தஜ்ஜால் தொடர் -பதிவு-22
தஜ்ஜாலின் பித்னாக்கள்-காகிதப்பணம்
காகிதப்பணத்தின் படு மோசடியான அமைப்பு முறை மற்றும் செயல்முறை
இந்தியா உட்பட உலகில் எந்த நாடாக இருந்தாலும் பணத்தினை அச்சிடுவதற்கு அதிகாரம் பெற்ற அமைப்பு அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தான்.உதாரணமாக இந்தியாவில் ரிசர்வ் பேங்க்.அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ்.
மத்திய வங்கியை தவிர்த்து வேறு யாருக்கும் பணம் அச்சடிக்க உரிமையில்லை.
இப்பொழுது நான் கூறும் எடுத்தக்காட்டினை சற்று கவனமாக ஆராயவும்.
மத்திய வங்கி(ரிசர்வ் வங்கி) 2020 ஜனவரி 1ல் தொடங்கப்பட்டதாக கருதி கொள்ளுங்கள்.முதன்முறையாக ஒரு 10 கோடி மதிப்பில் காகித பணத்தை அச்சடித்து தனது வணிக வங்கிகள் மூலமாக மக்களுக்கு ஆண்டுக்கு 5% சதவீத வட்டியுடன் 10 கோடி ரூபாயையும் கடனளிக்கிறது என்று கருதிக் கொள்ளவும்.
2021 தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் (மக்கள்) வணிக வங்கிகளின் வாயிலாக திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 50 லட்சம் ரூபாய்.
இந்த இடம் நீங்கள் அனவரும் நன்றாக கவனிக்க வேண்டிய இடம். ஏன்?
புழக்கத்தில் இருக்கும் ஒட்டு மொத்த காகித பணமே 10 கோடி ரூபாய் தான்.ஆனால் செலுத்த வேண்டிய பணம் 10 கோடியே 50 லட்சம்.இச்சூழலில் அதிகமாக தேவைப்படும் 50 லட்சத்திற்கு என்ன செய்வது?
நாமே பணம் அச்சடிக்கலாமா?அடித்தால் போலிஸ் நம்மை இடிக்கும்.அப்படியென்றால் இந்த பற்றாக்குறையை யாரால் நிவர்த்தி செய்ய முடியும்?
பணம் அச்சடிக்க அதிகாரம் கொண்ட அமைப்பான மத்திய(ரிசர்வ்) வங்கியால் தான் முடியும்.
ரிசர்வ் வங்கி பற்றாக்குறை மற்றும் புதிய தேவைகளை கருத்தில் கொண்டு மீண்டும் 1 கோடி ரூபாயை அச்சடிக்கும்.நாம் ஏற்கனவே புதிய பணத்திற்கான மதிப்பு, புழக்கத்திலுள்ள பழைய பணத்திலிருந்து தான் வரும் என்பதை கண்டுள்ளோம் அப்படியென்றால் ஏற்கனவே உள்ள பணத்தின் மதிப்பு குறையும் அதாவது அதை சேமித்து வைப்பவன் திருடப்படுவான்.
மீண்டும் நமது கணக்கீட்டிற்கு திரும்புங்கள் 2021 ன் தொடக்கத்தில புழக்கத்தில் உள்ள மொத்தப்பணம்(பழைய பணம் 10 கோடி +புதுபணம் 1 கோடி=11 கோடி) மத்திய வங்கி புதிய பணமான 1 கோடி ரூபாயையும் ஆண்டுக்கு 5% வட்டியுடன் வணிக வங்கியின் வாயிலாக புழக்கத்திற்கு விடும்.
2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை வட்டியுடன் சேர்த்து 11 கோடியே 55 லட்சம் ஆனால் புழக்கத்தில் இருப்பது வெறும் 11 கோடி. பற்றாக்குறை 55 லட்சம். கடந்த வருட பற்றாக்குறையை விட 5 லட்சம் அதிகம். இந்த பற்றாக்குறையை நீக்க மத்திய வங்கி மீண்டும் புதிய பணமாக 1 கோடியே பத்து லட்சத்தினை அச்சடித்து 5% வட்டியுடன் புழக்கத்திற்கு விடும். இந்த புதிய பணத்திற்கான மதிப்பு ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பணத்திலிருந்து வரும்.பழைய பணத்தை சேமித்து வைத்திருப்பவன் மீண்டும் திருடப்படுவான்.
இந்த பற்றாக்குறை - புதுப்பண அச்சடிப்பு என்பது தொடர்ந்து நடைபறும் சுழற்சிமுறை(சூழ்ச்சி முறை).
புதிதாக பணம் புழக்கத்திற்கு வரும் போதெல்லாம் நம் சேமிப்பின் மதிப்பு குறையும் அதாவது விலைவாசி தொடர்ந்து உயரும்.இது தான் காகிதப்பணத்தால் அரசு நம்மை திருடும் முறை.
வணிக வங்கியிலிருந்து( state bank,Indian bank,Canara bank) நாம் பெறும் கடனுக்கு மட்டும் நாம் வட்டி செலுத்துவதில்லை.
மாறாக ரிசர்வ் வங்கியின் பணத்தை பயன்படுத்துவதற்கே நாம் வருடத்திற்கு 5% வட்டி செலுத்துகிறோம் என்பது தான் மேற்கண்ட பதிவிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
நாம் இந்த இடத்தில் இரண்டு மிக முக்கிய ஹதிஸ்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹதிஸ்:1
இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் ,கருப்பு நிறம் கொண்ட பாறையின் மேல் உள்ள கருப்பு நிற தேளை எவ்வாறு இனம் காண முடியாதோ அது போல் உங்களால் வட்டியை இனம் காண முடியாத காலம் வரும்.
இந்த ஹதிஸில் குறிப்பிடப்படும் வட்டி அனைவரும் அறிந்த நேரடி வட்டி அல்ல.
காகிதப்பணம் என்னும் பித்தலாட்டத்தில் அமைந்துள்ள மறைமுக வட்டி தான் இந்த ஹதிஸில் குறிப்பிடப்படும் வட்டி.
ஹதிஸ்: 2
ஒரு காலம் வரும்.அக்காலத்தில் ஒருவர் தாம் வட்டியை தொடவில்லை என்று உறுதியாக கூறி அதன் படியே வாழ்ந்திருந்தாலும் அவர் மீது வட்டியின் தூசு படிந்திருக்கும்....
வட்டியின் தூசு என்பது காகிதப்பணத்தில் உள்ள வட்டி(வருடத்திற்கு 5 to 10% பண மதிப்பு குறைதல்)ஆகும்.
காகிதப்பணத்தின் அடிப்படையே வட்டி தான்.
எனவே இந்த தஜ்ஜாலின் பணம் ஹராமான ஒன்றாகும்.
காகிதப்பணமும் அரசின் கடன் பத்திரங்களும்
மத்திய வங்கியின் காகிதப்பணமும் அதன் புழக்கமும் ஏமாற்றும் (சுரண்டும் )போக்கை அடிப்படையாக கொண்டது என்பதை பதிவில் கண்டோம்.
மத்திய வங்கி மற்றும் அரசின் மற்றுமொரு ஏமாற்று வேலையை இப்போது காண்போம்.
மத்திய அரசு சில திட்டங்களை செயல்படுத்துகையில் ஏற்படக்கூடிய நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பொருட்டு கடன் பத்திரங்களை வெளியிடும்.இந்த கடன் பத்திரங்களை வணிக வங்கிகள்(state bank,Indian bank,Hdfc bank)குறிப்பிட்ட தொகைக்கு அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.
அரசானது குறிப்பிட்ட வட்டி தொகையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வணிக வங்கிகளுக்கு வழங்கும்.
வணிக வங்கிகள் தங்களின் பத்திரங்களின் மேலான முதலீட்டை திரும்ப பெற நாடும் போது கடன் பத்திரங்களை மத்திய வங்கியிடம் (reserve bank) விற்பனை செய்து முதலீட்டு பணத்தை பெற்றுக் கொள்ளும்.
இச்சூழலில் அரசு செலுத்த வேண்டிய வட்டித்தொகை மத்திய வங்கியை சார்ந்ததாகும்.இதை சற்று மேலோட்டமாக பார்க்கும் போது இதில் தவறு ஏதுமில்லை என தோன்றும்.ஆனால் இது மிகவும் அபத்தமானதாகும்.
எப்படி? வணிக வங்கிகள் அரசிடமிருந்து கடன் பத்திரங்களை அதன் கையிருப்பு நிதியிலிருந்து முதலீடு செய்து விலைக்கு வாங்கும்.முதலீட்டின் லாபமாக அரசிடமிருந்து வட்டி பெறும்.ஆனால் மத்திய வங்கியிடம் வணிக வங்கிகள் பத்திரங்களை விற்பனை செய்யும் போது மத்திய வங்கியானது அதன் கையிருப்பு தங்கத்தையோ அல்லது கையிருப்பு நிதியையோ செலுத்தி விலைக்கு வாங்காது.மாறாக புதிதாக பணத்தை அச்சடித்து வழங்கி விலைக்கு பெறும்.
புதிதாக பணம் அச்சடிக்கப்பட்டால் ஏற்கனவே புழக்கத்திலுள்ள பணத்தின் மதிப்பு குறையும் எனபதை பலமுறை பதிவிட்டிருக்கிறேன் இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக மொத்தத்தில் புழக்கத்திலுள்ள பணத்தின் மதிப்பை குறைப்பதன் மூலம்(மக்களிடமிருந்துதிருடுவதன் மூலம்)கடன் பத்திரங்களை மத்திய வங்கி விலைக்கு வாங்கும்.
இப்போது அரசானது வணிக வங்கிகளுக்கு பதிலாக மத்திய வங்கிக்கு வட்டி செலுத்தும்.அதாவது மத்திய வங்கியானது மக்களை சுரண்டியதற்காக (முதலீடு செய்ததற்காக) அரசு வட்டி செலுத்தும்.
அரசு தான் செலுத்த வேண்டிய வட்டிக்காக அதிகப்படியான வரிகளை மக்கள் மீது சுமத்தி அதை வசூலிக்கும்.அதாவது மத்திய வங்கிக்கு அரசு செலுத்தும் வட்டி என்பது மக்களின் வரிப்பணமாகும்.
புதிய காகிதப்பணங்களை அச்சடித்து மத்திய வங்கியானது மக்களை சுரண்டியதற்காக மக்களின் வரிப்பணம் வட்டி வடிவத்தில் அரசால் மத்திய வங்கிக்கு வழங்கப்படும்.
ஆக மொத்தத்தில் கொள்ளைப்போன செல்வத்திற்காக கொள்ளையனுக்கு வட்டி செலுத்தம் முறை தான் காகித பணமுறை.
இது தான் மத்திய வங்கியின் சுரண்டும் முறை.
வணிக வங்கிகள் மக்களை சுரண்டாதா?
மத்திய வங்கியை விட பல மடங்கு சுரண்டும் fractional reserve lending என்ற கடனீதல் முறையில்....
இதைப் பற்றி புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் சிரமமான ஒன்று.அதை ஒரு சில பதிவுகளின் மூலம் விளக்கவும் முடியாது.
காகித பணத்தின் மூலம் உள்நாட்டு அரசும்,மத்திய வங்கியும் சுரண்டியதை இதுவரை கண்டோம்.
வரும் பதிவுகளில் உலக அமைப்புகள்(அமெரிக்க நிதி அமைப்புகள்) உலக மக்களை அதன் காகிதப்பணமான டாலர் மூலம் எவ்வாறு உலகை சுரண்டுகிறது என்பதனை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர்- பதிவு- 21; தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்:-https://e-funandjoyindia.blogspot.com/2020/11/21.html?spref=tw
Post a Comment