HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 1 November 2020

தஜ்ஜால் தொடர் பதிவு-20; தஜ்ஜாலின் பித்னாக்கள் - தஜ்ஜாலின் பொருளியல் சீர்கேடுகள் -காகிதப்பணம்(Fiat Currency):-

 தஜ்ஜால் தொடர் பதிவு-20

தஜ்ஜாலின் பித்னாக்கள் -
தஜ்ஜாலின் பொருளியல் சீர்கேடுகள் -காகிதப்பணம்(Fiat Currency)
தஜ்ஜாலின் பொருளியல் பித்னாக்களை அறிந்து கொள்ளும் முன் நாம் இரண்டு மிக முக்கிய ஹதிஸ்களை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஹதிஸ்:1
மழையளவு படிப்படியாக குறைந்து மழைப்பொழிவு முற்றிலும் நின்றுவிட்ட,கடும் வறட்சியான காலத்தில் தஜ்ஜாலின் வெளிப்படுதல் இருக்கும்.(நமது நாள் போன்ற அவனது நாள் தொடங்கும்)
ஹதிஸ்:2
தஜ்ஜால் தன்னுடன் மலை உயரத்திற்கு இணையான அளவில் ரொட்டி துண்டுகளை வைத்திருப்பான்.(கணக்கிட முடியாத, அளவில்லாத செல்வம் அவனிடம் இருக்கும்).அவனுடைய ரொட்டி துண்டிற்காக மக்கள் அவனை பின் தொடர்வார்கள்.
மக்களின் உழைப்பை சுரண்டி அதன் மூலம் அதிகப்படியான மலையளவு செல்வங்களை தஜ்ஜால் அடைவான்.இதற்காக அவன் கண்டுபிடித்த ஆயுதம் தான் காகிதப்பணம்.
தஜ்ஜாலின் மிக முக்கிய அடியாட்களான ரோத்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய வங்கியின் காகிதப்பணம் ஹராமானது ஆகும்.
காகிதப்பணம் ஹராமானது என்பதை புரிந்துக்கொள்வதற்கு நாம் முதலில் காகிதப்பணத்தின் வரலாற்றையும் அது செயல்படும் முறையை பற்றியும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
இன்னும் சொல்லப் போனால் அரசின்(மத்திய வங்கியின்) காகித பணமும் (Legal tender) கள்ள நோட்டும் (Fake currency) ஒன்று தான்.
இரண்டிற்குமான ஒற்றுமை:
மக்களின் செல்வங்களை உழைப்பை சேமிப்பை எந்த வகையான மன உறுத்துதலுமின்றி அயோக்கியதனத்துடன் திருடுவதற்காக அச்சிடப்படும் உள்ளார்ந்த மதிப்பற்ற வெற்று காகிதங்கள்.
இரண்டிற்குமான வேற்றுமை:
மக்களின் செல்வத்தை திருடுவது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மத்திய வங்கியா?
இல்லை தனி நபரா? என்பதில் மட்டுமே வேற்றுமை.
கடந்த 150 ஆண்டுகளாக நாடுகள் என்ற பேதத்தை கடந்து கட்சிகள் என்ற பேதத்தை கடந்து தலைவர்கள் என்ற பேதத்தை கடந்து உலக மக்களின் செல்வத்தை சுரண்டி , தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமாக்கப்பட்ட ஊழல் தான் காகிதப்பணம்(Fiat currency or legal tender).
காகிதப்பணம் எவ்வாறெல்லாம் நம்மை சுரண்டுகிறது என்பதை பற்றி நாம் புரிந்து கொண்டால் தான் காகிதப்பணம் ஏன் ஹராமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கம்,வெள்ளி,செம்பு, போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட, உள்ளாரந்த மதிப்பு கொண்ட, நாணயங்களை (உண்மையான பணம்) கொண்டு வணிகம் செய்யப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த பண முறையை monetary economics ல் commodity money என்று கூறுகிறார்கள்.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் சீன அரசர்கள் காகித பணத்தை அறிமுகப்படுத்தினர். அன்றைய சீன அரசர்கள் அரசு முத்திரை பொறிக்கப்பட்ட, மதிப்பு எழுதப்பட்ட, அரசு சான்றிதழை தங்கம் மற்றும் பட்டு ஆகிய commodity moneyக்கு பிரதியாக அறிவித்து புழக்கத்திற்கு கொண்டு வந்தனர்.இதை பெற்று கொள்பவர் தங்களுக்கு தேவைப்படும் போது வங்கியில் செலுத்தி அதற்கு ஈடான தங்கத்தையோ பட்டினையோ பெற்றுக்கொள்ளலாம் இன்று நாம் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக் கொள்வது போல்..
இந்த காகிதப்பண முறையை சீன அரசர்கள் அறிமுகப்படுத்தியிருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து மத்திய வங்கியால் தான் மிகவும் பிரபலப்படுத்தப்பட்டது.இந்த வங்கியால் வழங்கப்படும் சான்றினை(காகித பணத்தினை) தேவைப்படும் நேரத்தில் வங்கியில் செலுத்தி அதற்கு ஈடான தங்கத்தினை பெற்று கொள்ளலாம் (Backed by gold).சுருக்கமாக கூறினால் தங்க நாணயங்களுக்கான காசோலையாகத்தான் காகிதப்பணம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதை monetary economics ல் representative money என்று கூறுவார்கள்.
இதன் தொடர்ச்சியாக FIAT CURRENCY என்ற, எந்த வகையான உத்தரவாதமுமில்லாத இன்று நாம் பயன்படுத்தும் காகிதப்பணம் நடைமுறைக்கு வந்தது.
இந்த காகித பணமுறையில் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஏமாற்று வேலைகளை பற்றியும் காணலாம்.
Commodity moneyக்கு(தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு) மாற்றாக representative currency (தங்க மாற்றீடு காகிதப்பணம்) புழக்கத்திற்கு வந்த வரலாற்றை பதிவில் கண்டோம்.
காகிதபணம் தங்கத்திற்கான காசோலையை போல தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் நாளடைவில் படிப்படியாக பணத்திற்கு மாற்றாக தங்கம் மறுக்கப்பட்டது.
முதலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு தான் , தங்கம் மாற்றீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு குறிப்பிட்ட மதிப்புள்ள காகிதப்பணத்திற்கு மட்டும் தங்கம் மாற்றீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு அனைத்து மக்களுக்கும் வழங்கிய மாற்றீடு உரிமையினை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் என்று சுருக்கப்பட்டது.
நாளடைவில் அனைத்து தரப்புக்கும் தங்கம் மத்திய வங்கிகளால் மறுக்கப்பட்டது.
ஏன் மறுக்கப்பட்டது?
ஏமாற்று பேர் வழிகள் தங்கள் கணக்கில் பணமே இல்லாத போதும் காசோலை வழங்குவது போல மத்திய வங்கியும், அரசும்,தங்களிடம் gold reserve இல்லாமலேயே காகித பணத்தை அதிக அளவில் புழக்கத்தில் விட்டன.குறிப்பாக போர் காலங்களிலும், deficit spending காலங்களிலும் செலவுகளை சமாளிப்பதற்காக, கையிருப்பு தங்கம் இல்லாமலேயே அதிக அளவில் காகிதப்பணத்தை புழக்கத்திற்கு கொண்டு வந்தன.
இது போன்ற சூழலில் காகிதபணத்திற்கு தங்கத்தினை மாற்றீடு செய்யமுடியாத காரணத்தால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியினை அரசும்,மத்திய வங்கியும், காற்றில் பறக்கவிட்டு தங்கத்தினை மறுத்தது.இருப்பினும் காகித பணமுறையை காப்பாற்றுவதற்காக காகித பணத்தினை அரசுக்கு செலுத்த வேண்டிய வரியாகவும் இதர கட்டணமாகவும் செலுத்தலாம் என்று அறிவித்தது.
அதாவது currency backed by gold என்று இருந்ததை currency backed by taxes என்று மாற்றியது.
காகிதப்பணத்தின் புழக்க அளவு என்பது தங்க கையிருப்பினை சார்ந்தது என்ற நிலையை மாற்றி பணத்தின் புழக்க அளவு மற்றும் மதிப்பு என்பது அரசின் உத்தரவாதத்தை சேர்ந்தது என்று மாற்றியமைக்கப்பட்டது. (currency value is based on not by gold or silver only by government decree).இவ்வாறாக தான் representavive money(தங்கத்தினை மாற்றீடு செய்யும் காகிதப்பணம்) Fiat currency யாக(அரசின் மீதான நம்பக பணம்)ஆக மாற்றப்பட்டது.
தங்கம் மாற்றீடாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அரசின் மீதும் மத்திய வங்கியின் மீதும் வேறு வழியில்லாமல் மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்ததால் Fiat currency(வெற்று காகிதப்பணம்) நிலைப்பெற்றது.
இந்த வெற்று காகிதப்பணத்தின் மூலம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நாளை சில எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......`

தஜ்ஜால் தொடர் -பதிவு-19, தஜ்ஜாலின் பித்னாக்கள்; தஜ்ஜாலும் நவீன மகளிரும்; பெண்கள் தான் ஆண்களை விட தஜ்ஜால் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/19.html?spref=tw



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com