
NAYANTHARA CUTE SAREE IMAGES... https://e-funandjoyindia.blogspot.com/2019/08/nayanthara-cute-saree-images.html?spref=tw
கவின் மற்றும் லாஸ்லியாவின் செயல்கள் நேயர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் படி உள்ளது. மேலும் கவினை அனைவரும் திட்டி வந்தனர்.
இதற்கிடையில் கவின் அம்மா சீட்டு கம்பெனி நடத்தி அதில் ஊழல் செய்ததாக நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்கள் அவ்வாறு செய்யாதீர்கள் என்று தெரிவித்தார்கள்.
இவர்களை தொடர்ந்து கவினுடைய பள்ளி ஆசிரியை சமூக வலைத்தளத்தில் ” கவின் 29 வயதில் பெரிய கஷ்டங்களை அனுபவித்து உள்ளாய்.
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததற்கு காரணம் தன்னுடைய கடனை அடைப்பதற்கு என்று எந்த ஈகோவும் இன்றி தெரிவித்து விட்டாய்.
தற்போது உன்னுடைய குடும்பத்திற்கு ஏற்பட்டு இருக்கும் நிலை சாதாரணமாக தமிழ் நாட்டில் எல்லா நடுத்தர குடும்பத்தினருக்கும் வரும் பிரச்சனைதான். கவின் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் அது பெரிதாக பேசப்படுகிறது.
முகின் மற்றும் தர்ஷன் போல இளம் வயதிலேயே நீயும் பெரிய பெரிய கஷ்டங்களில் சந்தித்து இருக்கிறாய் ஆனால், அதை நீ வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
யார் என்ன சொன்னாலும் என்னை போன்ற தாய்மார்களின் ஆதரவு உனக்கு எப்பொழுதும் இருக்கும் வென்று வா” என பதிவிட்டு உள்ளார்.
இதனை படித்த அனைவரும் கவின் மீதான தங்களில் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் எனவும் படிக்கும் போதே கண்ணீர் வந்துவிடும் போன்ற பதிவு இது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment