HEADER

... (several lines of customized programming code appear here)

Friday, 30 June 2017




இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இதன் காரணமாக திரையுலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
 
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறித்த தெளிவு இல்லாததால் வரும் 30ஆம் தேதி வெளிவர வேண்டிய 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக திரையரங்குகளின் டிக்கெட்டுக்கள் உயரும் வாய்ப்பு உள்ளது.
 
ரூ.100க்கு குறைவான திரையரங்க கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள திரையரங்குகளில் பெரும்பாலும் ரூ.120 டிக்கெட் கட்டணமாக இருப்பதால் ஜூலை 1ஆம் தேதிக்கு பின்னர் 28% வரியுடன் கட்டணம் ரூ.153.60 என்று உயர வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் புக் செய்தால் அதன் சர்வீஸ் கட்டணத்தையும் சேர்த்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர வாய்ப்பு உள்ளது.
 
ஏற்கனவே திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி ஆகியவை காரணமாக முதல் மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் கட்டணமும் உயர்ந்துள்ளதால் இனி திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி எதிரொலி: ரூ.120 தியேட்டர் டிக்கெட் இனி எவ்வளவு தெரியுமா?


a
இளைய தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார்.
இதில் இரண்டு கெட்டப் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டது. ஒன்றில் கிராமத்து இளைஞனாக உள்ளார்.
மற்றொன்றில் மேஜிக் கலைஞராக இருக்க, தற்போது மெடிக்கல் கல்லூரி மாணவராக இருக்கும் லுக் லீக் ஆகியுள்ளது. இதோ...

மெர்சல் படத்தின் மூன்றாவது லுக் லீக் ஆகியது- புகைப்படம் உள்ளே!!!!




வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் விவேகம். வேதாளம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், ஆரவ் சவுத்ரி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பற்றிய முதல் பார்வை வருமாறு:
வீரம் கிராமத்து படம், வேதாளம் நகரத்து படம், விவேகம் இண்டர்நேஷனல் படம். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாகி இருக்கும் படம். அஜித், விவேக் என்ற இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
காஜல் அகர்வால் வெளிநாட்டில் வாழும் இந்திய குடும்ப பெண்ணாக நடிக்கிறார். அஜித்தின் காதலியும் அவர்தான். அக்ஷ்ரா ஹாசன் வெளிநாட்டில் பிறந்த வளர்ந்த வெளிநாட்டு பெண்ணாகவே நடிக்கிறார். அஜித்துக்கு உதவும் கேரக்டர். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வந்த செய்திகளை போன்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் அல்ல, பாசிட்டிவான கேரக்டர்.
  1. “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலைகளும் நீ தோத்துட்ட… தோத்துட்ட…ன்னு உன் முன்னாடி வந்து அலறினாலும், நீயாக ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் உன்னை எங்கேயும் எப்பவும் ஜெயிக்க முடியாது” டீசர்ல வருகிற இந்த வசனம்தான் கதை.
  2. “என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் பலம்” என்பது படம் சொல்ல வருகிற மெசேஜ்.
  3. இண்டர் நேஷனல் ஆக்ஷ்ன் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கும், செண்டிமென்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது படம்.
  4. செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி ஆகிய நாடுகளில் 97 சதவிகித படப்பிடிப்பு நடந்துள்ளது. கதையும் அங்குதான் நடக்கிறது. 3 சதவிதம் மட்டுமே சென்னை காட்சிகள்.
  5. ஆஸ்திரியா நாட்டில் மைனஸ் 12டிகிரி குளிரில் எல்லோரும் 3 லேயர் உடை அணிந்து நடித்தபோது அஜித் கிழிந்த சட்டை அணிந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
  6. அஜித்தின பைக் ரேஸ் படத்தில் முக்கியமானதாக இருக்கும், பனியில், மலையில், நெடுஞ்சாலையில், கரடுமுரடமான பாதையில் டூப் போடாமல் பைக் ஓட்டி அசத்தியிருக்கிறார்.
  7. இதில் அஜித், செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி நாடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். இதற்கு உதவுவது அந்தந்த நாட்டு ராணுவம்.
  8. அமிலி என்கிற போர்ஸிய நடிகை, செர்ஜன் என்கிற செர்பியன் நடிகை உள்பட பல வெளிநாட்டு நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
  9. படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது.
  10. விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா, அஜித் கூட்டணியே இணைய வாய்ப்பிருக்கிறது. அது விவேகத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு கதையாகவோ இருக்கலாம். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கலாம்.

விவேகம் இரண்டு பாகங்களாக வருகிறதா? – பரபப்பான பத்து அப்டேட்ஸ்

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வந்த படம் விவேகம். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த வாரம் அஜித், சிவா மற்றும் படக்குழு செர்பியா நாட்டுக்கு பறந்தது.
இன்றுடன் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் இயக்குனர் சிவா. அந்த சந்தோஷத்தை ஒரு புகைப்படம் மூலம் ட்விட்டரில் வெளியிட்டவுள்ளார்.
மேலும் ரசிகர்கள் இந்த செய்தி கிடைத்தவுடன் ட்விட்டரில் ஆரவாரம் செய்து வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ம் உலகமுழுவதும் விவேகம் வெளியாவது உறுதியாகியுள்ளது

சந்தோஷத்தில் விவேகம் பட குழு - ரசிகர்கள் ஆரவாரம்

Thursday, 29 June 2017






விவேகம் படத்தின் கலக்கல் புகைப்படங்கள்



அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா வட்டாரங்கள் உட்பட அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்ப்பார்க்கும் படம் விவேகம். சிவா இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
அஜித்தின் படங்களில் மிக முக்கியமானதாக இப்படம் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் இருக்க மேலும் அமலி என்ற போர்ஸிய நடிகையும், செர்ஜன் என்கிற செர்பியன் நடிகையும் நடிக்கிறார்கள்.
ரிஸ்க் எடுப்பதை சாதாரணமாக கையாளும் அஜித் இந்த படத்திலும் செய்திருக்கிறார். ஆஸ்திரிய நாட்டில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட போது மற்றவர்கள் எல்லாம் கடும் குளிரை சமாளிப்பதற்காக 3 லேயர் ஆடைகளை அணிந்துகொண்டார்களாம்.
ஆனால் அஜித் கிழிந்த சட்டை ஒன்றை மட்டும் போட்டுக்கொண்டு நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

விவேகம் படத்தில் அஜித் இப்படியும் ஒரு ரிஸ்க் எடுத்திருக்கிறார் தெரியுமா?

Tuesday, 27 June 2017



அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் வியாழக்கிழமையுடன் முடிவடைய இருக்கின்றது.
இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் ‘விவேகம் படம் தள்ளி போகின்றதா, கூடவே கூடாது’ என டுவிட் செய்திருந்தார்.
உடனே மற்றொரு திரையரங்க உரிமையாளர் ‘இருக்காது, அப்படி இருந்தாலும் தல படத்திற்கு எதற்கு விடுமுறை தினம் வேண்டும், அவர் படம் எப்போது வந்தாலும் சரவெடி தான்’ என டுவிட் செய்திருந்தார்.
இந்த உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த டுவிட்டை பார்த்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் தான் உள்ளார்கள்.
@NIKILESHSURYA YES THAT'S THERE BUT JUST FOR THE SAKE OF THE DATE HE SHOULDN'T COMPROMISE ON THE FINAL PRODUCT
@GKCINEMAS YUP TRUE. BUT FOR  DATE DOESN'T MATTER. EPO VANDHAALUM SARAVEDI DHAN 

விவேகம் தள்ளி போகின்றதா! ரசிகர்கள் கடும் அதிருப்தி, திரையரங்க உரியமையாளர்களின் உரையாடல்


சிம்பு நடிப்பில் AAA மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வனமகன் ஆகிய படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படங்களில் வனமகன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில் சனி, ஞாயிறு தாண்டி நேற்று ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு இரண்டு படங்களுக்குமே ஓரளவிற்கு நல்ல கூட்டம் இருந்தது.
இதில் AAA 4 நாள் முடிவில் ரூ 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோல் வனமகன் ஆரம்பத்தில் கொஞ்சம் பின் தங்கினாலும் தற்போது மூன்று நாள் முடிவில் ரூ 8.75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.
வரும் நாட்களில் AAA வசூலை வனமகன் எளிதில் முந்திவிடும் என தெரிகின்றது.

AAA, வனமகன் 4 நாள் வசூல்- எது முதலிடம்?



இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, இந்திய சந்தையில் புதிய பைக் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் விரைவில் அறிமுகம்..!!
VIDEO : Lamborghini Aventador with Savini Wheels Part II
பல்சர் சீரீஸில் இடம்பெற இருக்கும் புதிய ‘பல்சர் என்எஸ்160' என்ற பைக்கை பஜாஜ் நிறுவனம் சில நாட்களாகவே பரிசோதனை செய்து வந்தது. தற்போது இந்த புதிய பைக் பஜாஜ் டீலர்ஷிப் ஒன்றில் காணப்பட்டது.
புதிய பல்சர் என்எஸ் 160 பைக் முன்னதாக கைவிடப்பட்ட ‘பல்சர் ஏஎஸ்150' பைக்கை அடிப்படையாகக் கொண்டது. இது பல்சர் சீரிஸில் இடம்பெற இருக்கும் புதிய மாடல் ஆகும்.
பல்சர் 150 பைக்குக்கு அடுத்த இடத்தில் இந்த புதிய என்எஸ்160 பைக் நிலைநிறுத்தப்படும். மேலும் இது என்எஸ் 200 பைக்கின் இளைய சசோதரனாக விளங்கும்.
புத்தம் புதிய என்எஸ்160 பைக்கில் ஹாலோஜன் முகப்பு விளக்கு, ஸ்பிலிட் சீட்கள், எல்ஈடி பின்புற விளக்கு, டிஜிடல்-அனலாக் கிளஸ்டர் பேனல், அண்டர் பெல்லி எக்ஸ்ஃஸாஸ்ட் பைப், ஸ்பிலிட் க்ரேப் ரெயில்கள் ஆகியவை உள்ளன.
மேலும் என்எஸ்200, டோமினார்400 போன்ற பைக்குகளில் பயன்படுத்தப்படும் ஸ்டீல் பெரிமீட்டர் ஃபிரேம் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பல்சர் 150, பல்சர் 180 பைக்குகளைக் காட்டிலும் இதனை ஹேண்டில் செய்வது எளிதாக அமையும்.
துருக்கியில் விற்பனையில் உள்ள பல்சர் என்எஸ்160 பைக்கில் சிங்கில் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் களமிறங்கும் என்எஸ்160ல் இது இடம்பெறாது என தெரியவருகிறது.
இதன் மூத்த சகோதரனான என்எஸ்200 பைக்கில் உள்ளது போன்ற ரியர் டிஸ்க் பிரேக் இதில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தப் புத்தம் புதிய பல்சர் என்எஸ்160 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 160சிசி, ஆயில் கூல்டு இஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15.05 பிஹச்பி ஆற்றலையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தவல்லது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் உள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் ரூ.85,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
என்எஸ்160 பைக்குக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டால் அது பல்சர் 180 பைக்கை காட்டிலும் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். தற்போது பல்சர் 180 பைக் ரூ.77,789(எக்ஸ்ஷோரூம், மும்பை) என்ற விலையில் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
அதிக போட்டி கொண்ட 150-160சிசி செக்மெண்டில் இடம்பெற இருக்கும் இந்த புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் டிவிஎஸ் அப்பாச்சி160, சுசுகி ஜிக்ஸர், யமஹா எஃப் எசர்-எஸ், ஹோண்டா சிபி ஹார்னெட்160 ஆகிய பலமான பைக் மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது.
நீண்ட காலமாக 150-160சிசி செக்மெண்டில் சிறந்து விளங்கும் மாடல்களை அளித்து வரும் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் என்எஸ்160 பைக் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய பைக் ஜூலை 2017ல் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் பஜாஜ் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய பல்சர் என்எஸ்160 பைக்: விலை உள்ளிட்ட முழு விவரம்.!

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com