சென்னை பள்ளிக்கரணை அருகே, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருப்பவர் ஜெயகோபால். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’, காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதி, சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்தில் அவரது குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.
பேனர் காலாச்சாரத்தை ஒழியுங்கள் ; அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள் அதற்கு மநீம துணை நிற்கும். பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது என பேட்டி...
நியாயமான கோபம். ஆனால் மக்களும் அதனை உள் வாங்க வேண்டும்.
ReplyDeleteநியாயமான கோபம். ஆனால் மக்களும் அதனை உள் வாங்க வேண்டும்.
ReplyDelete