விஸ்வாசம் படத்திற்கு பிறகு தீரன் பட இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் இந்தியின் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித். அஜித்துடன் இப்படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
கடந்த மாதம் துவங்கப்பட்டதாக கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அஜித்தே கலந்து கொண்டார். இதனால் படக்குழு முன்பு கூறியதுபோல மே-1ல் படம் ரிலீஸாகுமா என்று தெரியவில்லை.
ஆனால் யுவன் சமீபத்தில் படம் கண்டிப்பாக மே-1ல் வெளியாகும் என்று கூறியிருந்தார். மேலும் வினோத்தும் அந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர வேகமாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
அவரின் வேகத்தை பார்த்த அஜித், இவ்வளவு வேகம் வேண்டாம், படத்தை தரமாக வெளியிட வேண்டும். மே-1ற்காக அவசரம் காட்ட வேண்டாம். ஆகஸ்ட்-15ல் கூட படத்தை வெளியிடலாம், நிதானமாக நடந்துங்கள் என கூறிவிட்டாராம்.
Post a Comment