ரஜினி மற்றும் கமல் இருவரும் தற்போது அரசியலில் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்கிற சூழ்நிலை தான் நிலவுகிறது. அவர்களுக்கு முதலமைச்சர் உட்பட அதிமுக தரப்பில் இருந்து பல விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினி-கமலை பற்றி கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமசித்துள்ளார். மூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருவதாக கூறுவது எந்த வகையில் நியாயம் என கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் பிரச்சனை, கட்டிடம் கட்டுவதில் பிரச்சனை என நடிகர் சங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி அவர் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
அதற்கு வழிகாட்ட முடியாதவர்கள், நாட்டிற்கு வழிகாட்டுவார்களா? எனவும் கேட்டுள்ளார் அவர்.
Post a Comment