சிலி நாட்டில் எதுக்கு கலவரம்?" நம்_அரசை_நாம்_கேட்போம்:-https://e-funandjoyindia.blogspot.com/2019/11/blog-post_7.html
தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமலஹாசன்
இந்நிலையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் 1989 ஆம் ஆண்டு சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன்நடிப்பில் வெளிவந்த “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தை ஒத்துப் போய் உள்ளது சகோதரர்கள்” கருத்துக்களும் பரவி வந்தது. இந்த அபூர்வ சகோதர்கள் படத்திலும் இரண்டு மகன்களும் தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை. மேலும்,அந்த அபூர்வ சகோதர்கள் படத்தின் கதையை தழுவிய மாதிரி அட்லியின் மெர்சல் படம் உள்ளது என்ற கருத்தும் பரவியது.அதோடு மெர்சல் படம் வந்தபோது அட்லியும், விஜய் அவர்களும் கமலஹாசன் அவர்களை நேரில் பார்த்து சந்தித்து உள்ளார்கள். அப்போது அவர்களுக்குப் பின் அபூர்வ சகோதரர்கள் படம் போஸ்டர் இருந்தது. இந்நிலையில் கமலஹாசன் அவர்கள் ஒரு பேட்டியில் பேசிய போது அதில் ஒருவர் கேட்டது ‘உங்களுடைய வீடியோக்களில் உங்களுக்கு பின்னால் வரும் போஸ்டர்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் எனக்கு உள்ளது. உதாரணத்திற்கு அட்லி மெர்சல் சமயத்தில் உங்களை பார்க்க வரும்போது உங்கள் பின்னால் அபூர்வ சகோதரர்கள் படம் இருந்தது. அதை தொடர்ந்து வந்த பல வீடியோக்களில் உங்களுக்கு பின்னால் காமராஜர், அப்துல்கலாம், பெரியார் போன்ற பல தலைவர்களின் படம் இருந்தது என்று கேட்டார். உடனே கமலஹாசன் அவர்கள் காமராஜர்,அப்துல் கலாம், பெரியார் புகைப்படம் வந்ததெல்லாம் விபத்தல்ல. ஆனால், நீங்கள் சொன்ன அட்லி வீடியோ ஒரு விபத்து தான் என்று சிரித்துக்கொண்டே கமலஹாசன் அவர்கள் கூறினார். மேலும். இந்த வீடியோ குறித்து பல கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள் நெட்டிசன்கள்...
Post a Comment