மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம்.
அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள்.
அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார்.
அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அஜித் முதலில் அவரை ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வர ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்ட வேண்டும்.
ஷரதா டாப்ஸி அளவிற்கு ஈகுவலாக செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் தனக்காக யாராது உதவி செய்வார்களா, இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியுமா? என்று அவரி பதட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கடத்துகிறார்.
படத்தின் ரியல் ஹீரோ வினோத்தின் வசனங்கள் தான், பிங்க் படத்தில் வரும் வசனங்கள் என்றாலும் அதை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி அனைவருக்கும் புரியும்படி சொன்னது சூப்பர்.
அதிலும் அஜித்திற்கு என்று ஒரு ஆக்ஷன், அவருக்கு என்று ஒரு காதல் கதை என்று வந்தாலும் அதை கதையுடன் கொண்டு வந்த விதம் வினோத் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் என சொல்ல தோன்றுகின்றது.
படத்தின் இரண்டாம் பாதி முமுவதுமே கோர்ட் ரூம் ட்ராமா என்றாலும் முடிந்த அளவிற்கு அதை போர் அடிக்காமல் வினோத் கொண்டு சென்றுள்ளார், ஆனால், கண்டிப்பாக தெறிக்க விடலாமா என்று அஜித்திடம் மாஸ் எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் வரலாம்.
படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர், போகிற போக்கில் நார்த் ஈஸ்ட் பெண்கள் சென்னையில் படும் கஷ்டத்தை வசனத்தில் சொன்னது பாராட்டத்தக்கது.
நோ மீன்ஸ் நோ என்ற ஒரு தாரக மந்திரத்தை மையமாக கொண்டு அதுக்குறித்து கிளைமேக்ஸில் அஜித் கொடுக்கும் விளக்கம் கண்டிப்பாக விவாதத்தை ஏற்படுத்தும்.
யுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும் பின்னணியில் படத்தை தாங்கி நிற்கின்றார், அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு, கோர்ட் ரூமையே சுற்றினாலும் அலுப்பு தட்டவில்லை.
க்ளாப்ஸ்
அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் முழு நடிப்பை காட்டியுள்ளார்.
படத்தின் அனைத்து டெக்னிக்கல் விஷயங்கள்.
ரங்கராஜ் பாண்டே
ஷரதா, அபிராமி நடிப்பு
படத்தின் வசனங்கள்
பல்ப்ஸ்
யுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை
மொத்தத்தில் இந்த நேர்கொண்ட பார்வை, அனைவரின் கண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வை. 4.5/5
Post a Comment