ஏழு மாத இடைவெளிக்குள் அஜித் நடித்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஒட்டு மொத்த வசூல் 120 கோடியை தாண்டியுள்ள நிலையில் ஏழு மாதத்தில் 300 கோடி ரூபாய் வர்த்தகத்தை அஜித் நிகழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. போட்டிக்கு அதே தினத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாகி இருந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூல் செய்தது.
தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தை காட்டிலும் அதிக வசூலை ஈட்டிய விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்த தொகை 135 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதனை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் மட்டும் கடந்த ஏழு மாத இடைவெளியில் அஜித் திரைப்படங்கள் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்துள்ளது.
2015-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் வர்த்தக ரீதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
2015-ம் ஆண்டிற்கும் 2019-ம் ஆண்டிற்கும் இடையே அஜித் நடிப்பில் விவேகம் மட்டுமே வெளியானது இந்தத் திரைப்படமும் வர்த்தக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் தோல்வியடைந்திருந்ததால் துவண்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்கள் உற்சாகத்தை அளித்துள்ளது.
ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு திரைப்படம் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து காலா, 2.0, பேட்ட ஆகிய திரைப்படங்களை குறுகிய இடைவெளியில் கொடுத்து ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டினார்.
தற்போது அஜித்தும் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை கொடுத்துள்ளதால் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபம் பார்த்துள்ளனர். இதேபோல பெரிய நடிகர்கள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெற்றித் திரைப்படங்களை கொடுப்பது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என கருதுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.
·
#Thala #Ajith 's #NerKondaPaarvai has crossed ₹ 100 Crs Gross at the WW Box office..
Congratulations Team!
#NKP100CrBlockbuster
Post a Comment