லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக மாறிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போது விக்ரம் என வெற்றிப்படங்களை இயக்கி வருகிறார்.
இந்த 4 படங்களும் எப்போதும் போல இரண்டு சண்டை, காதல், நடனம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருக்கும்.
இப்போது அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.
உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியை எப்போது வசூலிக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தற்போது அந்த நாளும் வந்துவிட்டது, ஆமாம் தமிழகத்தில் மட்டுமே படம் நேற்றைய வசூல் நிலவரப்படி ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.
முதல் வார முடிவிலேயே படம் ரூ. 100 கோடியை தாண்டியது சாதனை விஷயமாக கூறப்படுகிறது.
Post a Comment