நடிகர் விஜய் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். விஜய் குறித்த பழைய நினைவுகளை விஜய் நெருங்கிய நண்பர் நடிகர் தாமு கூறியதாவது: நடிகர் விஜய் வளர்ச்சி குறைவு தான்.. இன்னும் அவரின் வளர்ச்சியை தமிழகம் விரைவில் காண உள்ளது
எனக்கு 2வது படம் நாளைய தீர்ப்பு, அந்த படத்தில் ஹீரோவாக விஜய் நடித்தார். நாளைய தீர்ப்புக்கும் விஜய்க்கு மெர்சல் விஜய்க்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது. இன்றும் அப்படித்தான் இருக்கிறார். விஜய் சினிமாவில் மட்டும் நடிகன். நிஜவாழ்வில் பெற்றோர்களுக்கு நல்ல மகன், சிறந்த நண்பன், சிறந்த தந்தை, சக நடிகர்களை பாராட்டும் குணம் கொண்டவர், விஜய்க்கு சிம்பு டான்ஸ் ரொம்ப பிடிக்கும்.
படப்பிடிப்பில் நாங்கள் சொதப்பல் செய்தால் விஜய் விழுந்து விழுந்து சிரிப்பார். கில்லி படம் விஜய்க்கு பெரிய மைல் கல் அந்த படத்திற்கு அப்புறம் என்னை நரி என்று தான் விஜய் அழைப்பார். அஜித் விஜய் நல்ல நண்பர்கள், அஜித் படத்தை விஜய் விரும்பி பார்ப்பார். பல நாள்காக விஜய் தனது செல்போனில் பில்லா பாடலை ரிங்டோனாக வைத்து இருந்தார். பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளை விஜய் இன்னும் செய்து வருகிறார்.
அரசியலுக்கு விஜய் வர ரசிகர்கள் நினைத்தால் அவர் வாழும் ஊரில் முதலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. திருவனந்தபுரத்தில் அப்துல்கலாம் ஐயாவை விஜய் சந்திப்பதாக இருந்தது.சூழ்நிலை காரணமாக அது நடக்காமல் போனது இது தான் என்னுடைய வருத்தம்,
விஜய்க்கு கடவுள் பக்தி அதிகம்.எனக்கு ஜுராசிக் பார்க் மிமிக்ரி ஜடியா கொடுத்தது விஜய். நண்பர்களை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டு குணம் விஜய்க்கு உண்டு, நான் நடத்தும் மாணவர்கள் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால் எனக்கு பெருமையாக இருக்கும் என்றார் தாமு..
Post a Comment