HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 24 July 2017

இலவச போன் எனக்கூறி 3 ஆண்டுகளுக்கு நமக்கு ஜியோ வைக்கும் செலவுகள் என்னென்ன.?

செப்டம்பர் 1, 2016 மற்றும் ஜூலை 21, 2017: இந்த இரண்டு தேதிகளும் இந்திய டெலிகாம் சந்தையை மாற்றியமைத்த தேதிகள் என்று குறிப்பிடலாம். இந்த தேதிகளில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் இரண்டு பெரிய அறிவிப்புகளை நிகழ்த்தி, அதன் போட்டியாளர்கள் மீது ஒரு பெரும் போரை திறந்துவிட்ட தேதிகளாகும். 

முதலில் "இலவச ஜியோ 4ஜி" நெட்வொர்க் வந்தது. பின்னர் சமீபத்தில் நிறுவனத்தின் பூஜ்ய விலை மதிப்பிலான 4ஜி மொபைல் வெளியானது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் பற்றிய அனைத்து அம்சங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், தொலைபேசி ஏற்கனவே இரண்டு "குழப்பங்களை" உருவாக்கி விட்டுள்ளது. 

முதலாவதாக, இந்தியாவில் 4ஜி வோல்ட் ஆதரவுடன் மலிவான விலையில் வெளியாகும் கருவி இதுவாகும். இரண்டாவதாக நிறுவனம் இதை "இலவச" விலை குறியீட்டில் வெளியிடுகிறது - அங்குதான் எழுகிறது சந்தேகங்கள். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பூஜ்ய விலை மொபைல் தானா.? ஜியோ நிறுவனம், ஜியோபோனை இலவசமாக கிடைக்கும் சாதனம் என்று கூறுகிறது. 

ஒரு சிறிய கணக்கு போட்டு பார்த்தால் ஜியோபோன் உங்களிடம் இருந்து எந்த அளவிலான பணத்தை பெறும்.? இது நிஜமாகவே பூஜ்ய விலை மதிப்பிலான இலவச மொபைல் தானா.? என்ற கேள்விகளுக்கான பதில் உங்கள் கையிலேயே இருக்கும். கவனிக்க வேண்டிய முதல் விடயம் ரூ.1500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் செலுத்தி ஜியோபோன் ஒன்றை சொந்தமாகும் வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படுமென்று நிறுவனம் கூறியுள்ள போதிலும் ரூ.153/- ரீசார்ஜ் திட்டத்தை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். 

இது ஜியோபோனுக்கு கட்டாயமாகும் இது நிஜமாகவே பூஜ்ய விலை மொபைல் தான என்பதை விளக்க ரூ.153/- என்ற அடிப்படை திட்டத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இது ஒவ்வொரு ஜியோபோனுக்கும் கட்டாயமாகும் மறுகையில் குறைந்தபட்சம் ரூ153/- ரீசார்ஜ் தொடங்கி ரூ.309/- மற்றும் ரூ.509/- என்ற இறுதி திட்டங்களும் உள்ளன. 

இதில் ஜியோ கேபிள் டிவி ரீசார்ஜ் நிகழ்த்த ஜியோபோனுக்கான உங்கள் செலவு அதிகமாக இருக்கும். ஆக எளிமையாக ரூ.153/- திட்டத்தை வைத்து போடலாம் வாங்க.! டூயல் ஸ்க்ரீன்; டூயல் கேம் அமைப்புடன் மெய்ஸூ ப்ரோ 7.! இந்தியாவில் 6 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம் உடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா.! ஆண்ட்ராய்டு 7.0 & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் செலுத்த வேண்டிய தொகை ஜியோபோன் வாங்க ரூ.1500 + குறைந்த பட்ச முதல் ரீசார்ஜ் ரூ.153 = ரூ.1653/- ஆகிறது. 

இது ஜியோபோன் வாங்கும் போது மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். ஒவ்வொரு மாதமும் ரூ.153/- என்ற ரீசார்ஜ் வருகின்றது.ஆக ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.153 x 12 மாதங்கள் = ரூ.1836/- ஆகும். தொகையின் அளவு அதிகரிக்கும் நீங்கள் ரூ.153 திட்டத்தை தேர்ந்தெடுத்தால், வருடத்திற்கு ஜியோபோனிற்காக நீங்கள் செலவு செய்யும் தொகை இதுவாகும்.

 நீங்கள் அதிக இறுதி திட்டங்களுக்கு சென்றால் அல்லது ஜியோ டிவி கேபிள் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்தால் இந்த செலவு தொகையின் அளவு அதிகரிக்கும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு சரி இப்போது, 

நீங்கள் மூன்று ஆண்டுகளாக ஜியோபோன் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் பாதுகாப்பான கருத்தாகும்.ஆக மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் குறைந்த பட்ச ரீசார்ஜ் நிகழ்த்தினால் - ரூ.153 x 36 மாதங்கள் = ரூ 5508/- ஆகும். 

இப்போது, ஜியோபோன் டெபாஸிட் தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு செலவிட்ட மொத்த தொகையை கூடுங்கள். ரூ.5508 + ரூ.1500 = ரூ.7008/- ஆகும். டூயல் ஸ்க்ரீன்; டூயல் கேம் அமைப்புடன் மெய்ஸூ ப்ரோ 7.! இந்தியாவில் 6 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம் உடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா.! ஆண்ட்ராய்டு 7.0 & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் ஆக மொத்த செலவு ஆக ரூ.7008/- என்பது ஜியோபோன் திட்டத்திற்காக நீங்கள் மூன்று வருடங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையாகும். 

ஆனால் நீங்கள் டெபாஸிட் பணத்தை திரும்ப பெறுவீர்கள். ஆக மொத்த செலவு ரூ.7008 - டெப்பாஸிட் தொகை ரூ.1500/- கழித்தால் ரூ.5508/- ஆகும். ஆக ஜியோபோனிற்காக 3 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யும் குறைந்தப்பட்ச செலவு ரூ.5508/- ஆகும். செலவும் உள்ளடக்கம் ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களை கொண்டிருந்தாலும் ஒரு அடிப்படை மொபைலாக தெரியும் ஜியோபோன் ரூ.5508/- என்ற செலவை தருகிறது. 

எனினும், இந்த விலைக்குள் தரவு, அழைப்புகள் மற்றும் செய்திகள் ஆகியவைகளுக்காக நீங்கள் செய்யும் பொதுவான செலவும் உள்ளடக்கம் என்பதை மறுக்க முடியாது. கூற விரும்பும் கருத்து கோட்பாட்டளவில், ஜியோபோன் மற்றும் ரூ.153/- திட்டத்தின் கீழ், நீங்கள் வரம்பற்ற வோல்ட் அழைப்புகளை பெறுவீர்கள், வரம்பற்ற செய்திகள் மற்றும் மாதத்திற்கு 15 ஜிபி தரவும் கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகையை சந்தையில் கிடைக்கும் மிகசிறந்த சலுகையென்ற முடிவுக்கு வர வேண்டாம். 

இந்த செலவில் நீங்கள் வேறு மொபைலும் வாங்கலாம், அத்துடன் உங்களின் வழக்கமான ஜியோ 4ஜி சேவையையும் தொடரலாம் என்பதே நாங்கள் வாசகர்களுக்கு கூற விரும்பும் கருத்து.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com