HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 14 June 2019

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் மனதை கவர்ந்ததா?...


அஜித்தின் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அஜித் வழக்கறிங்கராக நடிக்கிறார். தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் ட்ரைலர் அனைவரும் கவரும் வகையில் உள்ளது. முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசியுள்ளனர். ஆம், பெண்கள் தங்களை ஆபத்தின் பிடியிலிருந்து உண்மையாக தப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதுதான் நேர்கொண்ட பார்வை திரைப்படம். பிங்க் திரைப்படத்திலும் இதைத்தான் தெளிவு படுத்தியிருப்பார்கள். படத்தில் அஜித் ஒரு திறமையான வழக்கறிங்கராக வருகிறார் என்பது அவரின் லுக்கை பார்த்தாலே தெரிகிறது. ரங்கராஜ் பாண்டே ஒரு கறாரான வழக்கறிஞர். ஆனால் எந்தவித கெட்ட திசையில் செல்லாமல் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் வழக்கறிங்கராக வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் ஹீரோயின் என்பதை விட படம் இவரை நோக்கித்தான் நகரும் என்றே சொல்லலாம். மொத்தத்தில் இந்த நேர்கொண்ட பார்வை ட்ரைலர் நம்ம நேராக திரையரங்கினுள் சென்று காணவைக்கும் ஆசையை தூண்டியுள்ளது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com