
SHIVANI NARAYANAN CUTE IMAGES 3:-https://e-funandjoyindia.blogspot.com/2019/11/shivani-narayanan-cute-images-3.html
அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாம் பார்த்து பழகிய முகங்கள் நடனம் ஆடுவார்கள்.
அப்படி நமக்கு பழக்கப்பட்ட ஒருவர் என்றால் சதாம் தான். இவரை அஜித், விஜய் படங்களை தாண்டி சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் பட பாடல்களிலும் நடனம் ஆடியிருப்பார்.
இவர் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடனம் ஆடிய அனுபவம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், இப்பட இன்ட்ரோ பாடல் நார்த் இந்தியாவில் நடந்தது. அங்கே பயங்கர வெயில், காலையில் இருந்து 12 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். பிறகு பிரேக் விட்டு 3 மணிக்கு மேலாக ஷுட்டிங் எடுப்பார்கள்.
அப்போது ஒரு நாள் நாங்கள் சாப்பாடு பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.
அதைக்கேட்ட அஜித் அவர்கள் சாப்பாடு சரியில்லையா என கேட்க நாங்கள் நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட ஆசையாக இருப்பதாக கூறினோம்.
உடனே அவர் அன்று இரவு ஒரு பெரிய ஹோட்டலில் இருந்து எங்க எல்லாருக்கும் நம்ம ஊர் சாப்பாடு ஆர்டர் பண்ணியிருந்தார். சாப்பாடு வந்ததும் அவரே அதை எங்களுக்கு பரிமாறினார் என்றார்.

Post a Comment