தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த சில வருடமாகவே மிக பெரிய எதிர்பார்ப்பில் காத்துஇருந்த படம் விக்ரம்.
அத்தனை காத்திருப்பிற்கும் விக்ரம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. விக்ரம் இரண்டு நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது. இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் விக்ரம் திரைப்படம் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம்
கமல் திரைப்பயணம் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்திலும் அதிவேகத்தில் ரூ 100 கோடி வசூல் செய்த படங்களில் லிஸ்டில் விக்ரம் வந்துள்ளது.
விக்ரம் ரிலீஸாவதற்கு முன்பு ரூ. 200 கோடி வசூல் செய்துவிட்டது. சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு சென்றது. இதற்கிடையே விக்ரம் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜை பாராட்டுகிறார்கள். மனுஷன் மிரட்டிவிட்டார் என்கிறார். இது ஆண்டவர் படம் மட்டும் என்று சொல்ல முடியாது. கமல் கதையை புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் என பாராட்டுகிறார்கள்.
இது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இரண்டே நாட்களில் ரூ 100 கோடி வந்த படங்கள் வலிமை, கபாலி, 2.0, பீஸ்ட் ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment