தஜ்ஜால் தொடர் - பதிவு- 41
தஜ்ஜாலும் போர்களும்
இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் மல்ஹமா யுத்தத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு வெற்றிகள் ஏற்படும்.
யார் இந்த இமாம் மஹதி? என்பதை பற்றி பார்ப்பதற்கு முன், இன்றைய முஸ்லிம்கள் இமாம் மஹதி என்பவரை பற்றி எவ்வாறெல்லாம் தவறாக புரிந்துக்கொண்டு, எவ்வாறு அவரை வரம்பு மீறி புகழ்கின்றனர் என்பதைப்பற்றி இப்போது காணலாம்.
முஸ்லிம்களில் பலர் இன்று இமாம் மஹதியை, உலகை மீட்க வரவுள்ள மீட்பர் என்ற அளவில் புகழ்கின்றனர்.
யுக முடிவு நேரத்தின் முக்கிய நாயகனாக அவரை வர்ணிக்கின்றனர்.
சில முஸ்லிம்கள் இமாம் மஹதியை, நபி ஈஸா(அலை) அவர்களை விட உயர்வானவர் என்ற நிலையில் போற்றுகின்றனர்.
இவை அனைத்தும் தவறான புரிதல் ஆகும்.
இவர்கள் தங்கள் தவறான நம்பிக்கைக்கு முட்டு கொடுப்பதற்காக, நபி ஈஸா (அலை) அவர்கள்,மஹதியின் தலைமையில் பின் நின்று தொழும் ஹதிஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.
இவர்கள் இமாம் மஹதியை போற்றுகிறோம் என்ற பெயரிலும்,நபி முகம்மது(ஸல்) அவர்களை போற்றுகிறோம் என்ற பெயரிலும் சில நேரங்களில் நபி ஈஸா(அலை) அவர்களை தரம் தாழ்த்திவிடுகின்றார்கள். ஆம் நபி ஈஸா(அலை) திரும்ப வரும் போது அவர் இறுதி தூதரின் உம்மத்தில் ஒருவராக வருவார் என்று மடத்தனமாக கூறுகின்றார்கள்.இதற்கும் நான் மேற்கூறிய ஹதிஸையே ஆதாரமாக காட்டுகின்றனர்.
இப்போது அந்த ஹதிஸை நன்றாக ஆராயலாம்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலுள்ள, வெள்ளை நிற மினராவை கொண்டுள்ள பள்ளிவாசலில் (உமாயத் மஸ்ஜித்) பஜ்ர் நேரத்தில், நபி ஈஸா(அலை) அவர்கள் வானிலிருந்து இறங்குவார்கள்.
இமாம் மஹதி அவர்கள் தொழுகை நடத்துமாறு நபியை கேட்டுக்கொள்வார்கள்.ஆனால் ஈஸா நபியோ உங்களை சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்கு தலைவராக(இமாமாக அல்லது அமீராக) இருக்க முடியும்,இது உங்களுக்கு உங்கள் இறைவன்அளித்த பாக்கியமாகும் என்று கூறி தலைமை ஏற்க மறுத்துவிடுவார்கள்.மேலும் இமாம் மஹதி நடத்தும் தொழுகையில் பின் நின்று தொழுவார்கள்.இது தான் அந்த ஹதிஸ்.
ஹதிஸை உற்று ஆராய்ந்தால்,நபி ஈஸா(அலை) அவர்களின் பதிலை உற்று நோக்கினால் நமக்கு ஒன்று தெளிவாக புரிய வரும்.
உங்களை சேர்ந்த ஒருவருக்கு உங்களில் ஒருவர் தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற நபியின் பதிலை கவனியுங்கள்.
அதாவது நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்திற்கு அந்த உம்மத்தை சேர்ந்த ஒருவர் தான் தலைவராக முடியும் என்று பதிலளிக்கிறார்.அப்படியென்றால் நபி ஈஸா(அலை),நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒருவராக வர மாட்டார் என்பது தெளிவாகிறது.
நபி ஈஸா(அலை) அவர்கள், நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தாக வருவார் என்ற வாதம் முட்டாள்தனமானது.இது நமது மல்ஹமா நண்பர்களான ரோமர்களுடன் பிணக்கை ஏற்படுத்துவதற்கான,சவூதி கைக்கூலி ஆலிம்களின் முயற்சியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
முஸ்லிம் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இமாம் மஹதி என்வபர் மீட்பர் அல்ல.தஜ்ஜாலை கொல்லக்கூடிய ஆற்றல் யாருக்கு உள்ளதோ அவர் தான் மீட்பர்.நபி ஈஸா(அலை) அவர்கள் மட்டுமே மீட்பர்(மஸிஹ்).
தஜ்ஜாலையும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தையும் அழித்து,உஜைர் நபியின் முன்னறிவிப்பின் படி ஜெருசலத்தை மையமாக கொண்ட உலக ஆட்சியாளர் தான்,யுக முடிவு நேரந்தின் முக்கிய கதாப்பாத்திரம்.
அந்த முக்கிய மற்றும் முதன்மையான கதாபாத்திரம் நபி ஈஸா(அலை) அவர்கள் தானே தவிர.இமாம் மஹதி அல்ல.
எனவே நபி(ஈஸா)அலை அவர்களுக்கு இணையாக இமாம் மஹதியை போற்றுவது என்பது மடத்தனமானது.
இறுதி தூதரின் ஒரு அறிவிப்பை கவனியுங்கள்-
நபித்தோழர்களை பார்த்து இறுதி இறைத்தூதர் கூறினார்கள்:
உங்களுக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான்.என்னுடைய தோழர்களாகிய உங்களில் யார் இறுதியானவரோ, குறைவனாரவோ(இறை நன்மைகளின் எடையில்) அவர், உங்களுக்கு பின்னால் வரவுள்ள முஸ்லிம்களில் முதன்மையானவரை விட மிக உயர்ந்தவராவர்.
இந்த ஹதிஸின் படி ஸஹாபாக்களில்(நபித்தோழர்களில்) இறுதியானவர்,இமாம் மஹதியை விட உயர்வானவர்.
இறுதியானவரே உயர்வானவர் என்றால் முதன்மை தோழர்களாக விளங்கிய அபுபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடைய தர்ஜாக்களை(சிறப்புகளை) இமாம் மஹதியால் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.
அபுபக்கர்(ரலி) அவர்களே,இமாம் மஹதியை விட உயர்வானவர் என்ற போது இமாம் மஹதி அவர்கள் எவ்வாறு நபி ஈஸா(அலை) அவர்களை விட உயர்வானவராக இருக்க முடியும்.
இன்று இதை ஏன் இவ்வளவு விரிவாக விளக்குகிறேன் என்றால் இமாம் மஹதியை வரம்பு மீறி புகழ்வதில் ZIONIST சவூதியின் சூழ்ச்சி உள்ளது போல் தெரிகிறது.
கிழக்கு கிறித்தவர்களின், மீட்பர் தொடர்பான எதிர்பார்ப்பிற்கு எதிராக முஸ்லிம்களுக்கு வேறொரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் ZIONISTகளின் முயற்சி தான் இமாம் மஹதியை அளவு மீறி புகழும் பிரச்சாரம் ஆகும்.
இமாம் மஹதி என்பவர் யார் என்பதை பற்றி நாளை விரிவாக காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.........
தஜ்ஜால் தொடர் பதிவு- 40; தஜ்ஜாலும் போர்களும் கடந்த பதிவில் மல்ஹமா யுத்தத்தில், யூப்ரடிஸ் நதிக்கரையில் நடைபெறும் சண்டை பற்றி கண்டோம்.இன்று மூன்று இஸ்லாமிய நாடுகளுக்கு தோல்வியை ஏற்படுத்தும் சண்டையை காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/40.html?spref=tw
Post a Comment