தங்களது விருப்ப நாயகனின் வெற்றி படங்களை கொண்டாட ரசிகர்களுக்கு பல காரணங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் தற்போது அஜித் ரசிகர்கள் சரவண சுப்பையா இயக்கத்தில் அவர் நடித்த சிட்டிசன் படத்தை பற்றி பேசி வருகின்றனர்.
ஏனெனில் சிட்டிசன் படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இதனால் வழக்கம் போல் டுவிட்டரில் ரசிகர்கள் #16YrsOfMegaBlockbusterCITIZEN என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு முன் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து சரவண சுப்பையா பேசியிருக்கிறார். அதில் அவர், ஒரு புதுமுக இயக்குனர், இவ்வளவு பெரிய படத்தை செய்கிறாரே என்று பார்க்காமல் கதையை நம்பி இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் இல்லையென்றால் சரவண சுப்பையா என்ற இயக்குனர் இல்லை.
அத்திப்பட்டி காட்சிகளுக்காக அவ்வளவு வெள்ளையாக இருக்கும் அவர் கடுமையான மேக்கப் போட்டிருந்தார். பல் மாட்டியிருந்தார், தன்னுடைய உடலமைப்புக்காக மெனக்கெடுத்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அவர் சில வசனங்கள் மிகவும் தெளிவாக வர வேண்டும் என்று என்னை அடிக்கடி கேட்டு வசனங்களை பேசி பழகுவார்.
Post a Comment