தஜ்ஜால் தொடர்- பதிவு- 21
தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்.
Representative money எவ்வாறு fiat currency(created out of thin air) ஆக பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதைப்பற்றி நேற்றைய பதிவில் கண்டோம்.இந்த அபத்தமான fiat currency ஆல் கோடீஸ்வரர்கள் கூட பிச்சைக்காரர்களான வரலாற்றை இப்போது பார்ப்போம்.
முதலாம் உலகப்போரின் தொடக்கத்தில் வெய்மர் ரிபப்ளிக்(தற்போதைய ஜெர்மன் அரசு)ன் காகிதப்பணமான -மார்க் பணத்தின் மதிப்பு என்பது அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்தது.அதாவது ஒரு மார்க் என்பது ஒரு அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
போரின் செலவிற்காக அதிகப்படியான காகிதப்பணத்தை வெய்மர் அரசு அச்சடித்து புழக்கத்தில் விட்டது.கையிருப்பாக (மாற்றீடாக) தங்கம் ஏதும் இல்லாமலேயே புதிதாக பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டது.
தங்கம் கையிருப்பாக இல்லாமல் புதிதாக காகிதப்பணத்தை அச்சடித்தால் புதிய காகிதப் பணத்திற்கான மதிப்பு எங்கிருந்து வரும்?
மக்கள் முன்பே சேமித்து வைத்துள்ள பணத்திலிருந்து தான். வரும்.
மக்கள் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள பணத்தின் மதிப்பு குறையும்.எளிமையாக சொன்னால் மக்களின் சேமிப்பு அவர்களே அறியாதவாறு திருடப்படும்.
மக்கள் ஏற்கனவே சேமித்த பணத்தின் வாங்கும் திறன்(goods purchasing power of currency) குறையும்.அரசின் ஏமாற்று மொழியில் சொன்னால் விலைவாசி உயரும்(inflation).
போரில் எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த வெய்மர் ரிபப்ளிக் அதிகப்படியான காகித பணத்தை அச்சடித்ததுடன் வெளிநாடுகளிலிருந்தும் கடன்களை வாங்கி குவித்தது.போரின் முடிவில் வெய்மர் ரிபப்ளிக் மரண அடி வாங்கியது.
போரின் முடிவில் வெற்றி பெற்ற நாடுகள், வெய்மர்(ஜெர்மனி) அரசிடமிருந்து, வெர்சய்ல்ஸ் உடன்படிக்கை வாயிலாக போர் இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து ஆண்டு தவனைகளாக பெற ஆரம்பித்தன.ஏற்கனவே கடன்,தற்போது இழப்பீட்டு தொகை வேறு.
வேறு வழியே இல்லாமல் அதிகப்படியான காகித பணத்தை அச்சடித்தது.
விளைவு அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்த வெய்மர் மார்க்
1923 ன் தொடக்கத்தில் ஒரு டாலர் என்பது 630 மார்க்குகள்
1923 முடிவில் ஒரு டாலர் 7400 மார்க்குகள்.
மார்க்-ன் மதிப்பு தொடர்ந்து சரிந்ததால் இழப்பீட்டு தொகையை மார்கிற்கு பதிலாக பொருட்களாக பெற தொடங்கின வெற்றி பெற்ற நாடுகள்.
விளைவு 1924 முடிவில் ஒரு அமெரிக்க டாலரின் விலை 42 லட்சத்து 15 ஆயிரம் கோடி மார்க்குகள்.
நம்புவதற்கு கடினமாக இருக்கலாம் ஆனால் இது உண்மை நீங்கள் வேண்டுமானால் இணையதளத்தில் என் பதிவை சரி பார்த்து கொள்ளலாம்.
1924 முடிவில் ஜெர்மனியில் ஒரு ரொட்டி துண்டின் விலை 2 லட்சம் கோடி மார்க்.
போருக்கு முன்பு 2 கோடி மார்க்குகள் சேமித்து வைத்திருந்து மெர்சிடஸ் காரில் வலம் வந்த ஜெர்மானிய கோடீஸ்வரர்கள் போருக்கு பின் ரொட்டி துண்டு கூட வாங்க இயலாத வறியவர்கள்.
இவ்வாறாக மக்களின் செல்வம் அனைத்தும் வெய்மர் அரசால் fiat currency வாயிலாக திருடப்பட்டு குடிமக்கள் அனைவரும் பிச்சைகாரர்களாக்கப்பட்டனர்.
இது fiat currency பாதிப்பின் வரலாற்று காலச்சான்று.
அமெரிக்காவின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலா அரசின் காகிதப்பணத்தையும் (பொலிவர்) அதனால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலா மக்கள் பற்றியும் நிகழ்கால சான்றாக காணலாம்.
வெனிசுவேலா அதிக அளவி்ல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று.
இந்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும், எண்ணெய் வயல்களை சார்ந்தே அமைந்திருக்கின்றன.
எண்ணெய் வளத்தையே நம்பி வேளாண்மையை அம்மக்கள் கைவிட்டனர்.ஆனால் எண்ணெய் வயல்கள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களின் கையில்.
ஏறக்குறைய அமெரிக்காவின் colony அரசு போன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது வெனிசுவேலா.
இந்நிலையில் தான் ஹியூகோ ஷாவேஸ் என்ற மக்கள் தலைவர் இந்நாட்டின் அதிபராக பதவியேற்று கொள்கிறார். பதவியேற்றதுமே அதிரடியாக எண்ணெய் வயல்களை அரசுடமையாக்கினார்.
கச்சா எண்ணெயில் கிடைத்த வருவாயை கொண்டு பல சமூக நல திட்டங்களை தீட்டி மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றினார்.
ஏதேனும் ஒரு நாடு நன்றாக இருந்தால் அமெரிக்காவிற்கு பொறுக்குமா?ஷாவேஸ் அவர்களின் ஆட்சியை கலைக்க உள்நாட்டு கலவரங்களை ஏவியது இருப்பினும் பலனில்லை.
போர் தொடுக்க முயற்சி செய்த்து ரஷ்யாவின் தலையீட்டால் அதுவும் முடியவில்லை.
இறுதி ஆயுதமாக புற்றுநோயை ஷாவேஸ் உடலில் ஏற்படுத்தி கொலை செய்தது. ஆம் அமெரிக்காவின் உளவுத்துறையான CIA புற்று நோயைக்கொண்டு பல தலைவர்களை கொலை செய்துள்ளது.ஹியூகோ ஷாவேஸ் அவர்களின் மரணத்திற்கு பின் தங்கள் எடுபிடிகளை அரியணையில் அமர வைக்க முயற்ச்சித்த அமெரிக்காவிற்கு கிடைத்தது தோல்வி மட்டுமே.
இந்நிலையில் தான் அமெரிக்கா தனது நண்பரான சௌதி அரச குடும்பத்துடன்(ஷைத்தானின் தலைமுறைகள் என்று இறைத்தூதர் முகம்மது அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட குடும்பம்) இணைந்து வெனிசுவேலாவின் மீது பொருளாதாரப் போர் தொடுத்தது.
சௌதி அரசு மிக அதிக அளவில், தேவைக்கும் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்தது.விளைவு கச்சா எண்ணெயின் விலை மிக அதிக அளவில் சரிய தொடங்கியது.2017 ஆண்டில் விலை பேரல் 35 டாலருக்கும் கீழ் சென்றது.
மூன்றாண்டுகளுக்குள் 110 டாலரிலிருந்து 30 டாலராக சரிந்தது எண்ணெய் விலை.
இதன் காரணமாக கச்சா எண்ணெயை மட்டும் நம்பியிருந்த வெனிசுவேலாவின் பொருளாதாரம் மற்றும் வருவாய் அதள பாதாளத்திற்கு சென்றது.இச்சூழலில் கடன்களை அடைக்க அதிகப்படியான காகிதப் பணத்தை அச்சடிக்க தொடங்கியது வெனிசுவேலா அரசு.
எண்ணெய் விலை சரிய சரிய அதிகப்படியான காகிதப்பணத்தை அச்சடித்து கொண்டிருந்த்து வெனிசுவேலா இதன் விளைவு Hyper Inflation(கட்டுபடுத்த முடியாத விலைவாசி ஏற்றம்).
2019 மார்ச் மாதம் ஒரு கிலோ தக்காளியின் விலை 10 லட்சம் பொலிவர்கள்.
2016 ல் 10 லட்சம் பொலிவர்களை கொண்டு ஒரு ஆடம்பர வீட்டினை கட்ட முடியம் என்ற நிலை இருந்தது.
ஆனால் மூன்றாண்டுகளில் 2019 ஆம் ஆண்டில் 10 லட்சம் பொலிவர்களை கொண்டு ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆற்றல் மிக்க மக்கள் தலைவரான ஷாவேஸ் கூட இந்த காகித பணத்தின் ஆபத்தை அறிந்திருக்கவில்லை.
இறுதியாக அமெரிக்காவின் பொருளாதார தாக்குதலில் வெனிசுவேலாவும் அதன் மக்களின் சேமிப்பும் அழிக்கப்பட்டது.
வெய்மர் அரசும் (ஜெர்மனி),வெனிசுவேலா அரசும் இரண்டும் மக்களை ஒரே அடியாக சுரண்டிருக்கலாம்.
ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியா, அமெரிக்கா உட்பட ,வருடத்திற்கு 5 to 10% என்ற அளவில் ஒவ்வொரு வருடமும் மக்களிள் சேமிப்பை சுரண்டுகிறது.இதைப் பற்றி நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் பதிவு-20; தஜ்ஜாலின் பித்னாக்கள் - தஜ்ஜாலின் பொருளியல் சீர்கேடுகள் -காகிதப்பணம்(Fiat Currency):- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/20-fiat-currency.html?spref=tw
Post a Comment