போதைப்பொருள் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் சந்தனம் { விஜய் சேதுபதி }-யின் பல கோடி மதிப்பிலான சரக்கு, சீக்ரெட் ஏஜென்ட்டாக இருக்கும் விக்ரமின் { கமல் ஹாசன் } மகன் காளிதாஸிடம் கிடைக்கிறது. இதனை கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கிறார் காளிதாஸ். தன்னுடைய போதைப்பொருள் காளிதாஸிடம் இருப்பதை அறியும் விஜய் சேதுபதி, காளிதாஸை கொன்றுவிடுகிறார். ஆனால், விஜய் சேதுபதிக்கு சரக்கு கிடைக்கவில்லை.
தன் மகனை கொண்றதுக்காகவும், போதைப்பொருள் இனி அடுத்த தலைமுறைக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காகவும், மறைந்திருந்து போராடி வருகிறார் கமல் ஹாசன். இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடக்கும் கொலைகளை குறித்து விசாரணை செய்ய, காவல் துறையால் மறைமுகமாக நியமனம் செய்யப்படுகிறார் அமர் { பகத் பாசில் }. விசாரணையை மேற்கொள்ளும் பகத் பாசிலுக்கு அடுத்தடுத்து பல ஷாக்கிங் விஷயங்கள் தெரியவருகிறது.
ஒரு கட்டத்தில் விசாரணை செய்ய வந்த பகத் பாசில், யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை கண்டுபிடிக்கிறார். இதன்பின் கதையில் நடந்த மாற்றம் என்ன? பகத் பாசில் எதை? அல்லது யாரை கண்டுபிடித்தார்? போதைப்பொருள் கைப்பற்றினாரா விஜய் சேதுபதியிடம்? அதை கமல் ஹாசன் தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை
உலகநாயகன் கமல் ஹாசன் வரும் ஒவ்வொரு காட்சியும் திரை தீப்பிடிக்கிறது. ஆக்ஷன், செண்டிமெண்ட், Gun ஹண்ட்லிங் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக இண்டெர்வெல் காட்சியில் கமல் ஹாசனின் நடிப்பு நம்மை மைசிலுர்க்க வைத்துவிட்டது. வில்லனாக வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தனித்து நிற்கிறார். கமல் ஹாசனுக்கு நிகரான வில்லனாக திகழ்கிறார். வழக்கம் போல் இல்லாமல், வித்தியாசமான நடிப்பு காட்டியுள்ளார். அதற்கு தனி பாராட்டு.
அமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு எமோஷனல் காட்சியில் நடிப்பால் நம்மை மிரட்டிவிட்டார். நரேன், காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு படத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. மற்றபடி ரமேஷ் திலக், ஜாஃபர், மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள்.
சிறப்பான தரமான ஒரு பேன் பாய் சம்பவத்தை செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸான இயக்கம், வெறித்தனமான திரைக்கதை என கமல் ஹாசனை வைத்து மாபெரும் படைப்பை வழங்கியுள்ளார். கதையாகவும், டெக்னீகளாகவும் லோகேஷ் கையாண்டுள்ள விதம் சூப்பர்.
வழக்கம்போல் பாடல்கள், பின்னணி இசை என படத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் அனிருத். கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங் மாஸ். அன்பறிவு மாஸ்டர்ஸ் ஆக்ஷன் வெறித்தனம். ரத்னகுமாரின் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்கிறது. திரைக்குப்பின் இருந்த பணிபுரிந்துள்ள துணை இயக்குனர்களின் Effort கண்முன் தெரிகிறது. அதற்கு பாராட்டுக்கள்.
கடைசியாக சில நிமிடங்கள் வந்தாலும், திரையரங்கை அதிர வைத்துவிட்டார் ரோலெக்ஸ் { சூர்யா }. கைதியாக இருந்த ரிலீஸாகி, தன் மகளை காண காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றி, மகளுடன் வேறொரு ஊருக்கு சென்ற டில்லி, விக்ரம் படத்தின் சர்ப்ரைஸாக எலிமெண்ட். விக்ரம் - ரோலெக்ஸ் - அடைக்கலம் - அன்பு - டில்லி - பிஜாய் என அனைவரையும் இணைத்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் செய்யவுள்ள சம்பவத்திற்கு ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
Positive
கமல் ஹாசன் நடிப்பு
நடிப்பில் மாறுபட்ட விஜய் சேதுபதி, எதார்த்தத்தை காட்டிய பகத் பாசில்
லோகேஷ் கனகராஜின் இயக்கம், திரைக்கதை
அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை
சூர்யாவின் என்ட்ரி
Negative
குறை என்று சொல்வதற்கு படத்தில் பெரிதும் எதுவும் இல்லை
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு விக்ரம்
4.25/ 5