HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 22 November 2019

நான் பொருளாதார மேதை இல்லை. ஆனால் ஒன்றை உறுதியாக சொல்வேன். வீழ்ந்த பொருளாதாரத்தை இனி தூக்கி நிறுத்த முடியாது.இறுதி கால கட்டத்தில் ஜெரூசலம் | இறுதி நூற்றாண்டு PART - 03....

Image result for இறுதி கால கட்டத்தில் ஜெரூசலம் | இறுதி நூற்றாண்டு


நான் பொருளாதார மேதை இல்லை.

ஆனால் ஒன்றை உறுதியாக சொல்வேன்.

வீழ்ந்த பொருளாதாரத்தை இனி தூக்கி நிறுத்த முடியாது.

மேலும் மேலும் பொருளாதாரத்தை கீழே கீழே கொண்டு போக வேண்டும் என்பதே திட்டமிடல்.

வறுமை மனிதனை எளிதில் கை ஏந்த வைத்து விடும். வறுமை குஃப்ருக்கு நெருக்கமானது.
வறுமை தஜ்ஜாலை எளிதில் வணங்க வைக்கும் ஆயுதம்.
அவன் ஃபித்னாவில் வீழ வைக்கும் சாதனம்.

அதற்கான திட்டமிடுதலே இந்த பொருளாதார வீழ்ச்சி பாதை.

இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாதை.

இந்த பாதையில் பயணிக்காமல் தவிர்க்க சில வழிகளை நாம் கையாள வேண்டும்

1.முதலாவது செய்யவேண்டியது.
இன்டெர் நெட் வழியாக பொருள் வாங்குவதை விற்பதை உடனே நிறுத்த வேண்டும்.
நெட் வழியாக ஒரு டாக்சியை கூட புக் பண்ணாதீங்க.
பிற்காலத்தில் சர்வீஸ் சார்ஜ்ங்கிற பெயரில் உங்களை வாழ் கடனாளி யாக்கும்.

2.கிரிடிட் கார்டு வாங்காதீர்கள். இன்ஸுரன்ஸ் போடாதீர்கள்.

3.விவசாயத்தை முழுமையாக நம்புங்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப விவசாயம் செய்தே ஆகவேண்டும். பலன் தரும் மரங்களை வீட்டு காம்பவுண்டுக்குள்ளோ அல்லது ரோட்டிலே நடுங்கள்.
பலன் தரும் காய்கறி பழங்கள் தரும் செடி கொடிகளை நடுங்கள். அது உங்கள் வீட்டுத்தோட்டமாகவோ மாடித்தோட்டமாகவோ இருக்கலாம்.

4.பால் தரும் கால்நடைகளை வளருங்கள். கறி முட்டை தரும் பறவைகளை வளருங்கள்.

5.வியாபாரம் செய்பவர்கள் கவனத்திற்கு. இனி இன்னும் வியாபாரம் குறையும் அதனால் முழு உழைப்பும் வியாபாரத்தில் செலவிடாமல் நீங்கள் விற்பனை செய்யும் பொருளில் ஒன்றிரண்டை நீங்களே உற்பத்தி செய்யுங்கள். அந்த உற்பத்தியில் உங்கள் குடும்பத்தினர் உழைப்பு மட்டும் இருக்கட்டும். சம்பளத்திற்கு ஆள் வைக்க வேண்டாம்.
பெரிய தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு சிறு தொழில் கைவசம் இருக்க வேண்டும். இந்த சிறு தொழில் வருமானம் உங்கள் குடும்பத்தினர் பட்டினியாக இருக்காமல் தவிர்க்க.

6. அடுக்கு மாடி குடியிருப்பை தவிருங்கள். அது உங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றாது.பிச்சையெடுக்க வைத்து விடும்.

7.நீங்கள் எவ்வளவு பெரிய தொழில் அதிபராக வோ வியாபாரியாகவோ இருங்கள். ஆனால் நீங்களும் உங்கள் குடும்பமும் சுய உழைப்பின் அடிப்படையில் குடும்பத்தை ஓட்டுவதற்கு தனியொரு ஏற்பாட்டை பண்ணி வையுங்கள்.

8. நீங்கள் செய்யும் தொழில் அல்லது வியாபாரமோ எதுவோ அது கடனில் இருக்கக்கூடாது.
இருந்தால் கடனில்லாத சிறு தொழில் அல்லது சிறு வியாபாரத்தை மாற்றாக வைத்துக்கொள்ளுங்கள்.
அதுபோல் கடனில்லாத வாகனமும் வைத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜாலின் துருப்புச்சீட்டே உங்ளை கடனாளி ஆக்கும் நிதி நிறுவனங்களே.

இனி வரும் காலம். மிகவும் குழப்பமான காலமே.

போர் ஃபித்னா என்று ஈமானுக்கு சோதனையான காலமே.

தஜ்ஜாலையும் கார்ப்ரேட்டுகளையும் வென்றிட.


#தாஜ்ஜாலின் காலத்தில் ஒரு ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைப்பகுதிக்கோ மழை பெய்யும் பகுதிக்கோ சென்று குடியேறுங்கள்.


அபூபசியா




PLEASE SEE VIDEO  BLOW..



ஷியா,சுன்னி பிரிவும் உம்மத்தின் அழிவும் | இறுதி நூற்றாண்டில், இறுதி சமுதாயம்| Part -02:- https://e-funandjoyindia.blogspot.com/2019/10/part-02.html?spref=tw


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com