நடிகை சுவாதி நடிகர் அஜித்துடன் வான்மதி திரைப்படத்திலும் நடிகர் விஜய் உடன் தேவா திரைப்படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார் .இந்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தன .திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை சுவாதி நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.
வான்மதி திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நான் நடிக்கும்போது நான் இப்பொழுதுதான் சினிமாவுக்கு அறிமுகமாகிறேன் எனவும் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடினால் மட்டுமே நான் ஒரு நடிகராக இருக்க முடியும் தன்னம்பிக்கை இன்றி நடிகர் அஜித் கூறினார் என நடிகை சுவாதி கூறியுள்ளார் .ஆனால் தற்போது இவ்வளவு மிகப்பெரிய ஹீரோவாக அவர் வளர்ந்து இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷம் அடைகிறேன் எனவும் கூறினார். மேலும் நடிகர் அஜித் யாருக்கும் தெரியாமல் அனைவருக்கும் உதவி செய்து அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வார் எனவும் நடிகர் விஜய் அப்படி இல்லை எனவும் கூறினார்.
Post a Comment