Bigg Boss3 7th Elimination : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது.
இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் என 6 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் 7-வது எலிமினேஷன் நடைபெற உள்ளது.
இதற்காக லாஸ்லியா, அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால் நாமினேடாகி இருந்தனர். இவர்களில் சாக்ஷி அகர்வால் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் சாக்ஷி அகர்வால் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Post a Comment