HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 22 June 2017

பூமியை எப்போது வேண்டுமானாலும் விண்கல் தாக்கலாம்.. பல நகரங்கள் சாம்பலாகும் அபாயம்..!



பெல்பாஸ்ட், பிரிட்டன்: மிகப் பெரிய விண்கல் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது தவிர்க்க முடியாதது என்றும் இந்த தாக்குதலால் பல நகரங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூன் 30ம் தேதி சர்வதேச விண்கல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த விண்கல் தாக்குதல எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், அதைத் தவிர்ப்பது இயலாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து பிரிட்டனின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆலன் பிட்ஸிம்மன்ஸ் கூறுகையில், இது நடக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது நடக்கப் போகிறது என்ற கேள்வி மட்டுமே நம் முன் தற்போது உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இது நடைபெற வாய்ப்புளளதாக தெரிவித்தார். 




விண்கல் தினம் கடந்த 1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில் உள்ள டுங்குஸ்கா என்ற இடத்தில் சிறிய அளவிலான விண்கல் வெடித்துச் சிதறி விழுந்தது. இதில் பல ஆயிரம் மரங்கள் சாம்பலாயின. கிட்டத்தட்ட 2000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பாதிப்பு இருந்தது. பூமியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய விண்கலம் சம்பவம் இதுதான். இந்த நாளைத்தான் விண்கல் தினமாக அனுசரிக்கிறார்கள்.த லக்சம்பர்க்கில் மாநாடு இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி சர்வதேச விண்கல் தினத்தன்று லக்சம்பர்க்கில் மாநாடு நடைபெறவுள்ளது. அப்போது புதிய விண்கல் தாக்குதல் அபாயம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான மக்களின் சந்தேகங்களையும் விஞ்ஞானிகள் லைவ் ஆக விளக்கப் போகின்றனர். என்ன சைஸ் விண்கல் பிட்ஸிம்மன்ஸ் மேலும் கூறுகையில் தாக்குதல் நடத்தப் போகும் விண்கல் என்ன சைஸ் என்பதைச் சொல்ல இயலவில்லை. இருப்பினும் சைபீரியாவில் விழுந்ததை விட பெரிதாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு பெரிய நகரத்தையே அழிக்கக் கூடிய அளவுக்கு அதன் பாதிப்பு இருக்கலாம். இதை விட பெரிதாக இருந்தால் பல நகரங்கள் அழியும், புல் பூண்டு கூட மிஞ்சாது. தலைக்கு மேல் அபாயங்கள் பூமியைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஆபத்தான விண் பொருட்கள் இருக்கத்தான் செய்கின்றன. கிட்டத்தட்ட 1800க்கும் மேற்பட்ட அபாயகரமான விண்கற்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் இதற்கு மேலும் பல அபாயங்கள் நமக்குத் தெரியாமலேயே உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆபத்து வராது என நம்புவோம் டுங்குஸ்கா போன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்று நம்புவோம். இருப்பினும் நம்மையும் மீறிய செயல் இவை என்பதால் இதையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். இருப்பினும் பூமியை நெருங்கும் முன்பே அது எங்கு தாக்குதல் நடத்தும் என்பதை நம்மால் கண்டறிய முடியும்.. அந்த அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. எனவே நாம் தயார் நிலையில் இருக்க முடியும் என்றார் அவர். செக் விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை ஏற்கனவே செக் விஞ்ஞானிகள் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். இப்போதுதான் இது மிகப் பெரிய இடத்திலிருந்து வந்துள்ளது. இருப்பினும் நாசா இதுவரை இதை உறுதிப்படுத்தவில்லை. அது விழும்போது விழட்டும்.. நாம் செல்போனுடன் காத்திருப்போம் செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட!

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com