HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 17 December 2020

தஜ்ஜால் தொடர் பதிவு- 38; ஷியா-ஸன்னி பிரிவினையே தஜ்ஜாலின் தந்திரமாக தான் இருக்கும் என்று,எனக்கு தோன்றுகிறது. சரி.ஏன் தஜ்ஜால் ஷியா-ஸன்னி யுத்தத்தை விரும்புகிறான்? என்பதை இப்போது காணலாம்:-

 தஜ்ஜால் தொடர் பதிவு- 38

தஜ்ஜாலும் போர்களும்
ஷியா-ஸன்னி பிரிவு ஏற்பட்டதற்கான காரணத்தை கடந்த பதிவுகளில் தெளிவாகக் கண்டோம்.
தஜ்ஜாலின் முதற்கட்டம் (ஒரு வருடம் போன்ற ஒரு நாள்) தூதரின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதை இந்த தொடரின் தொடக்கப்பதிவுகளிலேயே கண்டோம்.
எனவே தூதருக்கு பின் நடந்த சரித்திரங்களை மிக கவனமாக ஆராய்ந்தால் ஷியா-ஸன்னி பிரிவினையில் தஜ்ஜாலின் பங்கு உண்டா?இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
ஷியா-ஸன்னி பிரிவினையே தஜ்ஜாலின் தந்திரமாக தான் இருக்கும் என்று,எனக்கு தோன்றுகிறது.
சரி.ஏன் தஜ்ஜால் ஷியா-ஸன்னி யுத்தத்தை விரும்புகிறான்? என்பதை இப்போது காணலாம்.
தஜ்ஜால் தன்னுடைய இரண்டாவது கட்டத்திலிருந்து(ஒரு மாதம் போன்ற ஒரு நாள் என்ற நிலையிலிருந்து) மூன்றாவது கட்டத்திற்கு (ஒரு வாரம் போன்ற ஒரு நாள் என்ற நிலைக்கு) நகர வேண்டுமென்றால் அதாவது உலகத்தின் அதிகாரத்தை அமெரிக்காவின் கைகளிலிருந்து இஸ்ரேலின் கைகளுக்கு மாற்ற வேண்டுமானால் இன்றைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள், இஸ்லாமிய உலகத்தை குறிப்பாக அராபிய உலகத்தை பொருளாதார,ராணுவ மற்றும் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை ஏற்படுத்த தஜ்ஜாலுக்கு ஷியா-ஸன்னி போர் தேவைப்படுகிறது.
ஷியா-ஸன்னி போர் மூலம் தஜ்ஜாலின் அடியாட்களுக்கு கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படும்.
1.உலக ஊடகங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் ஏற்கனவே பெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஷியா-ஸன்னி யுத்தம் ஏற்பட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டு ரத்தம் சிந்தினால் அதை ஊடகம் எவ்வாறு சித்தரிக்கும்?
தன் இன உண்ணிகளான, முஸ்லிம்களின் இஸ்லாமிய மார்க்கம் இறைவனிடமிருந்து வரவில்லை.ஷைத்தானிடமிருந்து வந்தது என்று பிரச்சாரம் செய்வார்கள்.உலகிலுள்ள அனைத்து மக்களின் உள்ளங்களிலும் இஸ்லாத்தை அருவருப்பான ஒன்றாக சித்தரிப்பார்கள்.இதன் மூலம் முஸ்லிம்கள் உலக அளவில் தனிமைபடுத்தப்படுவர்.
2.சவூதி தலைமையிலான ஸன்னிகளும்,ஈரான் தலைமையிலான ஷியாக்களும் மோதிக்கொண்டால் என்னவாகும்?
இரு தரப்பும் வலுவிழக்கும்.போரின் காரணமான மிகப்பெரிய அளவில் உயிர்சேதமும் பொருட்சேதமும் இரு தரப்புக்கும் ஏற்படும்.
இரு தரப்புமே தங்களுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா போன்ற ZIONIST நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கும்.முஸ்லிம்கள் அழியும் நேரத்தில் எதிரிகள் ஆயுத விற்பனையில் லாபம் பார்ப்பார்கள்.
சுருக்கமாக சொன்னால் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கி முஸ்லிம்கள் சீரழிவார்கள்.
இன்றைய சவூதி அராபிய இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டுகிறது.ஆனால் இஸ்ரேலோ சவூதிக்கு நேரம் குறித்துக்கொண்டிருக்கிறது.
சவூதி,எகிப்து,கத்தார்,ஜோர்டன் ஆகிய ஸன்னி நாடுகள் ஷியாக்களுடன் போரிட்டு வலுவிழந்துள்ள நிலையில், இஸ்ரேல் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து அனைத்து நாடுகளையும்,அதன் எண்ணெய் வயல்களையும் கைப்பற்றி, தன் கிரேட்டர் இஸ்ரேல் என்ற கனவை நிறைவேற்றும்.
அது போல மல்ஹமா யுத்தத்தின் முடிவில் தஜ்ஜால் இஸ்ஃபஹான் என்னும் இடத்திலிருந்து வெளிப்படுவான்.
எங்கே இருக்கிறது இஸ்ஃபஹான்?.
ஈரானில்...ஈரானின் மிக முக்கிய மாநிலம்.
அதாவது மல்ஹமா யுத்தத்தின் முடிவில் ஈரான் இஸ்ரேலிடம் தோற்கும்.
இன்றைய தினம் ஈரானை வீழ்த்தும் திறன் இஸ்ரேலுக்கோ, அமெரிக்காவிற்கோ கிடையாது.ஆனால் ஷியா-ஸன்னி யுத்தத்திற்கு பின் ஈரான் வலுவிழக்கும் அதன் பின்பு ஈரானை இஸ்ரேல் வெல்லும்.
ஆக மொத்தத்தில் ஷியா-ஸன்னி யுத்தத்தில் வெற்றி பெறிபவர்கள் ஷியாவும் இல்லை ஸன்னியும் இல்லை ZIONISTகள் தான்.
3.ஈரானில் ஆட்சி மாற்றம்.
சவூதி அரசு எப்படி அமெரிக்காவிற்கு, நூற்றாண்டுகளாக வாலாட்டும் நாயாக நடந்து கொள்கிறதோ அதே போல தான் ஈரானும் வாலாட்டியது 1970கள் வரையிலும்.
1970களில் ஈரானில் ஏற்பட்ட மத புரட்சியின் காரணமாக ஆயத்துல்லா அலி காமெனி அவர்களின் தலைமையில் ஈரானில் புதிய ஆட்சி அமைந்தது.
இந்த அரசு தொடக்கம. முதல் இன்று வரை அமெரிக்காவிற்கு எதிராக தான் செயல்படுகிறது.
ஒரே ஒரு விஷயத்தில் இது அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது.ஆயத்துல்லா தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை அது.
2003 ஆம் ஆண்டு சதாம் ஹுசைனுக்கு எதிரான போரில் ஈரான் அமெரிக்காவிற்கு தேவையான உதவிகளை வழங்கி மிகுந்த இணக்கத்துடன் நடந்து கொண்டது.
மற்றபடி அனைத்து வகையிலும் அமெரிக்காவிற்கு எதிராகவே ஈரான் செயல்படுகிறது.
ஈரானில் யூதர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் மிக சாதகமான ஒன்றாக உள்ளது.
மேலும் ISIS போன்ற தீவிரவாதிகளை போல ஷியா பிரிவிலும் அதி தீவிர ஷியா தீவிரவாதிகளை உருவாக்கி பயிற்சியளித்து ஆயத்துல்லாவிற்கு எதிராக திருப்புகிறது அமெரிக்கா.
இந்த அமைப்புகளுக்கு இன்று செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் போருக்கு பின் ஏற்படும் மோசமான நிலைமைகள் ஆயத்துல்லாவிற்கு எதிராக திரும்பலாம்.வலுவிழந்திருக்கும் ஈரானின் ராணுவத்தை தீவிரவாதிகள் வெற்றி பெறலாம். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.
ஷியாக்களும் ஸன்னிகளும் மற்றவரின் முதுகில் உள்ள அழுக்கை ரத்தத்தால் கழுவுவதை நிறுத்திவிட்டு தங்கள் முதுகுகளில் உள்ள அழுக்கை ஒற்றுமை என்னும் நீரால் கழுவ வேண்டும்.
4.இந்த நான்காவது லாபம் தான் இஸ்ரேலுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
ஒரு நாடு உள்ளது. அந்த நாடு இஸ்ரேலை 1948ல் இருந்து இன்று வரை கடுமையாக எதிர்க்கிறது.இன்று வரை இஸ்ரேலை ஒரு நாடாக அந்த நாடு அங்கீகரிக்கவில்லை.
அந்த நாடு மட்டும் தான் இஸ்லாமிய உலகில் அணு ஆயுத தொழில் நுட்பம் வைத்துள்ள நாடு.
அந்த நாட்டின் அணு ஆயுதத்தை அழித்து, அந்த நாட்டை சிறு துண்டுகளாக பிரித்துவிட்டால், இஸ்லாமிய உலகில் மிகுந்த சக்தி வாய்ந்த எதிரியை அழித்துவிடலாம்.இந்த நாட்டை வீழ்த்துவதற்கு இஸ்ரேல் கடுமையான முயற்சிகளை செய்துவருகிறது.
ஏற்கனவே இஸ்ரேலானது, அந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தை சேர்ந்த போராளிகள் என்ற பெயரில்,தீவிரவாத அமைப்புகளை ஏற்படுத்தி தனி நாடு என்ற முழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் இஸ்ரேலிற்கு வெற்றியை தருகிறதோ இல்லையோ ஆனால் ஷியா-ஸன்னி யுத்தம் இஸ்ரேலுக்கு வெற்றியை தரும்.
இஸ்ரேலின் கடுமையான எதிரியான அந்த நாட்டில் ஸன்னிகள் மிகப்பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், ஷியாக்கள் பொருளாதார சக்திகளாக திகழ்வதுடன் அந்த நாட்டின் ராணுவத்திலும் சரி நிகரான பதவிகளிலும் எண்ணிக்கையிலும் உள்ளனர்.மேலும் ஷியாக்களின் தலைமை நாட்டுடன் மிகப்பெரிய அளவில் எல்லையை கொண்டுள்ளது அந்த நாடு.
அந்த நாடு மிக புத்திச்சாலிதனமாக, இப்போது நடைபெறும் சிரியா,யமன் ஆகிய நாடுகளின் பிரச்சனைகளில் கூட தலையிடவில்லை.
ஆனால் ஷியா-ஸன்னி யுத்தத்தில் அதனால் ஈடுபடாமல் இருக்க முடியாது.
சவூதியின் மிகப்பெரிய அளவிலான நிதி உதவிகள், அந்த நாட்டை போருக்கு கொண்டு வரும்.ஒரு வேளை போரில் ஈடுபடவில்லையென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் கண்டிப்பாக சீரழியும்.
போரில் ஈடுபட்டாலும் நாடு துண்டாகும்.ஈடுபடவில்லையென்றாலும் சீரழிந்து உடையும்.
ஷியா-ஸன்னி யுத்தம் இஸ்ரேலுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசாக இது தான் அமையும்.
இங்கு நான் அந்த நாட்டின் பெயரை குறிப்பிடவில்லை.ஏனென்றால் அந்த நாட்டின் பெயரை சொன்னாலே நம்மை விரோதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள், உண்மையான தேசத்துரோகிகளான தடிபார்கள்(குண்டர்கள்).
ஷியா-ஸன்னி யுத்தம் இஸ்லாமிய உலகிற்கு பேரழிவை தரும்.நம்மால் போரை தடுக்க முடியாது.ஆனால் அதன் வீரியத்தை குறைக்க முடியும்.அதற்கு ஷியா-ஸன்னி ஒற்றுமை குறித்து நம்மால் முடிந்த அளவில் பிரச்சாரம் செய்து ஷியாக்களுக்கும் ஸன்னிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.
தூதரின் வாரிசான இமாம் மஹதி(அலை) அவர்களின் வருகைக்கு பின் இந்த இரண்டு போலி பிரிவினைகளும் மறைந்து நாம் அனைவரும் இஸ்லாம் என்ற குடையின் கீழ் இமாம் மஹதீ அவர்களின் தலைமையில் ஒன்றிணைவோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இங்கு பகிர்கிறேன்.
நாளைய பதிவில், மல்ஹமா யுத்தத்திற்கு திரும்புவோம்
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.........


தஜ்ஜால் தொடர்- பதிவு- 37 இஸ்லாத்தில் ஷியா மற்றும் ஸன்னி பிரிவு எவ்வாறு வந்தது? மார்க்கத்தை உடைக்கக்கூடாது என்று இறைவன் குர்ஆனில் கட்டளையிடுகிறான், அப்படி இருந்தும் ஷியா-ஸன்னி யாரால் உருவாக்கப்பட்டது:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/37.html?spref=tw



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com