முஸ்லிம்களுக்கு மம்தா பானர்ஜியின் அன்பான எச்சரிக்கையும்... அறிவுரையும்...!
ஆளும் பி.ஜே.பி அரசாங்கம் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் மம்தா பானர்ஜீ
மேலும் அவர் கூறுகையில் சமுதாய வலைத்தளங்களில் பி.ஜே.பி'யினர் முஸ்லீம் மக்களை சண்டைக்கு இழுக்கும் வண்ணம் செயல் பட்டு வருகின்றனர், அவர்களின் வலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். அவர்கள் உங்களை சண்டைக்கு இழுத்து உங்களை மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்த பார்க்கிறார்கள், எனவே ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அவர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள்"
மேலும் அவர் கூறுகையில் " இந்தியா ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம் ஆகும். இங்கே பல மதங்களை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒரு சகோதரருக்கு பிரச்சனை என்றாலும் அது மற்ற அனைவரையும் பாதிக்கும்"
பி.ஜே.பி-யினர் மக்களிடையே பசுக்களை வைத்து மத அடிப்பதைவாதத்தை வளர்க்கின்றனர். பி.ஜே.பி-யினர் முஸ்லிம்களை மட்டும் இல்லை கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்களையும் தாக்குகின்றனர் என்று கூறினார்.
Post a Comment