாலரை கொண்டு நிர்ணயிக்கப்பட்டது போல் டாலரின் மதிப்பு தங்கத்தை கொண்டு நிர்ணயிக்கப்பட்டது.
35 அமெரிக்க டாலர் என்பது 1 அவுன்ஸ் தங்கம் என்று நிர்ணயிக்கப்பட்டதுடன் அந்நிய செலாவணியாக தங்கள் கையில் டாலர் வைத்துள்ள நாடுகள் தங்களுக்கு தேவைப்படும் போது அதை அமெரிக்காவிடம் ஒப்படைத்து தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று உடன்படிக்கை எட்டப்பட்டது.
தொடக்கத்தில் உடன்படிக்கையின் படி அமெரிக்கா செயல்பட்டாலும் நாளடைவில் அதன் குரங்கு புத்தியை காட்டத் தொடங்கியது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் வீழ்ச்சியடைந்த ஜப்பானும்,ஜெர்மனும் மிக விரைவில் எழுச்சி பெற்று உலகச்சந்தையில் அமெரிக்காவிற்கு போட்டியாக வந்தன.மேலும் வியட்நாம் போரில் மிக அதிக அளவில் இழப்பை கண்டது அமெரிக்கா.இதனால் அமெரிக்கா நிதி நெருக்கடியை சந்திக்க தொடங்கியது.
இந்த நெருக்கடியால் 1 அவுன்ஸ் தங்க இருப்பிற்கு 35 டாலர்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும் என்ற விதியை மீறி திருட்டு தனமாக அதிக அளவில் டாலர்களை அச்சடிக்க தொடங்கியது அமெரிக்கா.
அமெரிக்காவின் நடவடிக்கைகளில் மீது சந்தேகம் கொண்ட பிரான்ஸ் அதிபர் சார்லஸ் டி கால் என்பவர் தங்கள் கையிருப்பு அந்நிய செலாவணியான டாலரை அமெரிக்காவிடம் ஒப்படைத்து தங்கத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.
பிரான்ஸை தொடர்ந்து சுவிட்ஸார்லாந்தும் ஜெர்மனும் தங்கத்தை திரும்ப பெற்றன.
ஒரு கட்டத்தில் பெடரல் ரிசர்வ்-ன் தங்க கையிருப்பு அதன் அளவில் பாதிக்கும் குறைவாக சென்றதால் அமெரிக்கா ஒரு மோசடியை துணிச்சலாக அறிவித்தது.
அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் என்பவன் இனி டாலருக்கு தங்கம் வழங்கப்படாது என்று அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான்.45 நாடுகள் கூடி எடுத்த உடன்படிக்கையை தனியாளாக உடைத்தான்.
அமெரிக்க டாலர் 100% வெற்று காகிதப்பணமாக (fiat currency)மாறியது.டாலரை மையமாக கொண்டு அனைத்து நாடுகளின் பண மதிப்பும் நிர்ணயிக்கப்பட்டதால் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் பணமும் (Fiat currency ) வெற்று காகிதப்பணமாக மாறியது.
இதை தொடர்ந்து அமெரிக்காவின் டாலரை அனைத்து நாடுகளும் கையிருப்பிலிருந்து அகற்ற தொடங்கின.அமெரிக்க டாலரும் வீழத்தொடங்கியது.
குறுகிய காலத்தில் அதன் மதிப்பு 400% வீழ்ந்தது.
இந்நிலையில் அமெரிக்க அரசு இந்த இக்கட்டை சமாளிக்க சவூதி அரேபியா அரசிடம் ஒரு ஒப்பந்தம் செய்தது. தலையில் களிமண் மட்டுமே கொண்டிருந்த மன்னர் பைசலும் உடன்படிக்கை ஏற்றுக்கொண்டார்.
அந்த உடன்படிக்கை படி பெட்ரோலின் விலையை 4 மடங்குகாக அதிகரிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்ளும்.அதற்கு கைமாறாக சவூதி அரேபியா பெட்ரோலினை அமெரிக்க டாலருக்கு டாலருக்கு, டாலருக்கு மட்டுமே ,மட்டுமே மட்டுமே ,விற்பனை செய்ய வேண்டும்.மற்ற நாடுகளின் பணத்தில் விற்பனை செய்யக்கூடாது.
நான்கு மடங்கு விலை உயர்வு என்ற பேராசை கொண்ட மன்னர் பைசல் ,ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் இந்த விலையுயர்வால் சவூதிக்கு ஒரு புண்ணியமும் இல்லை.நான்கு மடங்கு வீழ்ச்சியடைந்துவிட்ட டாலரினால் நான்கு மடங்கு விலையுயர்வு வழங்கப்பட்டால் உண்மையான லாபம் பூஜ்யம்.இதை புரியாத முட்டாள் பைசல் உடன்படிக்கையை ஏற்றார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது தங்க இருப்பு என்ற அளவையிலிருந்து மாற்றம் அடைந்து பெட்ரோலின் தேவை பணமாக மாறியது.
இது தான் அமெரிக்க டாலர் பெட்ரோ டாலராக மாற்றம் அடைந்த வரலாறு.
உலக நாடுகளுக்கு இப்போது பெட்ரோலை பெற அமெரிக்க (பெட்ரோ)டாலர் தேவை.ஆகையால் மதிப்பே இல்லாத அமெரிக்க டாலரை மீண்டும் அந்நிய செலாவணியாக ஏற்றன.
உலகத்திலுள்ள பொருட்களை குறிப்பாக சவூதியின் பெட்ரோலை பெறுவதற்கு அமெரிக்கா கொடுக்கும் விலை என்பது சில துளி மையும் சில காகித துண்டுகளும் தான்.
தன் விருப்பப்படி காகிதத்தை அச்சடித்து தனக்கு தேவையானதை அந்த காகிதங்களை கொண்டு உலக நாடுகளிடம் பெறும் ஒரே நாடு அமெரிக்கா.
பெட்ரோ டாலர் மூலமாக அராபிய எண்ணெய் வயல்களை அமெரிக்கா அபகரித்த வரலாற்றை கண்டோம்.இன்று இந்த பெட்ரோ டாலரை காப்பாற்ற அமெரிக்கா நடத்திய போர்களை காணலாம்.
2000 ஆம் ஆண்டில் அன்றைய ஈராக் அதிபர் சதாம் , பெட்ரோலை அமெரிக்க டாலருக்கு மட்டுமல்லாமல் யூரோவிலும் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.மேலும் உணவுக்கு எண்ணெய் திட்டம் என்ற உடன்படிக்கையை பல நாடுகளுடன் மேற்கொண்டார்.இதன் விளைவாக உலகளாவிய அளவில் டாலரின் தேவை குறைந்தது.டாலரின் மதிப்பும் குறைந்தது.
இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா பலவிதமான குற்றச்சாட்டை, சதாம் மீது சுமத்தி, போர் தொடுத்து, சதாமை ஆட்சியிலிருந்து அகற்றியது.சதாமிற்கு பின் வந்தவர்கள் டாலருக்கு மட்டுமே எண்ணெய் விற்பனை என்ற பழைய பல்லவியை பாடினர்.
2010 ஆம் ஆண்டில் லிபிய அதிபர் மதிப்பிற்குரிய கடாஃபி அவர்கள் லிபிய தினார் என்ற தங்க நாணயங்களுக்கும் இதர நாடுகளின் பணத்திற்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.மேலும் அமெரிக்க டாலருக்கான பெட்ரோல் விற்பனையை தடை செய்யும் பணிகளிலும் ஈடுபட்டார்.
இந்த சிறந்த தலைவரை ஒழித்துக்கட்ட, அமெரிக்கா தங்களின் கைக்கூலி நாய்களான ISIS போன்ற போலி ஜிகாதிகளை பயன்படுத்தி உள்நாட்டு கலகத்தை ஏவி கடாபியை கொலை செய்தது.மீண்டும் பெட்ரோல் டாலருக்கு மட்டுமே என்ற நிலை உருவாகியது.
அமெரிக்கா ஏன் தன்னுடைய பெட்ரோ டாலரை காப்பாற்ற கடுமையான போர்களை தொடுத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பெட்ரோ டாலர் மூலம் அமெரிக்கா இரண்டு முறைகளில் உலகை சுரண்டுகிறது.
முறை:1
என்றைய தினம், அமெரிக்க அதிபர் நிக்சன் இனி உலக நாடுகளுக்கு , டாலருக்கு மாற்றாக தங்கம் வழங்கப்படாது என்று அறிவித்தானோ அன்றே டாலர் மதிப்பற்ற வெற்று காகிதமானது.
இந்த காகிதத்திற்கு மீண்டும் மதிப்பை ஏற்படுத்த அமெரிக்க அரசு ,சவூதி அரசுடன் உடன்படிக்கை செய்து இனி பெட்ரோல் அமெரிக்க டாலருக்கு மட்டுமே என்று அறிவிக்கச்செய்தது.
அதாவது இனி அமெரிக்க டாலருக்கு, அமெரிக்காவின் மஞ்சள் (உலோக) தங்கம் மாற்றாக வழங்கப்படாது.ஆனால் கேனையர்களான அராபியர்களின் கருப்பு(திரவ) தங்கம்(பெட்ரோல்) வழங்கப்படும் என்று உலகிற்கு மறைமுகமாக அறிவித்தது.
என்றைய தினம் மடையர்(சவூதி) மன்னர் பைசலுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டதோ அன்றே அரேபியாவின் வயல்கள் மறைமுகமாக அமெரிக்காவின் கைகளுக்கு வந்தது.
இந்த காரணங்களால் தான், அமெரிக்காவின் அக்கிரமங்களை எதிர்த்த சதாம்,கதாஃபி போன்றோர்களை அமெரிக்கா தீர்த்து கட்டியது.
முறை:2
என்றைய தினம் நிக்சன் டாலருக்கு பதிலாக தங்கம் வழங்கப்படாது என்று அறிவித்தானோ அன்றே உலகத்திலுள்ள அனைத்து காகிதப்பணமும் fiat currency ஆக மாறியது.ஒரு நாட்டின் பண மதிப்பிற்கான மற்றொரு நாட்டின் நிகர்பணம் அந்த இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பற்றாக்குறை மூலம் தீர்மானிக்கப்பட்டது.
உலக நாடுகளுக்கு பெட்ரோல் பெற அமெரிக்க டாலர் தேவை.எனவே உலக நாடுகள் அதிக அளவில் பெட்ரோலை அந்நிய செலாவணியாக பயன்படுத்தின.உலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் இறக்குமதியிலும் முதலிடம் பெறும் பொருள் பெட்ரோல்.இதனால் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து பெட்ரோ டாலரின் மதிப்பு உயர்ந்தது.மற்ற நாடுகளின் பணம் வீழ்ந்தது.
1944ல் ஒரு அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 1 ரூபாய்.ஆனால் 2020ல் அமெரிக்க டாலர் என்பது 70 ரூபாய்.
இந்த அளவிற்கு டாலரின் மதிப்பு உயர காரணம் பெட்ரோ டாலர் என்ற நடைமுறை தான்.
இவைகள் தான் பெட்ரோ டாலர் மூலம் அமெரிக்கா பெறும் நன்மைகள்.
அமெரிக்க டாலரின் மதிப்பு உலக அளவில், உலக பணங்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்தாலும் உள்நாட்டில் (தங்கத்திற்கு எதிராக) அதன் மதிப்பு குறையும்.காரணம் காகிதப்பணத்தின் சூத்திரமே பண மதிப்பின் தொடர் குறைவு தான்.
1940 களில் 1 அவுன்ஸ் தங்கம் (30 கிராம்) 40 டாலர்.இந்திய மதிப்பில் (40*1= 40) ரூபாய்.அதாவது 1 பவுன் தங்கம் 10 ரூபாய்.
2020ல் 1 அவுன்ஸ் தங்கம்(30 கிராம்) 1600 டாலர்கள்.இந்திய மதிப்பில் (1600*70=112000) 112000 ரூபாய்.அதாவது ஒரு பவுன் 30000 ரூபாய்.
அதாவது கடந்த 80 ஆண்டுகளில் டாலரின் மதிப்பு அமெரிக்காவுக்குள் 40 மடங்கு குறைந்துள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் செல்வம் 40 மடங்கும் இந்திய மக்களின் செல்வம் 300 மடங்கும் அது போல உலக மக்களின் செல்வம் பல மடங்கும், அமெரிக்க மத்திய வங்கியாலும் இதர நாடுகளின் மத்திய வங்கியாலும் சுரண்டப்பட்டுள்ளது.
சுரண்டப்பட்ட மக்களின் செல்வம் எங்கே?
அமெரிக்க மத்திய வங்கியிடம் மற்றும் இதர நாடுகளின் மத்திய வங்கியிடம்.
அமெரிக்க மத்திய வங்கி யாருடையது?
ரோத்சைல்ட் குடும்பத்தினுடையது.
ரோத்சைல்ட் குடும்பத்தின் சொத்து மதிப்பு ?
கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்குமில்லை.
ரோத்சைல்ட் யார்?
ஐரோப்பிய யூத குடும்பத்தை சார்ந்தவன் (ASHKENAZI JEWS)
ஐரோப்பிய யூதர்கள் (ASHKENAZI JEWS) யார்?
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்.
யஃஜூஜ் மஃஜூஜ் யார்?
தஜ்ஜாலின் அடியாட்கள்.
தஜ்ஜால், காகிதப்பணத்தின் மூலம் மக்களை சுரண்டும் முறை இது தான்.
இந்த சுரண்டலினால் அவன், நமது தூதர் முகம்மது நபி (ஸல்) அறிவித்தது போல மலையளவு ரொட்டி துண்டுகளை(செல்வங்களை) சேர்த்து விட்டான்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்........
தஜ்ஜால் தொடர் -பதிவு-23; தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்-அமெரிக்க டாலர்கள்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/23.html?spref=tw
Post a Comment