
கோச்சடையானை தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள விஐபி2 படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“விஐபி2 அதிரடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது.
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற வலுவான கேரக்டரில் கஜோல் நடித்துள்ளார்.
இயக்கம் மட்டுமில்லாமல் இசை, ஒளிப்பதிவு போன்ற துறைகளிலும் பெண்கள் வரவேண்டும்.
சிரஞ்சீவி மற்றும் அஜித் படங்களை இயக்க ஆசை உள்ளது.
சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. கதையும் கேரக்டரும் பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன்.” என தெரிவித்தார்.
Post a Comment