தஜ்ஜால் தொடர்-பதிவு- 33
தஜ்ஜாலும் போர்களும்.
ரோமர்கள் என்பவர்கள் ஐரோப்பியர்கள் என்பதையும் அவர்கள் தங்கள் ஆட்சி பகுதியை நிர்வாக காரணங்களுக்காக மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளாக பிரித்தனர் என்பதையும் நாளடைவில் மேற்கு பகுதி முழுவதும் வீழ்ந்து கிழக்கு ரோமானிய பகுதி மட்டும் மிஞ்சியதையும், இந்த மிஞ்சிய பகுதி பைசாந்திய பேரரசு என்று அறியப்பட்டதையும், முஸ்லிம்களுடன் இவர்கள் நெருக்கமான நட்பில் இருந்ததையும் கடந்த பதிவில் கண்டோம்.
ரோமானிய பேரரசு என்ற ஒன்று முழுமையாக வீழ்ந்த பின் முஸ்லிம்கள் இன்றைய தினம் யாரை ரோமர்கள் என்று இனங்கண்டு கூட்டணி வைப்பது?.
அன்றைய மேற்கு மற்றும் கிழக்கு ரோமில் இருந்த நாடுகளில் பெரும்பாலானவை இன்று NATO படையில் இணைந்து நமக்கு எதிராக செயல்படும் போது நாம் யாரை ரோமர்கள் என்று தீர்மானிப்பது?.
முஸ்லிம்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய அன்றைய கிழக்கு ரோமானிய அரசின் (பைசாந்திய பேரரசின்) மக்களும், அரசும்,கிழக்கு கிறித்தவ மதத்தை சார்ந்தவர்கள்.இவர்களின் ஆட்சி மற்றும் மத வழிபாட்டு தலைநகரமாக விளங்கியது காண்ஸ்டாண்டிநோபிள்.
அப்படியென்றால் இன்றைய தினம் ரோமர்கள் என்பவர்கள் NATO படைக்கு எதிராக செயல்படக்கூடிய கிழக்கு கிறித்தவ மதத்தை பின்பற்றக்கூடிய மக்கள் தான்.
காண்ஸ்டாண்டிநோபிள் வீழ்ந்த பின், கிழக்கு கிறித்தவ மதத்தின் தலைவரான பேட்ரியாக்,(மேற்கு கிறித்தவர்களுக்கு போப் எப்படியோ அப்படி தான் கிழக்கு கிறித்தவர்களுக்கு பேட்ரியாக்) மத வழிபாட்டு தலைநகரை காண்ஸ்டாண்டிநோபிளிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றினார்.
ரஷ்யா நாட்டின் மக்கள் கிழக்கு கிறித்தவ மதத்தை பின்பற்றுபவர்கள்.
ரஷ்ய அரசும், இன்றைய தினம் தன்னை கிழக்கு கிறித்தவம் உட்பட பல மதச்சார்புள்ள நாடு என்று அறிவித்துள்ளது.வார்த்தைகளை நன்றாக கவனியுங்கள்.ரஷ்யா என்பது பல மத சார்புள்ள நாடு.மதச்சார்பற்ற நாடல்ல.
ரஷ்யா,அமெரிக்காவிற்கும் NATOவிற்கும் எதிரி என்பது ஊர் அறிந்த ஒன்று.
கிழக்கு கிறித்தவத்தை பின்பற்றக்கூடிய,NATOவை கடுமையாக எதிர்க்க கூடிய நாடு தான் ரஷ்யா. அப்படியென்றால் ரஷ்யா தான் இன்றைய தினம் ரோம்.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஹதிஸ்களின் படி ரோமர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கீழ்க்கண்ட உறவு நிலைகள் ஏற்படலாம்.
ரோமர்களுடன் தொடக்கத்தில் நட்பு ஏற்பட்டு பின் பகை ஏற்படும்
ரோமர்களுடன் கடுமையான மோதல் ஏற்படும்.
அப்படியென்றால் ரஷ்யாவும் முஸ்லிம்களுக்கு எதிரியா?.
இல்லை.
கீழ்க்காணும் ஹதிஸை நன்றாக கவனியுங்கள்.
மல்ஹமா யுத்தத்தின்(World war 3) கடைசி கட்டத்தில் ரோமர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடுமையான யுத்தத்திற்கான முன்னெடுப்புகள் நடைபெறும் போது ரோமர்களின் ஒரு பகுதியினர் முஸ்லிம்களுடன் உடன்படிக்கைக்கு முயல்வர்.அப்போது அவர்கள் முஸ்லிம்களிடம் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பிரச்சினை என்பது தேவையில்லாதது.நீங்கள் எங்களின் துரோகிகளை,எங்கள் மதத்திற்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிட்டால் நாம் நட்புடன் இருக்கலாம். போரை தவிர்த்துவிடலாம் என்பார்கள்.ஆனால் முஸ்லிம்கள், எங்கள் சகோதரர்களை புறக்கணிக்க மாட்டோம் என்று கூறி ரோமர்களின் உடன்படிக்கையை ஏற்காமல் போரிட்டு வெற்றி பெறுவார்கள்.
இந்த ஹதிஸை நன்றாக கவனியுங்கள்.
போரில் ரோமர்களில் இரு பிரிவுகள் இருக்கும்.
இரு பிரிவின் மதமும் கிறித்தவம் தான்.
ஒரு பிரிவு முஸ்லிம்களுடன் உறவில் இருப்பர்.
நம்முடன் இருக்கும் ரோம பிரிவை, எதிர் ரோம பிரிவினர் கிறித்தவ மத துரோகிகள் என்பார்கள்.
நம்முடன் இருப்பவர்கள் கிழக்கு கிறித்தவர்கள் அதாவது கிழக்கு ரோமானியர்கள்.(ரஷ்யர்கள்)
நம் எதிரிகள் மேற்கு கிறித்தவர்கள்(மேற்கு ரோமானியர்கள்-ஜெர்மன்,பிரான்ஸ்,இங்கிலாந்து,அமெரிக்கா)
மேற்கு கிறித்தவர்கள்,கிழக்கு கிறித்தவர்களை ஆயிரம் ஆண்டுகளாகவே மத துரோகிகள் என்று தான் அழைக்கிறார்கள். GREAT SCHISM என்னும் கிறித்தவ பிளவை அறிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.
ஆக ஹதிஸில் நமக்கு எதிரியாக வரும் ரோமர்கள்- மேற்கு ரோமர்கள்(AMERICA AND NATO) ஆவார்கள்.
நட்பாக வருபவர்கள் கிழக்கு கிறித்தவர்கள்-ரஷ்யர்கள்.
மேலும் குர்ஆனில் அர்ரூம்(ரோம்) என்ற அத்தியாயத்தில் இறைவன், பெர்சியாவிடம் தோல்வியடைந்த கிழக்கு ரோமர்களுக்கு(கிழக்கு கிறித்தவர்களுக்கு) இரண்டு வெற்றிகளை பற்றிய முன்னறிவிப்பு வழங்குகிறான்.இரண்டு வெற்றிகளும் முஸ்லிம்களுக்கு பெரு மகிழ்ச்சி வழங்கும் என்றும் அறிவிக்கின்றான்.
முதல் வெற்றி தூதரின் காலத்திலேயே நடந்துவிட்டது.முஸ்லிம்கள் மகிழ்ச்சியடையக்கூடிய இரண்டாவது வெற்றியை ரோமர்கள் இன்னும் அடையவில்லை.
இந்த இரண்டாவது வெற்றி மல்ஹமா யுத்தத்தில் வரவுள்ளது.
ஹதிஸை விட குர்ஆன் வசனமே உறுதியானது.தெளிவானது. எனவே முஸ்லிம்கள் மகிழக்கூடிய ரோமர்களின் (ரஷ்யாவின்) வெற்றி அருகில் உள்ளது.
மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களின் நண்பன் ரஷ்யா தான்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.
தஜ்ஜால் தொடர் - பதிவு- 32; தஜ்ஜாலும் போர்களும். நமது எதிரிகள் மற்றும் துரோகிகள் யார் என்பதை தெளிவாக முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். இன்று நமது நண்பர்கள் யார் என்று காண்போம்:-https://e-funandjoyindia.blogspot.com/2020/11/32.html
Post a Comment