
பிக் பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட்டாக சென்ற வனிதா மீண்டும் தொடர்வாரா? அல்லது அவர் வெளியேற்றப்படுவாரா? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss Vanitha Vijayakumar : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தற்கொலைக்கு முயன்றதால் மதுமிதா நேற்று வெளியேற்றப்பட்டார், இதனையடுத்து அபிராமி இன்று எவிக்ஷனில் வெளியேற்றப்படுகிறார்.
இதையெல்லாம் விட இத்தனை பிரச்சனைக்கு காரணமான வனிதா வெளியேற்றப்படுவாரா? இல்லையா? என்பது தான் ரசிகர்கள் கேள்வியாக உள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின் படி வனிதா ரி என்ட்ரி கொடுத்த பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இதனால் அவரை தொடர்ந்து போட்டியாளராகவே வைத்திருக்க பிக் பாஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வனிதா தொடர்ந்து நாரதர் வேலையை தொடர்வார், அவரால் இன்னும் பல பிரச்சனைகள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் மக்கள் ஒட்டு போட்டு வெளியேற்றியவரை உங்களின் சுய லாபத்திற்காக போட்டியாளராக தொடர் வைத்தால் மக்களின் ஓட்டிற்கு என்ன மதிப்பு? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பவும் தொடங்கியுள்ளனர்.
Post a Comment