KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw
கமல் 60 நிகழ்ச்சி, கமலுக்கு நடந்த அறுவைசிகிச்சை, தற்போது ஈ.வி.பி-யில் நடந்த கோர விபத்து என 'இந்தியன் 2' படத்துக்கு பிரச்னைகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால், படக்குழு திட்டமிட்டு வைத்திருக்கும் `2021, பொங்கல்’ என்கிற ரிலீஸ் தேதி தாமதமாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார் கமல்.
சமீபத்தில் ஈ.வி.பி-யில் நடந்த விபத்துக்குப் பிறகு, படப்பிடிப்பை எப்போது ஆரம்பிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்க, படப்பிடிப்பை நின்ற இடத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாராம் ஷங்கர்.
ஆனால், இந்த விபத்தின் வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டிருப்பதால், சில நாள்களுக்குப் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம் தயாரிப்பாளர் `லைகா’ சுபாஸ்கரன். அதுமட்டுமல்லாமல், பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வந்த செட் வேலைகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டாராம். இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த பிறகுதான், படப்பிடிப்பு ஆரம்பிப்பதைக் குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, செட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது மற்றும் காயமடைந்தவர்களுக்குக் கமல் சார்பில் 3 கோடியும், லைகா சார்பில் 2 கோடி மற்றும் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டது.
இந்த விபத்து நடந்ததும் தயாரிப்பு தரப்பிற்குக் கமல் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ’இந்த விபத்திற்கான முழுப் பொறுப்பையும் தயாரிப்பு தரப்பே ஏற்கவேண்டும். மற்றும் காயமடைந்தவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தகுந்த உதவியைச் செய்வது, தயாரிப்பு தரப்பின் கட்டாயமாகும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த தயாரிப்பு தரப்பு, ’உங்கள் கடிதம் எங்களுக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே 2 கோடி மற்றும் மருத்துவச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மற்றும் இந்தப் படப்பிடிப்பு இயக்குநர் ஷங்கர் மற்றும் உங்களின் மேற்பார்வையில்தான் நடந்தது என்பதை நாங்கள், உங்களுக்கு நினைவுக்கூர வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியது. இது போக, படம் குறித்த சில அப்டேட்ஸ் கீழே....
ஷங்கர் - பீட்டர் ஹெய்ன் காம்போவில் உருவான `அந்நியன்’ படத்தில் நூற்றுக்கணக்கான ஃபைட்டர்களை வைத்து ஒரு சண்டைக்காட்சியை வடிவமைத்ததுபோல் `இந்தியன் 2’ படத்திலும் சில சண்டைக்காட்சிகளைப் பிரமாண்டமாகப் படமாக்கயிருக்கிறார்கள்.
500-க்கும் மேற்பட்ட ஃபைட்டர்களை இந்தச் சண்டையை வடிவமைத்திருக்கிறாராம் பீட்டர் ஹெய்ன். பீட்டர் ஹெய்னைத் தவிர சில ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்களும் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
`இந்தியன்’ படத்தில், டெலிபோன் பூத்தில் இந்தியன் தாத்தா போன் பேசுவதுபோல் படம் முடியும். தற்போது படமாக்கி வரும் இரண்டாம் பாகம், அந்த டெலிபோன் சீனில் இருந்துதான் தொடங்குமாம். அந்த டெலிபோன் சீனையும், அதற்கடுத்து இந்தியன் தாத்தா என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையும் சீனாவில் படமாக்க நினைத்த ஷங்கர், அதற்காக லொகேஷன்களைப் பார்த்து ஃபைனலும் செய்துவிட்டாராம். ஆனால், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்தக் காட்சிகளை இத்தாலியில் படமாக்கலாம் என நினைத்திருக்கிறாராம் ஷங்கர்.
இந்தியன் தாத்தாவின் கெட்டப்புக்காக முதலில் போடப்பட்ட மேக்கப், கமலின் முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்தியதால், அந்த சமயத்தில் படப்பிடிப்பில் ஓர் இடைவெளி ஏற்பட்டது. பிறகு, படத்தின் பட்ஜெட்டை இறுதி செய்வதில் ஷங்கர் தாமதப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.
இந்தியன்' படத்தின் முதல் பாகத்தில் இருந்தது போலவே, இரண்டாம் பாகத்திலும் சேனாபதி கேரக்டருக்கு இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றங்களும் இருக்கிறதாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து முதுமையான தோற்றத்தின் காட்சிகளை மட்டுமே படமாக்கியவர்கள், அறுவை சிகிச்சைக்காக கமல் சென்று வந்த பிறகு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய, சேனாபதி கேரக்டரின் இளவயது போர்ஷனை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த கமல், இளவயது கேரக்டருக்காக உடம்பையும் குறைத்திருந்தார்.
ஈ.வி.பி விபத்தும் பின்விளைவுகளும், தாமதமாகும் படப்பிடிப்பு, 2021 பொங்கலுக்கு வருமா இல்ல தாமதமாகுமா? `இந்தியன் 2' ஸ்டேடஸ் அப்டேட்!
February 27, 2020
Cine News