கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசனில் இருந்து அபிராமி வெளியேற்றப்பட்டார், அதற்கு முன்பாக மதுமிதா கையை அறுத்து கொண்டதாக கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுமிதா தற்கொலை முயற்சிக்கு காரணம் ஷெரின் மதுமிதா இடையே ஏற்பட்ட காவிரி பிரச்சனை தான் என்ற பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் தற்போது கவின் நடிப்பில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் அளித்துள்ள பேட்டியில் இது உண்மையில்லை ஸ்க்ரிப்ட் என பேசியுள்ளார்.
மேலும் ஆரம்பத்திலேயே கவினும் சாண்டியும் சேர்ந்து மதுவை அப்படி கலாய்த்தார்கள் ஆனால் அப்போதெல்லாம் மதுவிற்கு கோபம் வரவில்லை. நாட்டாமை டாஸ்கின் போது கண்டபடி பேசி கோபப்பட்டார் என கூறியுள்ளார்.
அதே போல் தற்கொலை முயற்சி என கையில் கட்டு கட்டி கொண்டு வருவாராம், ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பதை மக்களுக்கு காட்ட மாட்டார்களாம். அப்படி இருக்கும் போது இது எப்படி உண்மையாக இருக்கும்?
அப்படியே மது தற்கொலை முயற்சிக்கு ஆளானது உண்மையாகவே இருந்தால் கூட முழு நீள கை வைத்த உடை அணிந்து கட்டை மறைத்து கொண்டு வந்திருக்கலாமே என கேள்வி எழுப்பி எல்லாம் TRP-க்காக நடந்த ஒன்று தான் என பேசியுள்ளார்.
Post a Comment