தஜ்ஜால் தொடர்-பதிவு- 27
தஜ்ஜாலும் போர்களும்
நேற்றைய தினம் தஜ்ஜாலின் எதிர்கால இரண்டு முக்கிய போர்கள் என்னவென்று அறிந்தோம்.
இந்த இரண்டு போர்களை பற்றியும் விரிவாக காண்பதற்கு முன்பு இந்த இரண்டு போர்களை பற்றிய முக்கிய தகவல்களை முதலில் காணலாம்.
மல்ஹமா மற்றும் தஜ்ஜால் தொடர்பான மிக முக்கிய ஹதிஸ்
இறைத்தூதர் கூறினார்கள்:
ஜெருசலம் வளர்ந்து (அரசியலில்) உச்சம் தொடும் போது யத்ரீப்(மதீனா)வலுவிழக்கும்.(உலக அரசியலில் மதீனாவிற்கு எந்த இடமும் இருக்காது.)
அவ்வாறு மதீனா வலுவிழக்கும் போது மல்ஹமா யுத்தம் ஏற்படும்.
மல்ஹமா யுத்தத்தின் முடிவில் காண்ஸ்டாண்டிநோபிள்(இன்றைய இஸ்தான்புல்) முஸ்லிம்களால் கைப்பற்றப்படும்.
இஸ்தான்புல் வெற்றிக்கொள்ளப்படும் போது தஜ்ஜால் தன்னை மீட்பராக பிரகடனப்படுத்துவான்.
இந்த ஹதிஸ் அறிவிக்கப்படும் போது மதீனா உலகின் (உலக அரசியலின்) முக்கியப்பகுதியாகவும் ஜெருசலம் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஒரு பகுதியாகவும் இருந்தது.
ஆனால் இன்று தூதரின் அறிவிப்பின் படி நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.மதீனா வீழ்த்துவிட்டது.ஜெருசலமும் ஆக்கிரமிப்பாளர்களின் தலைநகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஜெருசலம் உலக அரசியலில் தொடர்ந்து வளர்கிறது.
அதாவது மல்ஹமா யுத்தத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது.
யுத்தத்தின் முடிவில் காண்ஸ்டாண்டிநோபிள், முஸ்லிம்களில்- பனூ இஸ்ஹாக் கூட்டத்தாரால் கைப்பற்றப்படும்.அப்போது கோபத்தின் உச்சியில், தஜ்ஜால் தன்னை மீட்பராக பிரகடனப்படுத்துவான்.
மல்ஹமா யுத்தத்தின் முடிவில் தான் தஜ்ஜால் தன்னை மீட்பர் (Messiah)என்று அறிவிப்பான்.அதாவது அவனுடைய நான்காவது காலக்கட்டம்(நமது நாள் போன்ற அவனது நாள்) தொடங்கும்.
இந்த காலத்தில் அவனுடைய Space time மும் நம்முடைய Space timeமும் ஒன்றாக இருக்கும். இந்த கட்டத்தில் தான் அவனுடைய நேரடியான கொடுர தாக்குதலுக்கு நாம் உள்ளாக நேரிடும்.
இந்த மல்ஹமா யுத்தம் ஏழு ஆண்டுகள் நடைபெறும் என்று ஹதிஸ்கள் கூறுகின்றன.
இந்த ஹதிஸ் நமக்கு ஒரு ஆய்வை நோக்கி அழைத்து செல்கின்றது.
காண்ஸ்டாண்டிநோபிள்நகரை கைப்பற்றும் பனூ இஸ்ஹாக் என்பவர்கள் யார்?
நபி இஸ்ஹாக்(அலை) அவர்களுக்கு இரண்டு மகன்கள்(குர்ஆனில் தகவல் இல்லை இது பைபிளின் தகவல்)
1.ஈஸாவு
2.ஜேகப்பு(நபி யாகூப் (அலை) அவர்கள்)
நபி யாகூப் அவர்கள் தான் இஸ்ராயில் என்று அழைக்கப்படுகிறார்.இவரின் சந்ததிகள் தான் பனூ இஸ்ராயில்கள்.
அப்படியென்றால் ஈஸாவு என்ற மகனின் சந்ததிகள் தான் பனூ இஸ்ஹாக் ஆவார்கள்.
இவர்கள் இப்போது எங்கு உள்ளனர்?
நானும் என்னால் முடிந்தவரை முயற்சித்து விட்டேன்.பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை.கிடைத்த தகவல்களும் நம்பிக்கையான வகையில் இல்லை எனவே பனூ இஸ்ஹாக் கூட்டம் எங்கு உள்ளனர் என்பதை பற்றி இக்குழுவில் உள்ள அனைவரும் ஆய்வு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.இவர்கள் யார் என்று தெரிந்தால் தான் எந்த நாட்டினர் என்று தெரிந்தால் தான் உலக அரசியல் நகர்வுகளை மிகச்சரியாக கணிக்க முடியும்.
இந்த போரின் முடிவில் தஜ்ஜால் தன்னை மீட்பராக அறிவிப்பான் என்பது நமது நம்பிக்கையாக இருப்பது போல் யூதர்களும் சில நிகழ்வுகளுக்கு பின்பு தான் மீட்பர் வெளிப்படுவார் என்று நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கைகளை பற்றி இன்ஷா அல்லாஹ் நாளை காணலாம்.
பதிவு நாளை தொடரும்............
தஜ்ஜால் தொடர்- பதிவு- 26; தஜ்ஜாலும் போர்களும்- தஜ்ஜாலுடைய கடந்த கால மற்றும் எதிர்கால போர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் நாம், போர்களின் பொதுவான வகைகளை அறிந்து கொள்ள வேண்டும்:-. https://e-funandjoyindia.blogspot.com/2020/11/26.html?spref=tw
Post a Comment