HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 16 November 2019

"சிலி நாட்டில் எதுக்கு கலவரம்?" நம்_அரசை_நாம்_கேட்போம்...

#நம்_அரசை_நாம்_கேட்போம்

"சிலி நாட்டில் எதுக்கு கலவரம்?" என பக்கத்து கடைக்காரர் எனது ஸ்டூடியோவில் வந்து அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தவாறு கேட்டார். கலவரம் இல்லை, புரட்சியாம் என்றேன் நான்‌.

"எதுக்காம்?" எனக் கேட்டார்.

மெட்ரோ விலை ஏற்றம் முக்கியமான காரணம். அவங்க சம்பாதிக்கிறதுல ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்துக்கு செலவாகுதாம். கல்வி தண்ணீர் அத்தியாவசிய தேவைகள் எல்லாத்துலயும் தனியார்மயம் அதிகரிச்சிருக்கு எல்லாத்தையும் எதிர்த்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடுறாங்க என்றேன்.

"போராடுனா சுடுவாங்களே.. அங்க யாரையும்  சுட்டுக்கொல்லலையா?"ன்னு  கேட்டாரு.

விடுவாங்களா?! கேள்வி கேட்டா சும்மா இருக்குமா கார்பரெட் அரசு! பத்தொன்பது பேரை இதுவரை சுட்டுதள்ளி இருக்கு.

எல்லா இடத்திலும் இதே பிரச்சனை தான். இளைஞர்கள் தான் தைரியமா ஒன்று சேர்ந்து கேள்வி கேட்கனும்ன்னு கோபமா சொன்னார்‌.

அதுக்கு, முதல்ல அரசு ஆதரவோடு நலத்திட்டங்கள் வளரச்சித்திட்டங்கள் என கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பது மக்களுக்கு புரியணும். ஓட்டுப் போட்டா மட்டும் பத்தாது. அரசு மக்களுக்கான பணிகளை தான் செய்கிறதான்னு தொடர்ந்து கவனிக்கனும். அரசின் வளர்ச்சி திட்டங்கள் மூலமா மக்களுக்கு என்ன பலன் என ஆராயனும் என்றேன்.

 "உண்மை தான். இல்லேன்னா, அரசு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து விமானம் வாங்குறதுக்கு முன்னாடி போர்வெல்லில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற, மலக்குழியில் யாரும் விழுந்து சாகாம இருக்க எந்திரங்கள் வாங்கவும் கவனம் காட்டியிருப்பாங்க." என்றார்.

அப்படிப்பட்ட எந்திரங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நாலு சென்டர்ல வச்சிருந்தா இந்நேரம் சுர்ஜித் நம்ம கூட இருந்திருப்பான் என்றேன் கனத்த இதயத்தோடு.

"ஆமா, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. தீபாவளி பட்டாசு வேணாம் அந்த தம்பி வந்தா போதும்னு என் பொண்ணு சாப்பாடு கூட சாப்டாம அழுதிட்டிருந்திச்சி" என அவர் 6ம் வகுப்பு படிக்கும் மகளை பற்றி சொன்னார்.

எங்க வீட்லயும் அப்படித் தான். நம்ம குழிய மூடகூடாதான்னு  கோபப்பட்டுறதோட அடங்கிப் போய்டுறோம். புயல், பூகம்பம்,  வெள்ளச் சேதம், அணு கசிவு ஏற்பட்டால் நம்மை காப்பாற்ற அரசு என்னென்ன உபகரணங்கள் வச்சிருக்குன்னு யாருக்காவது தெரியுமா?

5 நாள் மாத்தி மாத்தி ட்ரயல் தான் நடந்தது. சரியான திட்டம் உருவாக்கி அரசு தயாராக இல்லை. நம்ம எப்பவும் கேட்டதும் இல்லை. அதனால தான் தைரியமா நவீன எந்திரம்னு வாளியை தூக்கிட்டு வந்துட்டறாங்க.

இனிமேலாவது ஏன் எதுக்குன்னு காம்ப்ரமைஸ் பண்ணாம கேள்விகேட்டு பழகணும்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com