அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஒரு ரீமேக் படம், அதுவும் எந்த ஒரு மாஸ் இல்லாத ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு, புக்கிங் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அஜித், அந்த காரணத்தை அஜித் எப்படி நிறைவேற்றினார் என்பதே படத்தின் ஸ்பெஷல்.
வினோத் ஏதோ ரீமேக் படம் கிடைத்துவிட்டது, அப்படியே எடுத்துவிடலாம் என்று இல்லாமல், படத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த நடிகர்கள் தான் செம்ம ப்ளஸ். அதிலும் அஜித்தை எதிர்த்து வாதாடும் ரங்கராஜ் பாண்டேவை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம்.
ஒரு பெண்ணிற்கு நடக்கும் கொடுமை, அதை தொடர்ந்து அவருடன் சேர்ந்து தோழிகளுக்கும் நடக்கும் டார்ச்சர், இதை கவனித்து வரும் வக்கீல் அஜித் இப்படி ஒரு சஸ்பென்ஸாகவே நகர்கின்றது முதல் பாதி(பிங்க் ஹிந்தியில் பார்க்காதவர்களுக்கு).
இதை தொடர்ந்து அஜித் ஒரு கட்டத்தில் அந்த வழக்கை தன் கையில் எடுக்க, மிகப்பெரும் சக்தி வாய்ந்த இளைஞர்கள் குடும்பத்தை எதிர்ந்து அந்த பெண்களுக்கு நீதி வாங்கி தருவதே இந்த நேர்கொண்ட பார்வை.
அஜித் வழக்கம் போல் ஒன் மேன் ஷோ, அவர் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து ரீமேக் செய்ததற்கு பாராட்ட வார்த்தை இல்லை, ஒரு பெண் வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் தொடக்கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அப்லாஸ் தான்.
கண்டிப்பாக பெண்கள் கொண்டாடுவர்கள், அதே நேரத்தில் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ஆனால், கண்டிப்பாக அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட் படங்கள் என்று 5 எடுத்தால், அதில் இனி நேர்கொண்ட பார்வை இடம்பெறும்.
நேர்கொண்ட பார்வை ஒரு அழுத்தமான கருத்தை ஆழமாக விவாதித்து அழகாக கூறியுள்ளனர்.
Post a Comment