HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 12 June 2017

மக்களே இதையெல்லாம் செய்தீர்களா..? இல்லாட்டி உடனே செஞ்சிடுங்க..!

நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி, மாதம் பல கோடிக்குப் பிஸ்னஸ் செய்பவராக இருந்தாலும் சரி, இந்த நிதி சார்ந்த விஷயங்களை முறையாகவும், உடனடியாகவும் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் அவசர காலங்களில் வங்கிகள் முதல் அனைத்து இடத்திலும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு உருவாகும். மத்திய அரசு ஆதார் எண்ணை அனைத்து இடத்திலும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் மக்கள் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைத்தையும் தாண்டி சாமானியர்கள் அனைவரும் கண்டிப்பாகச் செய்தாக வேண்டிய அடிப்படை நிதி சார்ந்த விஷயங்களையே இப்போது பார்க்கப்போகிறோம்.

1) வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு படி 1: உங்கள் வங்கி கணக்கிற்கு இணைய வங்கி சேவை வசதி இருந்தால் அதனில் உள்நுழையவும். படி 
2: அதில் ‘Update Aadhaar card' அல்லது ‘Aadhaar card seeding' என்ற இணைப்பு இருக்கும். இதனை அழுத்தவும், படி 3: இப்போது அதில் இருக்கும் ஆதார் கார்டு எண் மற்றும் இதர விபரங்களை உள்ளீடு செய்யவும். படி 4: வெரிபிகேஷன் செய்யப்பட்ட பின்பு, அதற்கான உறுதி தகவல் எஸ்எம்எஸ் வாயிலாகவோ அல்லது ஈமெயில் வாயிலாகவோ உங்களுக்குக் கிடைக்கும். இது வெறும் 5 நிமிட வேலை என்பது குறிப்பிடத்தக்கது.  

 2) பான் கார்டு உடன் ஆதார் இணைப்பு படி 1: முதலில் www.incometaxindiaefiling.gov.in இந்த இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். இதன் பின் இங்கு Services பிரிவின் கீழ் இருக்கும் Link Aadhaar என்பதைத் தட்டுங்கள். படி 2: இதன் பின் பான் கார்டு மற்றும் ஆதார் எண் விபரத்தையும், உங்கள் பெயரையும் குறிப்பிடவும். படி 3: பான் கார்டு மற்றும் ஆதார் கார்டிலில் இருக்கும் விபரங்கள் ஒன்றாக இருந்தால் இரண்டும் இணைக்கப்பட்டு UIDAI அமைப்பிடம் இருந்து உறுதி தகவல் உங்களுக்குக் கிடைக்கும்.   

3) வருமான வரி கணக்கு இருந்தால்.. நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் அல்லது வருமான வரி கணக்கு வைத்திருந்தால், வருமான வரித் துறையின் இணையத் தளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள். படி 1: உள்நுழைந்த உடன் ‘Profile Settings' என்பதைக் கிளிக் செய்து ‘Link Aadhaar' என்பதைத் தேர்வு செய்யுங்கள். படி 2: இங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை ஆதார் எண் தகவல் உடன் ஒப்பிட்டு சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுக்குச் சரிபார்க்கும் captcha கடவுச்சொல் தெரியும் அதனை உள்ளிடவும். படி 3: அனைத்தும் உறுதியான பின்பு இணைக்கப்பட்டது என்று பாப் அப் செய்தி வரும். 

  4) ஆதார் தகவல் உங்கள் ஆதார் எண் மாற்ற வேண்டுமெனில் UIDAI இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதில் சரியான தகவல்களைப் பதிவு செய்து, இதனை அடையாள சான்று உடன் Enrolment சென்டரில் சமர்ப்பிக்க வேண்டும். 10 நாட்களில் இது அப்டேட் செய்யப்படும். 

5) ஆதார்-இல் மொபைல் எண் மாற்றம் ஆதார் அட்டைக்கான மொபைல் எண் மாற்றப்பட வேண்டுமெனில் UIDAI இணையத்தளத்திற்குச் சென்று, ஆதார் எண்ணை பதவு செய்து மொபைல் எண்ணை பதிவிடவும். இதன்பின் ஒடிபி வரும். இதன் பின் அதனை அப்டேட் செய்து அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை இனைத்துக்கொள்ளலாம். ஜூன் 16 முதல் இந்தியா முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம்..! கூகிள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்க சென்ற முனாப் கபாடியா..! அதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய ஜடியா.. இப்போ இதுதான் டிரென்ட்..! Featured Posts 

6) வருமான வரி தாக்கல்.. இது வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டிய காலம் எண்பதால், வருமான வரி தாக்கல் செய்யத் தாயராக இருக்க வேண்டும். இதற்காக என்ன செய்ய வேண்டும். படி 1: முதலில் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் இருக்கும் பார்ம் 16 பெற்றுக்கொள்ளுங்கள். படி 2: உங்கள் TDS நிலையைச் சரிபார்க்கவும், இதற்காக வருமான வரித்துறை இணையத்தளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து ‘My account' என்பதைக் கிளிக் செய்து ‘View Form 26AS' என்பதில் உங்களுக்காகன வரி நிலுவையைச் சரிபார்க்கவும். படி 3: இதனுடன் பிற செலவுகள் மற்றும் வருமானத்தின் தரவுகளைத் தயாராக வைத்திருங்கள். படி 4: வருமான மற்றும் செலவுகள் போக மீதமுள்ள வருமானத்திற்கு வரியை கணக்கிட்டு உறுதி செய்துகொண்ட பின்பு வரியை செலுத்தவும்.   

7) FATCA இணக்கம்.. 2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு போன்றவற்றைச் செய்திருந்தால் அதற்குச் சுய ஒப்புதல் பெற வேண்டும். FATCA என்பது தான்னிசையாக நிதி விவரங்களை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பகிரக்கூடிய ஒரு வழிமுறையாகும். இந்திய நிதி நிறுவனங்கள் இந்திய வரி அதிகாரிகளுக்குத் தேவையான விவரங்களை அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் பின்னர் அமெரிக்காவிற்கு இந்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

Read more at: http://microify.com/33wc

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com