HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 22 August 2019

அப்போ டபுள் ட்ரீட்-னு சொல்லுங்க..! - தல 60 குறித்து வந்த மாஸ் நியூஸ்..

நடிகர் அஜித்குமார் வெங்கட்பிரபு இயக்கிய "மங்காத்தா" படத்தில் இருந்தே சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வருகிறார். 

நேர்கொண்ட பார்வை படத்தில் முந்தைய படங்களை விடவும் வயதானவரைப்போன்று நடித்தார். போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய அந்த படம் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் நேர்கொண்ட பார்வை குழுவுடனேயே இணைகிறார். 

ரேஸிங் வீரர் தொடர்பான கதையில் உருவாவதாலும், அஜித் நிஜ பைக் ரேஸர் என்பதாலும், அவர் பல சாகசங்களை செய்யும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறப் போகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கிறார் அஜித். 

அதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஜித். மங்காத்தா படத்தில் இடம் பெற்ற சில நிமிட ரேஸிங் காட்சிகளுக்கே அரங்கம் அதிர்ந்தது. இப்போது, படமே ரேஸிங் வீரரின் படம் என்பதால் டபுள் மங்காத்தா தான் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். 

இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள  படப்பிடிப்பில் முதல் நாளே கலந்து கொள்கிறார் அஜித். மேலும் இந்த திரைப்படத்திற்கு தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டனர்… அதன்படி இந்த திரைப்படத்திற்கு அன்பு கட்டளை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது… பொறுத்திருந்து பார்ப்போம் இந்த திரைப்படத்திற்கு இதுதான் பெயரா இல்லை புதிதாக பெயர் வைப்பார்களா என்று…

Nerkondapaarvai #independence_day special full/program/watch/here:-https://youtu.be/3d78M7UqJCw



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com