“கலைஞானி” கமல்ஹாசன் : 60 ஆண்டுகள் தமிழ் படைப்புலகின் சகலகலா இயக்கம்... https://e-funandjoyindia.blogspot.com/2019/11/60.html?spref=tw
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி. சின்மயியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கமலஹாசன் அலுவலகத்தில் சமீபத்தில் கே பாலச்சந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்து சின்மயி குறிப்பிடுகையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் வெளியில் தலை காட்டவே தயங்குவார்கள். ஆனால் பெரிய மனிதர்கள் மட்டும் தங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை தங்களுடைய இமேஜ் மூலம் மறைத்துவிட்டு எப்போதும் போல் வலம் வருகிறார்கள். ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளான நான் மட்டும் தடை செய்யப்பட்டு உள்ளேன். இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை’ என்ற தனது ஆதங்கத்தை சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கமலஹாசன் எப்படி தனது அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுக்கலாம்? என்ற சின்மயி பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment