தஜ்ஜால் தொடர் -பதிவு-23
தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்-அமெரிக்க டாலர்கள்
கடந்த தொடர்களில் நாம் காகிதப்பணத்தின் ஏமாற்று வித்தைகளையும் சுரண்டல்களையும் கண்டோம்.
உலகளாவிய காகிதப்பணமான அமெரிக்க டாலரை பற்றியும் அதன் வரலாறையும் நாம் தெரிந்து கொண்டால் தான் காகிதப்பணத்தின் மோசடியை நாம் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
அமெரிக்க அரசு நிறுவப்பட்ட போது அது பல சிறப்பான கொள்கைகளை கொண்டிருந்தது.அந்த சிறப்பான கொள்கைகளில் ஒன்று தான் மத்திய வங்கி அமைப்பு முறைக்கான தடை.
1700 களிலேயே அமெரிக்கா நிறுவப்பட்ட போதிலும் 1913 வரையிலும் மத்திய வங்கி என்ற ஒன்றை அது கொண்டிருக்கவில்லை.
1913க்கு பின் தான் அதன் பொருளாதார கொள்கைகளை அமெரிக்கா காற்றில் பறக்கவிட்டு பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கியை தொடங்கியது.
1792 ஆம் ஆண்டு அமெரிக்க நாணய சட்டத்தின் படி
1 அமெரிக்க டாலர் என்பது 1.604 கிராம் அளவு கொண்ட தங்க நாணயம் ஆகும்.
அல்லது
1 அமெரிக்க டாலர் என்பது 24.10 கிராம் அளவு கொண்ட வெள்ளி நாணயம் ஆகும்.
இந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அரசால் வெளியிடப்பட்டு அமெரிக்க மக்களால் பணமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க உள்நாட்டு கலகம் ஏற்பட்ட போது தான் அமெரிக்க அரசு தன் செலவினங்களுக்காக காகித பண முறையை தீவிரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
அமெரிக்க அரசும் தனியார் வங்கிகளும் காகிதப்பணத்தை வெளியிட்டன.
மத்திய வங்கி என்ற ஒன்று 1913 வரையிலும் அமெரிக்காவில் ஏற்படுத்தப்படாததால் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வகையில்(separate design) காகிதப்பணத்தை வெளியிட்டன.
இந்த காகிதப்பணத்தை தங்கள் வசம் வைத்துள்ள மக்கள் தங்களுக்கு தேவைப்படும் போது காகிதப்பணத்தை வங்கிகளில் சமர்பித்து அதற்கான தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
1900களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பின் அமெரிக்க அரசு தனியார்(பெரு முதலாளிகள்)கட்டுப்பாட்டில் இயங்கும் பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கியை நிறுவியது. அமெரிக்க மக்களின் அடிமை வாழ்வும் தொடங்கியது.
1933 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஒரு விசித்திரமான சட்டத்தை பிறப்பித்தான்.
அதன்படி அமெரிக்க மக்கள் யாரும் தங்களுடைய கைகளில் (கட்டுப்பாட்டில்) துளியளவு தங்கமும் வைத்துக் கொள்ளக்கூடாது.தங்கத்தினை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து அதற்கு இணையான காகிதப்பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
இந்த விசித்திரமான சட்டம் வெகுவிரைவில் இந்தியாவில் மோடியால் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த சட்டத்தை மீறும் அமெரிக்கர்களுக்கு மூன்றாண்டு சிறையும் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் மூலம் இரண்டு அயோக்கியதனத்தை அமெரிக்க அரசு செயல்படுத்தியது.
1.ஏற்கனவே புழக்கத்திலிருத்த காகிதப்பணத்திற்கான மாற்றீடு தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
2.மக்களின் கையிருப்பு தங்கத்தையும் கைப்பற்றி மதிப்பற்ற காகிதப்பணத்தை மக்களிடம் வழங்கியது.
அமெரிக்க அரசு மக்களிடம் 1 அவுன்ஸ்(30 கிராம்) தங்கத்திற்கு 20 டாலர் என்று நிர்ணயித்து தங்கத்தை பெற்றுக்கொண்டது.
மக்களிடமிருந்த அனைத்து தங்கத்தையும் கைப்பற்றிய பின்பு அமெரிக்க அரசு அதன் மக்களுக்கு வரலாற்றில் மன்னிக்கவே முடியாத மாபெரும் துரோகத்தை, அயோக்கியதனத்தை செய்தது.பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க மக்கள் மீது நிகழ்த்தியது.
அமெரிக்க மக்களின் கையிருப்பு தங்கம், அமெரிக்க அரசால் கைப்பற்றப்பட்டதையும், 1 அவுன்ஸ்(30கிராம்) தங்கத்திற்கு 20 டாலர் விலையாக வழங்கப்பட்டதையும் கண்டோம்.
அமெரிக்க மக்களிடமிருந்த அனைத்து தங்கமும் கைப்பற்றப்பட்ட பின்னர் அமெரிக்க அரசு தங்கத்தின் விலையை 35 டாலராக மறு நிர்ணயம் செய்த்து.
இந்த மறு நிர்ணயத்தின் மூலம் அமெரிக்க மக்களின் செல்வம் 40% கொள்ளையடிக்கப்பட்டது.
எப்படி?
1933 மார்ச் மாதம் X என்ற அமெரிக்கர் ஒருவர், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இடம் 2அவுன்ஸ் தங்கம் (60 கிராம்) தங்கத்தினை ஒப்படைத்து, 40 டாலரை தங்கத்திற்கான விலையாக பெற்றுக் கொள்கிறார்.
1933 ஏப்ரலில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கான விலையை 35 டாலராக நிர்ணயிக்கிறது அமெரிக்க அரசு.
தற்போது X என்ற மனிதர் தான் ஏற்கனேவே ஒப்படைத்த இரண்டு அவுன்ஸ்(60 கிராம்) தங்கத்திற்கான 40 டாலர்களை கொண்டு மீண்டும் புதிய தங்கத்தினை அரசிடம் இருந்து பெற விரும்பினால் அவரால் 1.2 அவுன்ஸ் (36 கிராம்) தங்கம் மட்டுமே பெற முடியும்.
மார்ச் மாதத்தில் 60 கிராம் தங்கத்தை ஒப்படைத்து பெற்ற 40 டாலரால் (காகிதப்பணத்தால்) ஏப்ரல் மாதத்தில் 36 கிராம் தங்கம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறாக ஒரு சிறிய விலை மாற்ற அறிவிப்பால் டாலரின் மதிப்பை 40% குறைத்து மக்களின் 40% தங்கத்தை கொள்ளையடித்து பெடரல் ரிசர்வ் இடம் ஒப்படைத்தது அமெரிக்க அரசு.
பெடரல் ரிசர்வ் அமைப்பு அரசு நிறுவனம் கிடையாது.இதன் முதலீட்டில் 50% பங்குகளை வைத்திருப்பது ரோத்சைல்ட் குடும்பம்.
தஜ்ஜாலின் முக்கிய அடியாளான ரோத்சைல்ட் இடம் அமெரிக்க மக்களின் 40% செல்வத்தினை ஒப்படைத்தது அயோக்கிய அமெரிக்க அரசு.
அமெரிக்க மக்களை சுரண்டிய பின் உலக மக்களை சுரண்ட முடிவு செய்தது அமெரிக்க அரசும் ரோத்சைல்ட் குடும்பமும்.
உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட பேரிழப்பால் பிரிட்டிஷ் தன் முதலிடத்தை இழந்தது. அந்த இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது.
தஜ்ஜால் தன்னுடைய ஒரு வருடம் போன்ற நாளை வெற்றிகரமாக முடித்து ஒரு மாதம் போன்ற நாளுக்குள் நுழைந்தான்.
போரில் பிரிட்டன் மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவிடம் வாங்கிய கடன்களுக்காக (ஆயுதங்களுக்காக) தங்கள் நாட்டின் இருப்பு தங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்தன.
அதாவது டாலர் மதிப்பை மற்ற எந்த நாடுகளின் பணத்தாலும் நெருங்க முடியவில்லை.
இறுதியாக ப்ரட்டன் உட்ஸ் உடன்படிக்கையின் மூலம் உலக வங்கியும்(World bank) பன்னாட்டு நிதி முனையமும் ஏற்படுத்தப்பட்டு (IMF) அமெரிக்கா உலகப்பணமாக(உலகளாவிய பரிமாற்றங்களுக்கான காகிதமாக) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா செய்த அயோக்கியதனத்தையும் , பெட்ரோ-டாலர் என்ற புதிய பணத்தின் பிறப்பையும் நாளை காணலாம்.
இன்ஷாஅல்லாஹ் பதிவு நாளை தொடரும்..........
தஜ்ஜால் தொடர் -பதிவு-22; தஜ்ஜாலின் பித்னாக்கள்-காகிதப்பணம் காகிதப்பணத்தின் படு மோசடியான அமைப்பு முறை மற்றும் செயல்முறை:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/22.html?spref=tw
Post a Comment