Bigg Boss3 8th Eviction : உலக நாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை ஒருவர் வெளியேற்றப்படுவார்கள், இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால் என 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
8-வது எவிக்ஷனுக்காக மதுமிதா, லாஸ்லியா, கவின், முகேன் மற்றும் அபிராமி என ஐந்து பேர் நாமினேஷனில் இடம் பெறுள்ளனர். ஓட்டெடுப்பில் தொடர்ந்து அபிராமி குறைந்த ஓட்டுகள் பெற்று கடைசி இடத்திலேயே இருந்து வந்தார்.

ஆனால் இந்த வாரம் அவர் வெளியேறப்போவதில்லை, மாறாக அவரை சீக்ரெட் ரூமிற்குள் அனுப்ப பிக் பாஸ் டீம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஓரிரு நாட்கள் சீக்ரெட் ரூமிற்குள் வைத்து விட்டு அதன் பின்னர் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் நடப்பதையெல்லாம் பார்க்கும் போது முழு விவரம் தெரியாமலேயே மற்றவர்களின் பிரச்சனைகளை காரணம் காட்டி ஆண்களிடம் வம்பிழுத்து வரும் மதுமிதா வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் இருவரில் வெளியேறப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எப்படியும் யார் வெளியேறுகிறார்? சீக்ரெட் ரூமிற்குள் செல்கிறார்களா? என்ற விவரம் நாளைக்கும் உறுதியாக தெரிந்து விடும்.
Post a Comment