தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான ப்ரீப்ரொடக்ஷன் வேலைகளை வினோத் ஏற்கனவே துவக்கி செய்து வருகிறார். இந்த படம் தல அஜித்தின் திறமையை முழுமையாக பயன்படுத்தும் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே கூறி இருந்தார்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் வருவது போல கார் ரேசிங், கார் சேசிங் என ஒரு பக்காவான ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்னாப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இன்னும் சில இடங்களில் மொத்தம் 4 கட்டங்களாக இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க தல 60 படக் குழு முடிவு செய்துள்ளது. இதுவரை தல நடித்து வெளியான படங்களின் பட்ஜெட்டை பார்க்கும்போது இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம். முக்கியமாக வினோத் அவரது சொந்த கதை, திரைக்கதையில் இந்த படத்கை எடுக்க போகிறார்.

மேலும், தல ரசிகர்கள் தல ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரியான ரேசிங் படங்களில் நடிக்கமாட்டாரா என எதிர்பார்த்து ஏங்கி வந்தனர். ரசிகர்களின் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறப் போகிறது. இதன் காரணமாகவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.அதுமட்டும்மில்லாமல் படத்தின் தலைப்பு வேகம் என்று வைக்கப்போறாங்களாம்
Post a Comment